முதுகுப் பகுதிகளில் வால் எலும்பில் வலி ஏற்படுகிறதா?

முதுகுப் பகுதிகளில் வால் எலும்பில் வலி ஏற்படுகிறதா

ஒருவர் கம்பீரமாகவும் வலிமையாகவும் காட்சியளிக்க அவர் நிற்கும் தோற்றம் மற்றும் நடக்கும் விதம் நமக்கு தெரிவித்து விடுகிறது. இப்படி நம் கம்பீரமாக இருப்பதற்கு நமது முதுகெலும்பு ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. அத்தகைய முதுகெலும்பின் பின்பகுதியில் ஒரு சிலருக்கு வலியை ஏற்படுத்துகிறது. இதற்கான காரணத்தை அறியாமல் இது சாதாரணமான வலி என்று எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

நாம் செய்யும் எல்லா வேலைக்கும் முதுகெலும்பின் பங்கு அதிகமாக இருக்கும், அதை தாங்கிப்பிடிக்கும் வலிமையை கொண்டதுதான் முதுகெலும்பின் வால்பகுதி.

மேலும் படிக்க – காலிபிளவர் கணக்கில் அடங்கா சத்துகொண்ட சைவக்காய்

உங்கள் முதுகெலும்பில் வால் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால்  அதற்கான அறிகுறிகள் உங்கள் முதுகில் மேல்பகுதியில் மேல் வலி ஏற்படும். நீங்கள் உட்காரும் பொழுது உங்களுக்கு அசௌகரியமாக இருக்கும். உங்கள் குடல் இயங்கும் பொழுது உங்களுக்கு வலி ஏற்படும் மற்றும் உடலுறவின் போது வலி மற்றும் அசௌகரியம் ஏற்படும்.

வால் எலும்பு பாதிப்பு அடைவதற்கான காரணங்கள் நாம் ஏதாவது ஒரு விபத்தில் சிக்கி இருந்தால் இது பாதிப்படைய வாய்ப்புள்ளது அல்லது அதிகமான உடற்பயிற்சி, தினமும் சைக்கிLai பயன்படுத்துவது அல்லது குதிரையின் மேல் சவாரி செய்வது ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது என நமது முதுகை பாதிப்படையும் செயல்களினால் நமது வால் பகுதி பாதிப்படைகிறது.

மேலும் படிக்க – வெற்றிலையில் இருக்கும் நாம் அறிந்திராத மருத்துவ குணங்கள்.!

பிரசவத்தின் பொழுது நமது முதுகு பகுதியில் சில எலும்புகள் நொருங்கி நமது வயிற்றில் இருக்கும் குழந்தை வெளியே வர உதவுகிறது. சில சமயங்களில் நாம் முதுகு பகுதிக்கு இருக்கும் வால் எலும்பு பாதிப்படைந்தால் உங்கள் பிரசவம் என்பது வலி நிறைந்ததாக இருக்கும்.

உங்களுக்கு அவ்வப்போது தசை பிடிக்கிறதா அல்லது நரம்புகளில் சுளுக்கு மற்றும் பிரச்சினைகள் ஏதாவது ஏற்பட்டால் உங்களுக்கு இந்த வால்வலி பிரச்சினை இருக்கிறது. இது ஒரு சிலருக்கு சில நாட்களில் குணமாகி விடும், எப்போது இது பல நாட்கள் தொடர்கிறதோ அப்போதே மருத்துவரை சந்திப்பது நல்லது.

மேலும் படிக்க – கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள்..!

உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை எளிதில் வருகிறது ஏனென்றால் எலும்புகள் எப்போதும் ஒரே அளவில் தான் இருக்கிறது ஆனால் நம் தசைகள் எப்போது அதிகரிக்கிறதோ அன்று முதல் எலும்புகளுக்கான சுமைகள் கூடுதலாக இருக்கிறது. இது போன்ற சூழல்களில் உங்கள் முதுகில் இருக்கும் வால் எலும்பு கூடுகள் சுமையால் பாதிப்படைகிறது. மிக முக்கியமான பகுதியான நமது முதுகு எலும்பில் இப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் நாம் வாழ்நாள் முழுக்க இதுபோன்ற பிரச்சினையில் இருக்க நேரிடும். வயது முதியவர்கள் மிக எளிதில் இதுபோன்ற பிரச்சினையால் பாதிப்படைகிறார்கள். எனவே நாம் அவ்வப்போது நம்மை ஆரோக்கியம் ஆக்குவதற்கு சிறு உடற்பயிற்சிகள் செய்வது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன