ஸ்ரீ ராம ஜெயத்தின் சிறப்பு..!

  • by
whats the speciality of sri rama jayam mantra

உங்கள் மனம் எளிதில் துவண்டு விடுகிறதா.? செய்யும் அனைத்து காரியங்களும் தவறாக முடிகிறதா.? எதிர்காலம் என்ற ஒன்று இல்லாமல் வாழும் வாழ்க்கை நரகமாக இருக்கிறதா.? இதுபோன்ற அவநம்பிக்கை எண்ணங்களை போக்கி, உங்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய மந்திரமே ஸ்ரீ ராம மந்திரம்.

ஸ்ரீ ராம சந்திரன்

அண்டங்கள் அனைத்தையும் கட்டி காப்பவர் ஸ்ரீ ராமநாராயணனாகிய மகாவிஷ்ணு. அண்டங்களில் எப்போதெல்லாம் அதர்மங்கள் ஆக்கிரமிக்கிறதோ அப்போதெல்லாம் மகாவிஷ்ணு ஏதாவது ஒரு அவதாரத்தை எடுத்து வந்தார். அப்படி அதர்மத்துக்கு எதிராக நிரந்தரமாக போராடக்கூடிய மனித உருவில் எடுக்கப்பட்ட மகாவிஷ்ணுவின் அவதாரம் தான் ஸ்ரீராமச்சந்திரன். இவர் அயோத்தியின் அரசர் தசரதனுக்கு மகனாகப் பிறந்தார். இது விஷ்ணுவின் 7வது அவதாரமாகும்.

மேலும் படிக்க – கேரளாவில் கண்ணகிக்குக் கோயில் எடுத்த சேர மன்னன்.!

மனிதராய் வாழ்ந்தார்

ஸ்ரீராமச்சந்திரர் அரச குடும்பத்தில் பிறந்தாலும், எல்லோரும் வணங்கக்கூடிய சக மனிதராக வாழ்ந்தார். தனக்கு எப்பேர்ப்பட்ட துன்பங்கள் வந்தாலும் தன்னுடைய கொள்கையில் மாறாமல் எப்போதும் நேர்மையாகவும், உண்மையாகவும் வாழ்ந்தார்கள். இவருக்கு நிழல் போல துணையாக நின்றவர் தான் அனுமான். ஸ்ரீ ராமனுக்காக எல்லா சேவைகளையும் சிறப்பாக செய்தவர்தான் அனுமன். இவர்கள் இருவரையும் போற்றி மதிக்கப்படும் மந்திரம்தான் ஸ்ரீ ராம மந்திரம். இதனால் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் விலகும்.

ஸ்ரீ ராம மந்திரம்

“ஸ்ரீராம ஜெய ராம் சுந்தரர் ராம்”

இந்த மந்திரத்தை வாரத்தில் எல்லா நாட்களிலும் சொல்லலாம். அதை தவிர்த்து இந்த மந்திரத்தை சனிக்கிழமைகளில் சொல்வது சிறப்புடையது. இந்த மந்திரத்தை சொல்லி ஸ்ரீ ராமரை வழிபடுவதன் மூலம் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் விலகி மனநிறைவு கிடைக்கும். சனிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு அருகிலுள்ள ஸ்ரீராமர் கோவில் அல்லது பெருமாள் கோவில்களில் உள்ள ஸ்ரீ ராமர் சன்னதிக்கு சென்று நல்லெண்ணெய் தீபமேற்றி 108 முறை அல்லது 1008 முறை இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தில் சுந்தரர் என்ற வார்த்தை ஆஞ்சநேயரை குறிப்பதினால் சனி பகவானின் கெடு பலன்கள் உங்களை விட்டு விலகும்.

மேலும் படிக்க – சிவலிங்கத்தில் இருக்கும் வகைகள்..!

இந்த மந்திரத்தை சொல்வதின் மூலமாக கிடைக்கும் அதே பலன் எழுதுவதன் மூலமாக கிடைக்கிறது. எனவே உங்களுக்கான சிறந்த வழிபடும் வழியைத் தேர்ந்தெடுத்து ஸ்ரீராமரை போற்றுங்கள். இதன் மூலமாக உங்கள் மனவலிமை அதிகரிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன