நம் வாழ்க்கையின் குறிக்கோள்கள் என்ன..!

  • by
whats the goal of our life

மனிதர்களாக ஒவ்வொரு நிமிடமும் பலபேர் பிறக்கிறார்கள், அவர்கள் ஏன் பிறக்கிறார்கள், அவர்களின் பிறப்பிற்கான நோக்கம் என்ன என்பதை நாம் வாழ்ந்து முடிக்கும் தருவாயில் உணர்கிறோம். இதனால் நாம் வாழும் ஒவ்வொரு காலமும் அர்த்தம் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். எனவே நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோளை அறிந்து அதற்கேற்ப வாழ்வதே சிறந்த வாழ்க்கை.

அன்பிற்கான குறிக்கோள்

நாம் வாழும் ஒரே வாழ்க்கையில் அதிக அளவிலான அன்பு நிறைந்ததாக பார்த்துக் கொள்ளுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களை வெறுக்காமல் எல்லோரையும் அரவணைத்து அன்பாக வாழுங்கள். உங்கள் அன்பு சுயநலமாக இல்லாமல், பொது நலமாக இருக்க வேண்டும். அதாவது நண்பர்கள் உறவினர்கள் மற்றும் காதலன், காதலிகளைத் தவிர்த்து முன்பின் தெரியாதவர்களின் மேல் கூட அன்பு வையுங்கள். இதன் மூலமாக சகோதரத்துவம் உண்டாக்கி நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

மேலும் படிக்க – அவசர வாழ்க்கையை தடுப்பதற்கான வழிகள்..!

எதிர்கால குறிக்கோள்

நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்பதை உணருங்கள். நம்முடைய குறிக்கோள் ஒவ்வொரு ஆண்டுக்கும் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் இறுதியில் உங்கள் நோக்கம் எதுவென்று நீங்கள் முடிவெடுப்பீர்கள். எனவே அந்த முடிவை நோக்கி பயணம் செய்யுங்கள். உங்கள் குறிக்கோள் எதுவாக இருந்தாலும் அதற்கான வேலைகளை துவங்குங்கள். இதனால் நீங்கள் பல விஷயங்களை இழக்கலாம் ஆனால் உங்கள் மனத்திற்குப் பிடித்த செயலை செய்கிறோம் என்ற திருப்தியில் வாழங்கள்.

வளைந்து கொடுங்கள்

மற்றவர்களுக்காக எப்போதும் வளைந்து கொடுக்க முயற்சி செய்யுங்கள். ஒரு வாழ்க்கையை முழுக்க முழுக்க உங்களுக்காக வாழாமல் உங்கள் சுத்தி உள்ளவர்களுக்காக அவ்வப்போது வாழ்ந்து கொள்ளுங்கள். சில சமயங்களில் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி அவர்களை சந்தோஷப்படுங்கள். எதற்கும் வளைந்து கொடுக்காமல் சுயநலமாக வாழ்வதை தவிர்த்து எல்லோரின் மகிழ்ச்சியிலும் பங்கு கொள்ளுங்கள்.

செய்யும் செயலை எழுதுங்கள்

ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் செயலை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இதை எப்போது மற்றவர்களும் படிக்கலாம் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றுகிறதோ அன்றுதான் நீங்கள் ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்ற அர்த்தம். உங்கள் வாழ்க்கை அனுபவங்களை மற்றவர்களுக்கு சொல்வதன் மூலமாக அவர்கள் வாழ்க்கை மேம்பட்டால் அதுதான் சிறந்த வாழ்க்கை. முதுமை நிலையை அடைந்து பின்பு உங்கள் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் அது திருப்திகரமாக இருக்கும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றினால் அந்த வாழ்க்கையை தொடர்ந்து வாழுங்கள்.

மேலும் படிக்க – வாழ்ந்து பாருங்கள் வானம் உங்கள் வசம் வரும்

எல்லோருக்கும் உதவுங்கள்

ஒவ்வொரு சூழ்நிலையையும், ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு உதவி தேவை பட்டுக்கொண்டே இருக்கும். எனவே மற்றவர்களின் மோசமான சூழ்நிலைகளில் உங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்யுங்கள். முடியவில்லை என்றால் அவர்களுக்கு ஏதேனும் யோசனையை அளியுங்கள். நாம் உண்டு நம் வாழ்க்கை உண்டு என்று இல்லாமல் எல்லோருக்கும் உதவியாக வாழ்ந்து முன் உதாரணமாக இருங்கள்.

நம்முடைய குறிக்கோள் ஒவ்வொன்றும் நம்மையும், மற்றவரையும் மகிழ்ச்சி படுத்துவதாக இருக்கவேண்டும். அதை தவிர்த்து ஒருவர் மேலேறி முன்னேறுவதை கைவிட்டு உங்களுக்கென ஒரு தனி பாதையை உருவாக்கி வீறுநடை போட்டு வெற்றியை நோக்கி செல்லுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன