பாஸ்டீவா இருங்க பாஸ் பாத்துக்கலாம்!

லைப்ல என்ன வேணானாலும் நடக்கட்டும் எது நடந்தாலும் தில்லா கெத்தா இருங்க, பாஸ்டீவா அப்ரோச் பன்னுங்க, எண்ணங்கள் உறுதியா இருந்தா எல்லா நல்ல படியாக நடக்கும். ஒருவரை நமக்கு பிடிக்க வேண்டும் என்றால் அவரின் சிந்தனை சிறப்பாக இருந்தால் மட்டுமே இது நடக்கும். அதேபோல் ஒரு சிலரை நாம் பார்த்தவுடனேயே அவர்களை வெறுக்க தொடங்கி விடுவோம். இரண்டிற்கும் ஒற்றுமையாக ஒரு உணர்வு உள்ளது அதுதான் நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்வு. நேர்மறை சக்தி உள்ளவர்களை மக்கள் அதிகளவில் விரும்புகிறார்கள். ஆனால் எதிர்மறை சக்தி உள்ளவர்களை மக்கள் விரும்பவில்லை என்றாலும், அவர்கள் சொல்லும் கருத்தை கூர்ந்து கவனிப்பார்கள் அதைத் தவிர்த்து அவர்கள் சொன்னவற்றை காட்டு தீப்போல் மற்ற அனைவருக்கும் சொல்லுவார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நேர்மறையை விட எதிர்மறை தான் மக்கள் அதிகமாக பின் தொடர்கிறார்கள்.

ஒருவர் தன் வாழ்நாளில் அதிகமான தோல்விகளை சந்தித்தால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவர்கள் சந்தேகத்துடனே செய்வார்கள். அந்த சந்தேகத்தில் இருப்பவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளும் எதிர்மறையாகவே இருக்கும். இதை தவிர்த்து அந்த நபர் மற்றவர்களுக்கு ஏதேனும் கருத்துகளை சொல்வதாக இருந்தாலும் அது எதிர்மறையாகவே இருக்கும். இது போன்றவர்கள் தங்கள் வாழ்க்கையும் மற்றும் மற்றவர்கள் வாழ்க்கையும் சொல்லப்படும் முதல் கருத்து எதிர்மறை தான்.

எதிர்மறைக் கருத்து என்பது இக்காலத்தில் நமக்கு கிடைத்த சக்தி இல்லை. நமது முன்னோர்கள் காட்டுக்குள் வேட்டையாடி செல்லும்போது அவர்களை ஏதேனும் விலங்குகள் தாக்கி விடுமோ அல்லது உணவு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம் அவர்களுக்கு எதிர்மறை சக்தியை அதிகரித்துள்ளது. இதனால் மரபணு தொடர்ச்சியால் இவர்களின் கொள்ளுப்பேரன் மற்றும் பேத்திகளுக்கு இது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதனாலே என்னதான் நேர்மறை சக்தியை பற்றி அவர்களுக்குப் புரிய வைத்தாலும் அவர்கள் எதிர்மறை எண்ணங்களுக்கு தலை சாய் பார்கள்.

மேலும் படிக்க – நீண்ட காலமாக தலையணையை மாற்றாமல் இருப்பவரா நீங்கள்?

பிறந்த குழந்தையானது நேர்மறை சக்தியுடன் தான் பிறக்கிறது. ஆனால் நாளடைவில் அதற்கு கிடைக்கும் கசப்பான அனுபவங்களினால் எதிர்மறை எண்ணங்கள் அந்த குழந்தைக்கு தோன்றுகிறது. இதனால் காண்பது எல்லாம் பயத்துடன் காண்கிறது, முகம் தெரியாத நபர்களை கண்டு பயப்படுகிறது, என எதற்கெடுத்தாலும் எதிர்மறை சிந்தனை யுடன் அழுது கொண்டே இருக்கிறது. இதுதான் நாளடைவில் அந்த குழந்தை பெரியவர் ஆகியவுடன் இந்த உணர்வு தொடர்கிறது.

எதிர்மறை சிந்தனைகளை எதிர்ப்பதற்கு சிறந்த வழி உங்களை நீங்களே ஊக்கம் அளித்து கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் தோல்வியைக் கண்டு பயப்படாமல் அடுத்த வெற்றி எப்போது என்ற எண்ணத்திலேயே இருப்பீர்கள். அதேபோல் எதிர்மறை எண்ணங்களைக் கொண்ட நபர்களிடம் சேர்வதைத் தவிர்த்து நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களிடம் ஆலோசனை பெறுங்கள். நீங்கள் ஏதாவது ஒரு புதிய செயலை செய்வதாக இருந்தால் உங்களை சுற்றி உள்ளவர்கள் அந்த செயலை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள். உங்கள் செயலில் இருக்கும் குறைகளை கண்டுபிடித்து வெற்றி அடையாது என்று சொல்பவர்கள் எதிர்மறை சிந்தனை உடையவர்கள். அதுவே நீங்கள் செய்வதை சரியாக செய்து வெற்றியடைய வாழ்த்துபவர்கள் நேர்மறை சிந்தனை உடையவர்கள். இவர்களை பின்பற்றி உங்கள் எண்ணங்களை வலுப்படுத்துங்கள்.

மேலும் படிக்க – பூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பிடித்திருப்பது எதிர்மறை சொல்கள்தான். ஒருவரிடம் நீங்கள் மகிழ்ச்சியான ஒரு சம்பவத்தையும் வருத்தத்திற்குரிய ஒரு சம்பவத்தையும் சொல்லிப் பாருங்கள். உடனே அவர்கள் சந்திக்கும் அடுத்த நபரிடம் முதலில் வருத்தத்திற்குரிய சம்பவத்தைப் பற்றியே பேசுவார்கள். நீங்கள் மகிழ்ச்சி என்று சொல்லும் செய்திகளை அவர்கள் மறந்து விட வாய்ப்புகள் அதிகம். எதிர்மறை சிந்தனைகளில் சுவாரஸ்யம் அதிகம் என்பதினால் எல்லோரும் அதையே விரும்புகிறார்கள். இதனால்தான் நேர்மறை எண்ணங்கள் நாளடைவில் குறைந்து எதிர்மறை எண்ணங்களை தலைதூக்கி நிற்கிறது.

எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மன அழுத்தத்திற்கு தூண்டுதலாக இருக்கும். எனவே அதைத் தவிர்த்து நேர்மறை சிந்தனைகளை உங்கள் எண்ணத்திற்கும் கொண்டு வாருங்கள். புதிய செயல்களில் ஈடுபடுங்கள், மனதிற்கு பிடித்த காரியங்களைச் செய்யுங்கள், பிறருக்கு உதவி செய்து அதில் இருக்கும் ஆண்கள் பெண்கள் என உலகத்தை புதுமையாக பார்க்கத் தொடங்கினால் எப்போதும் நேர்மறை எண்ணங்கள் உங்களுக்குள் தொற்றிக் கொள்ளும். ஆரோக்கியமாக வாழ்வதற்கு எப்போதும் மகிழ்ச்சியுடன் பிறருக்கு உதவிகள் செய்து இருந்தாலே போதும் உங்கள் மனம் மற்றும் செயல் உங்கள் எண்ணங்களை அற்புதமான ஒன்றாக மாற்றிவிடும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன