விந்தணு குறைபாட்டிற்க்கு வித்திடும் காரணங்களும், தீர்வுகளும்..!

  • by
whats the reason and solution less sperm count

திருமணமான மூன்று மாதத்திலேயே வீட்டில் ஏதும் விசேஷம் இல்லையா?
என்று கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த காலம்
மலையேறிவிட்டது. இன்றைய கணினி யுகத்தில் அத்தகைய பேச்சுக்கே
இடமில்லை.

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து குழந்தை பெறுவதை தள்ளிப்
போடுகிறார்கள். காரணம் கேட்டால் அடைய வேண்டிய இலக்குகளை அடைந்த
பிறகே குழந்தை பெற்றுக் கொள்வோம் என்கிறார்கள்.

முந்தைய காலங்களில் ஒவ்வொரு வீட்டிலும் சாதாரணமாக 8 குழந்தைகள்
இருந்தனர். ஆனால் இன்றோ திரும்பிய திசையெல்லாம் டெஸ்ட் டியூப் பேபி
சென்டர்கள் நிறைந்து காணப்படுகின்றன.

மேலும் படிக்க – உங்கள் உடலை ரீசார்ஜ் செய்து ஆற்றலை அதிகரிப்பது எப்படி..!

குழந்தை இல்லாத தம்பதியினரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே
வருகிறது. குழந்தையின்மை என்றாலே அதற்கு காரணம் பெண்கள் தான் என்ற
பிற்போக்கான கருத்துக்கள் இப்பொழுது அறவே மாறிவருகின்றன.

காரணம் 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ஆண்களின் விந்தணுவில் ஒரு
மில்லிக்கு 60 மில்லியன் உயிரணுக்கள் இருந்தன. இப்பொழுது வெறும்  20
மில்லியன் உயிர் அணுக்கள் மட்டும் உள்ளதோடு விந்தணுக்களின் இயக்கம்
குறைந்து வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

மாறிவரும் நவீன வாழ்க்கை முறை 

நகரமயமாதல் காரணமாக மகிழ்ச்சியை மறந்துபோய் எப்போதும் இறுக்கமாகவே
இருக்கும் மனம். மற்றும் ரசாயன கலவையான மணமூட்டிகள் என்று அதிகம்
அடித்துக் கொள்வதும், துரித உணவுகளின் அபாயங்கள் அறியாமல் அதை
அதிகளவில் உண்ணுவதும், அவற்றில் உள்ள ரசாயனங்கள் காற்று, தண்ணீர் என
அனைத்திலும் கலந்து அனைத்தையும் மாசுபடுத்துகின்றன. இவை அனைத்தும்
ஒன்றிணைந்து இயற்கையில் நிகழும் உன்னதமான கருத்தரித்தல் செயலை
செயற்கையாக சோதனைக் குழாயில் நிகழும் ஒரு செயற்கை முறையாக மாற்றி
விட்டனர்.

பாக்கெட் உணவுகள் நீண்ட நாட்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்காக வேறு
பூச்சிகள் அதில் வாழாமல் இருப்பதற்காகவும் சேர்க்கப்படும் ரசாயனங்கள் தான்
நம் உடலிலும் உற் செல்கிறது ஒரு பூச்சி கூட உயிர் வாழ்வதற்கு தகுதியற்ற உணவு எப்படி ஒரு உயிரையே உருவாக்கும் மனிதர்களுக்கு சிறந்த உணவாக
இருக்கும்.

மேலும் படிக்க – தூக்கத்தின் அவசியம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

விந்தணு குறைபாடு ஏற்பட காரணங்கள் 

நாம் சாப்பிடும் மருந்து மாத்திரைகள்

குக்கரில் பயன்படுத்தப்படும் கேஸ் கெட்

உணவுகளை சூடாக்க உதவும் மைக்ரோவேவ் ஓவன் 

நெகிழி பாத்திரங்கள் 

காரின் உட்புறம் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள்

இவை அனைத்தும் தான் நமது உடலுக்கு எதிரியாகி விடுகிறது. நெகிழியில்
கலந்து செய்யப்படும் உணவுப்பொருள்களை சூடுபடுத்தும் பொழுது அதிலிருந்து
வெளியேறும் ரசாயனம் காற்றில் கலந்து நேரடியாக நம் சுவாசத்திற்கு செல்லும்.
இதில் விந்தணுவை குறைக்கும் விஷமான பொருட்கள் அடங்கியுள்ளன. நம்
வாழ்வியல் முறையை கொஞ்சம் மாற்றி அமைத்தால் போதும் இதற்கான
தீர்வை எளிதாக காண முடியும்.

விந்தணு குறைபாட்டை நீக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

கொஞ்சம் கீரை, கொஞ்சம் பழங்கள், கொஞ்சம் மூச்சுப்பயிற்சி இவைகள்
ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும், லோகிளைசெமிக்
கொண்ட தானிய வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஹை
கிளைசிமிக் தன்மைகொண்ட பாலீஷ் போட்ட பச்சரிசி, குளூட்டன் சேர்த்த
கோதுமை மாவு இவைகள் இல்லாத உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள
வேண்டும்.

மாப்பிள்ளை சம்பா அரிசி

மாப்பிள்ளை சம்பா சோறு ஆக்கி,முருங்கைக்கீரை சாம்பார் வைத்து, பசலைக்
கீரை, பாசிப்பருப்பு கூட்டு, மாதுளை  பழச்சாறு சேர்த்து சாப்பிட்டு வந்த நம்
முன்னோர்களிடம் இம்மாதிரியான குறைபாடுகள் இருந்ததாக தெரியவில்லை.
குழந்தையின்மைக்காக நாம் இன்று பயன்படுத்தும் ஆங்கில மருந்துகளை விட
அதிஅற்புதமான மருந்துகளில் ஒன்றுதான் இந்த பூனைக்காலி விதை.

விந்தணுக்களின் எண்ணிக்கையை உடனே அதிகரிக்கும் மூலிகை

100 கிராம் அளவு பூனைக்காலி விதையுடன், 50 கிராம் ஜாதிக்காய் எடுத்து
ஜாதிக்காயை பொடி யாக வாணலியில் நெய் விட்டு நன்கு வதக்கி கொள்ளவும்.
அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள பூனைக்காலி விதையும் நசுக்கி போட்டுக்
கொள்ள வேண்டும். இதை தினமும் ஒரு சிட்டிகை அளவு இருவேளை காய்ச்சிய
பசும் பாலில் கலந்து சிறிதளவு குடித்துவந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை
உயரும். இந்தப் பூனைக் காலி விதையைப் அளவுடன் எடுத்துக் கொள்வதே
உடலுக்கு நன்மை பயக்கும்.

மேலும் படிக்க – பருப்பு வகைகளில் இருக்கும் நன்மைகள்..!

நீர்முள்ளி 

பாதிக்கப்பட்ட செல்களை கூட சீர்படுத்தும் சாதாரண நெருஞ்சில் முள் மற்றும்
வயல் வரப்பில் களையாய் வளர்ந்து நிற்கும் நீர்முள்ளி விதை இவை எல்லாம்
நம் சித்தர்கள் கண்டறிந்து சிறப்பான மருந்து பொருட்கள். 
நம் பாரம்பரிய உணவு வகைகள் அனைத்துமே உயிர்ப்புடன் வாழ்வதற்கான
உன்னத வழிகளை காட்டிவிட்டு சென்றிருக்கின்றன. அவற்றை பின்பற்றி
வளமுடன் வாழ்வோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன