ஆண்களுக்கு ஏன் அதிகமா முடி கொட்டுது? எப்படி சரி செய்வது?

what's the reason and remedy for hairfall in men

இளமையிலே இந்த ஏக்கம்! 

அவசர உலகம்,  ஃபாஸ்ட் புட் கல்ச்சர் என  எந்திர வாழ்கையில் தவித்து கிடக்கின்றோம். பலமையில் தூரத்தில் வாழ்கையானது  ஓடுகின்றது. என்னய்யா இது லைஃப், பள்ளி, கல்லூரி முடித்து பணிக்கு வந்து 3  வருடங்கள்தான் ஆகின்றது. அதற்குள் இந்த கதியா என இளைஞர்கள் இன்று கூகுள் தாயிடம்   தஞ்சம் புகுந்துள்ளனர். முப்பதை தொடவில்லையே, ஆனால் வழுகையால் முடிந்துவிடுவேனோ என அச்சம்  ஆண்களை இன்று 

வாட்டுகின்றது.  ரிமெடியினை தேடும் ஆண்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. 

முடி உதிர்தலுக்கான காரணம்: 

ஆண்கள், பெண்களுக்கு இருவருக்கும், இன்று தீராத சிக்கல் என்று ஒன்று உண்டானால் அது முடி உதிர்தல், பெண்களைவிட இன்று ஆண்கள் முடி உதிர்தல், வழுக்கை சிக்கல்களுக்கு  தீர்வு வேண்டுமென தேடுகின்றனர். 

உணவு பழக்கம், சரியான தூக்கமில்லாமல்   கணினி, வாட்ஸ் ஆப், மன அழுத்தம் போன்றவை அடிப்படை காரணமாக  சொல்லப்படுகின்றது. இதற்கான தீர்வுகளை கொடுக்க சந்தையில் நூற்றுக் கணக்கில் குறிப்புகளுடன் காஸ்மெடிக்ஸ்கள் குவிந்து காணப்படுகின்றன.  இவற்றையெல்லாம் விட எளிய குறிப்புகள் வீட்டில் இருந்து எப்படி உங்கள் தலைமுடியினை பாதுகாத்து இளமையுடன் வலம் வர நச்சுன்னு நாலு டிப்ஸ் தொடர்ந்து செய்து பாருங்கள்  உடனடி ரிசல்ட் கிடைக்கும். 

மேலும் படிக்க – மண் குளியல் செய்து சருமத்தை பாதுகாக்கலாம்

சரியான தூக்கம்,  அமர்ந்து உறங்குகள்: 

ஆழ்ந்த தூக்கம் அவசியம் வேலைப்பளு,  நட்புகளுடன் சேட்கள் ஆகிய்வற்றை குறைந்த பட்சம்  இரவு 11 மணிக்குள் முடித்துவிடுங்கள். 11 மணி முதல் 12 மணிக்குள்  படுக்கைக்கு தூங்க செல்லுங்கள், இரவு 11 மணி தூங்கச் செல்வதே அதிகம்தான் ஆனால் இன்றைய பணிச்சுமை காரணமாக இதனையாவது பின்பற்றுங்கள். தூங்கச் செல்லும் முன்  மொபைல், சிஸ்டம் ஆகியவற்றின் பயன்பாட்டை நிறுத்தி தூங்கச் செல்லுங்கள், படுக்கையில் அமர்ந்து கண்களை மூடி தூக்கம் வரும் வரை காத்திருக்கவும்.

 ஞானிகளை பார்த்துள்ளீர்களா ஏங்க, மரத்தடியில் அமர்ந்து கண்களை மூடியுள்ளனர் ஆனால் அவர்கள் முடி மட்டும் உதிராது  காரணம் என்னவெனில் அமர்ந்து தூங்கும் பொழுது உடலில் உள்ள அசதிகள் கலைகின்றன. உடல், மூளை இரண்டு உழைப்புகளுக்கும் தேவையான ஓய்வு கிடைக்கின்றது. 

இப்படி செய்து ஒரு நாளைக்கு நீங்கள் இரண்டு மணி நேரம் மட்டும் தூங்கினால் போதும்,  அமர்ந்து இருக்கும் பொழுது உடல் தளர்வு அடையும், அமர்ந்த நிலையில் தூக்கம் உங்களை ஒரு ஆட்டு ஆட்டும் அப்பொழுது படுத்தால் காலையில் நீங்கள் எழும் பொழுது உற்சாகம் மற்றும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். தேவையற்ற அழுத்தங்கள் குறைந்து உடல் சக்தி பெறும், முடி உதிர்வு குறையும். இதனை தொடர்ந்து தினமும் முயற்சி செய்யுங்கள். 

நைட் சிப்ட் ஆண்களும் இதனை காலையில் நீங்கள்  தூங்கப் போகும் முன் அமர்ந்த நிலையில் தூங்குங்க, படுக்கும் முன்பு உக்காந்து நிலையில் 1 மணி நேரம் அமர்ந்தால் உடல் தானாக ஒரு ஜர்க் ஆகும், அப்பொழுது படுங்கள், இதன் மூலம் நாள் முழுவதும்  உற்சாகம் பொங்க செயல்படுவீங்க .

மேலும் படிக்க – சப்சஜா விதைகளின் பயன்கள்..!

ஆரோக்கிய உணவு:

தலைமுடி பிரச்சனைகள் தீர்க்க எளிய வழி ஒன்று உண்டு  எனில் உடலில் ஆரோக்கியம் இருக்க வேண்டும். குறைந்த் பட்சம் வெளியில்  உணவு சாப்பிடுவதை குறைக்கவும். தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றில் வாரம் இரு முறை சமைத்து உண்ணவும். ரீபைண்டு ஆயில்களின்  பயன்பாட்டை குறைக்கவும். ஜங்க் புட்கள் அடியோடு நிறுத்துங்கள். சின்ன வெங்காயம் விலை அதிகம்தான் ஆனால் தாளிப்புகளில் அதனைப் பயன்படுத்தி வீட்டில் சமைக்க அறிவுறுத்துங்கள் அதன் மூலம் உடலில் ஆரோக்கியம் தேவைப்படும் சத்துகள் கிடைக்கும். பழங்கள், காய்கள் நாட்டுக்காய்களாக இருக்க வேண்டும். 

செக்கில் அரைத்த் எண்ணெய்: 

தினமும் தலையில் செக்கில் ஆட்டிய  எண்ணெய்களை தலையில் தேய்தால் போதுமானது. செக்கில் ஆட்டிய எண்ணெய்கள் சூடு இல்லாமல் பயன்பாட்டிற்கு எளிதாக இருக்கும்.   முடி வேர்க்கால்களை வலிமையாக்கும். உங்களுக்கு 3 கலப்பு எண்ணெய்கள் பயன்பாட்டை விளக்கியுள்ளேன். 

தேங்காய் எண்ணெய் 3 பங்கு, விளக்கெணெய் 1 பங்கு, எள்ளெண்ணெய் 1 பங்கு ஆகியவற்றை ஒன்றாக கலந்து  அடுப்பில் அடி கனமான இரும்பு சட்டியில் ஊற்றி காய்ச்சி நுறைகட்டி வரும் பொழுது அதனை இறக்கி அதனை தினமும் முறையாக தூங்கும் முன் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் போதுமானது. முடிவுதிர்வு குறையும். இள நரையும் மறையும். தலையில்  பொடுகு பிரச்சனையால் அவதிப்படுவோர்கள் 3 கலப்பு எண்ணெய்களுடன் 1 பங்கு வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி இரவில் படுக்கும் முன் தலையில் தேய்து காலையில் குளித்துவர மாற்றம் எளிதில் வரும் . 

மேலும் படிக்க – பசலை கீரையில் பலவித நன்மைகள் உண்டு..!

வீட்டு பொருட்கள்: 

 தலை முடி உதிர்வு தவிர்க்க மற்றும் இள நரை வராமல் இருக்க  தேவைப்படும் பொருட்கள் வீட்டு வாசலில் வளர்க்கும் செடிகள் போதும். உங்கள் வீட்டில் செடிகள் இல்லையா நிச்சயம் உங்கள் பக்கத்து வீடு, தெருவிலாவது இருக்கும், தேடுங்கள் கிடைக்கும் செம்பருத்தி பூ, இலை கைப்பிடி , மருதாணி இலைகள், துளசி இலைகள்,   கற்றாலை ஜெல் ஆகியவற்றை 100 கிராம் வீதம், மலை நெல்லி 5 காய்கள், சின்ன வெங்காயம் 100 கிராம் எடுத்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எனப்படும் விளக்கெண்ணெய், எள் எண்ணெய் ஆகியவற்றை தேவையான அளவு வாணலியில் ஊற்றி,  அரைத்த விழுதை அதனுள் சேர்த்து, வெந்தயத்தை ஒரு பிடியும் போட்டு, ஆயிலை நன்றாக மிதமான அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். ஆயில் மூன்றும் சேர்த்து 1 லிட்டர் எனில் அவை கொதித்து முக்கால் லிட்டராக குறைந்து வரும். விழுதுகள் எண்ணெயில் நன்றாக வெந்து வரும். பச்சை  நிறம் மாறிவரும். நுறை குறைந்து நன்றாக சுண்டிவரும் அந்த எண்ணெயினை வாரம் 3 நாடகள் தலையில் வைத்து தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்து வந்தால் போதுமானது ஆகும். இளநரை, பொடுகு, வழுக்கை ஆகிய பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். 

மேற்கூறிய எளிய குறிப்புகளை ஒருமாதம் பின்ப்ற்றுங்கள்  மாற்றங்கள் விரைவில் காணலாம். மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன