நீரை நாம் ஏன் வழிபடுகிறோம், அதற்கான காரணம் என்ன..!

  • by
whats the reason for worshiping water

நீரின்றி அமையாது உலகு” என்ற வாக்கியத்திற்கு ஏற்றார் போல் நீர் இல்லை என்றால் அங்கே மனிதர்களால் வாழ முடியாது. நாம் விண்வெளி ஆராய்ச்சிகளின் மூலமாக பல்லாயிரம் கிரகங்களை பரிசோதித்தார்கள். ஆனால் எந்த கிரகத்தில் நீர் இருக்கிறதோ அங்குதான் மனிதர்களால் வாழ முடியும். இத்தகைய மதிப்பிற்குரிய நீரை அக்காலத்தில் கடவுளாக பார்த்து வந்தார்கள். இன்றும் பலரும் நதிகளை வணங்கி தங்கள் வேண்டுதலை முன்வைக்கிறார்கள்.

நீரை பின்தொடர்பவர்கள்

அக்காலத்தில் வாழ்ந்த ரோமர்கள் முதலில் இக்காலத்தில் வாழும் இந்தியர்கள் வரை எல்லோரும் நீரை கடவுளாக பார்த்து வருகிறார்கள். ஒவ்வொரு நாட்டில் ஓடும் அருவிகள் மற்றும் ஆறுகளை கடவுளாக பார்த்து அதை புண்ணிய ஸ்தலமாக மாற்றினார்கள். இன்றும் இந்தியாவில் புண்ணிய ஸ்தலங்கள் இருக்கும் இடத்தில் ஓடும் நதிகளை புனித நீராகவே பார்க்கிறார்கள்.

மேலும் படிக்க – அமைதியான மனநிலை பெற இதை தினமும் செய்யுங்கள்..!

வேறுபாடுகள் இல்லாமல்

உலக அளவில் ஏராளமான மதங்களை பின்பற்றுகிறார்கள். அதில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர்கள், ஜெயின் மதத்தை பின்பற்றுபவர்கள் என எல்லோரும் சமமாக பார்க்கப்படுவது நீர். இதை கடவுளாக மதித்து ஒவ்வொரு காலங்களில் அவரவர்களுக்கு ஏற்ற இடங்களில் நீரை கடவுளாக பார்த்து தங்கள் வேண்டுதலை முன்வைத்தார்கள். அதைத் தவிர்த்து தங்கள் பாவங்களை அனைத்தையும் நீரைக் கொண்டு போக்கலாம் என்று நம்பி வந்தார்கள்.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி திருநாளில் நிறைவு செய்த பிறகு தாங்கள் வணங்கிவந்த விநாயகரை நீரில் கரைப்பார்கள். இதுவும் அக்காலம் முதல் இக்காலம் வரை பின்தொடர்ந்து வரும் ஒரு தெய்வீக செயலாகும். எல்லோருக்கும் செய்யப்படும் மரியாதையை கடைசியில் நீரில் தான் செய்வார்கள். ஒருவர் பிறப்பது முதல் இறப்பது வரை அவர்கள் வாழ்வில் நீர் சம்பந்தப்பட்டு இருக்கும்.

காசி, ராமேஸ்வரம்

கங்கைக் கரையில் அமைந்திருக்கும் காசி புனித தலமாக இருப்பதற்கு கங்கை நீர்தான் காரணம். நீங்கள் செய்யும் அனைத்துப் பாவங்களையும் போக்கும் சக்தி கங்கை நீருக்கு உள்ளது. அதிலும் காசியை ஒட்டி செல்லும் இந்த கங்கை நீரில் பிரார்த்தனை செய்வதன் மூலமாக உங்கள் பாவங்கள் அனைத்தும் விலகும் என்று அக்காலம் முதல் இக்காலம் வரை நம்பி வருகிறார்கள்.

மேலும் படிக்க – தோட்டங்களை உருவாக்கி உங்கள் சமுதாயத்தை அழகாக்குங்கள்..!

அதேபோல் தமிழகத்தில் இருக்கும் ராமேஸ்வரத்தில் கடற்கரையை ஒட்டி இருப்பதினால் உங்கள் பாவங்கள் அனைத்தும் இந்த புனித ஸ்தலத்திற்கு சென்று போக்க முடியும். எனவே புனிதம் என்றால் அது நீர், இதை அறிந்து அக்கால மக்கள் தங்கள் வாழ்க்கையை அற்புதமாகவும், ஒழுக்கமாக வாழ்ந்து வந்தார்கள். அதை நாமும் பின்தொடர்ந்து நம் வாழ்க்கையை வாழ வேண்டும்.

உங்கள் பாவங்களை அனைத்தையும் போக்கி உங்களை ஒரு அற்புத மனிதராக உருவாக்கும் சக்தி நீருக்கு உண்டு. எனவே அதை அறிந்து நீரை மதித்து அதிகாலையில் நீராடி விட்டு சூரிய பகவானிடம் வழிபாடு செய்வதன் மூலமாக உங்களின் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன