பெண்கள் அணியும் பிகினியின் வரலாறு.!

whats the history behind bikini and who wore it first

தமிழகத்தில் கலாச்சார சீரழிவு காரணமாக இருப்பது பிகினி என்று கோஷங்கள் எழுப்பவர்களுக்கு மத்தியில் இந்த பிக்னிக்கு என்ற தனி தினம் வைது கொண்டாடுகிறார்கள். இது மட்டுமல்லாமல் இதற்கான மிகப்பெரிய வரலாறு உள்ளது. கைகுட்டை அளவு இருக்கும் துணியால் செய்யப்படும் இந்த பிகினியை இப்போது சர்வ சாதரணமாக சினிமாக்களில் நடிகைகள் போட்டுக் கொண்டு வலம் வருகிறார்கள். இப்படிப்பட்ட பிகினிக்கு பின்னால் இருக்கும் வரலாற்றைப் பற்றிய பதிவு இது.

பண்டைய காலத்து ரோமானியர்கள் ஜிம்னாஸ்டிக் போன்ற சாகசங்களை செய்வதற்காக பிகினியை அணிந்து இருந்தார்கள் ஆனால் அப்போது இதற்கு பிகினி என்ற பெயர் இல்லை அதன்பிறகு நான்காம் நூற்றாண்டில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறுவதற்காக பெண்கள் அணியும் ஆடைகளில் பிகினியை சேர்க்கப்பட்டார்கள். அக்காலகட்டங்களில் நீச்சல் போட்டிகள் எதுவும் இல்லாததால் பிகினி அணிவதற்கான காரணம் அவர்களுக்குத் தேவைப் படவில்லை.

மேலும் படிக்க – சார்கோல் பேஸ்பேக்கில் இருக்கு சருமத்தின் பளபளப்பு!

பிகினியில் முதல் முதலில் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஆடையை வடிவமைத்தார்கள். இதை விளம்பரப்படுத்துவதற்காக அவர்கள் காலகட்டத்தில் செய்திகள் வரும் தாளில் இந்த ஆடையை தயார் செய்திருந்தார்கள். இதை உருவாக்கிய நாள் ஜூலை 5, 1946. இந்த நாளை இன்று முதல் பிகினி நாள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

பிகினி வந்த பிறகு இது கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளது அது மட்டுமல்லாமல் தொப்புள் மற்றும் உடம்பில் அதிகப்படியான பகுதியில் தெரிவதினால் இதை எதிர்த்து இத்தாலி ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் தடை செய்தார்கள். 1950ஆம் வருடம் அழகிப் போட்டிகளில் பிகினி ஆடைகளை அணிந்திருந்தார்கள். இதனால் பிரெஞ்சு நாட்டில் மட்டும் பிகினி உடைக்கு தடை விதிக்கவில்லை.

தி கேர்ள் இன் தி பிகினி என்றபிரெஞ்சு திரைப்படத்தில் முன்னணி நடிகை பிகினி ஆடையை அணிந்து நடித்திருந்தார் இதனால் 1960களில் அமெரிக்கா போன்ற நாடுகளில் பிகினி காண தடையை நீக்கப்பட்டார்கள்.

மேலும் படிக்க – இதழ்களுக்கு அழகு இந்த லிக்வ்யூடு லிப்ஸ்டிக் டிரெண்டிங்

பின்பு படிப்படியாக பிகினி உலகம் முழுக்கப் பரவ தொடங்கியது ஒரு காலத்தில் கடற்கரைக்கு செல்வதாக இருந்தால் மிகவும் அடர்த்தியான ஆடைகளை அணிந்து சென்று இருந்தார்கள் ஆனால் இன்று இந்த பிகினி வந்த பிறகு மிகவும் உல்லாசமாக இவர்கள் கடற்கரை நாட்களை கழிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இப்போது எல்லா திரைப்படங்களிலும் ஏதாவது ஒரு பிகினி காட்சியை வைத்து ரசிகர்களை குதுகல படுத்துகிறார்கள்.

இப்பொழுது பிகினி பலவிதமான விளையாட்டுகளில் முன்னணி ஆடையாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் நீச்சல், பீச் வாலிபால் ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுகளுக்கு பிகினியின் பங்கு அதிகம் இப்படிப்பட்ட பிகினி இக்காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன