பர்ஃப்யூம் மற்றும் டியோடரன்ட், கொண்டிருக்கும் வித்தியாசங்கள்

what's the difference between a perfume and a deo

பர்ஃப்யூம் மற்றும் டியோடரன்ட். இந்த இரண்டும் ஒன்றுதான் என்று பெரும்பாலான மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் உண்மையில் இரண்டிற்கும் இடையே ஏகப்பட்ட வேறுபாடுகள் உள்ளன. இது மட்டுமில்லாமல் நம் உடலுக்கு எது சிறந்தது எது தேவை என்று இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை தான் தேர்வு செய்கிறோம் அதன் தாக்கம் மற்றும் அதில் இருக்கும் வித்தியாசங்களை இதில் பார்ப்போம்.

டியோடரன்ட் என்பது நம் சருமத்தின் மேல் உபயோகப்படுத்தும் திரவியம். இது நம் உடலில் ஏற்படும் வேர்களில் நறுமணம் வெளிவராமல் நம் பயன்படுத்தும் டியோடரன்ட்ன்  நறுமணத்தையே வெளியிடும்.

பர்ஃப்யூம் நம் போடப்படும் மேல் ஆடைகளில் மேல் அடித்தால் போதும் இதன் நறுமணம் டியோடரன்டை விட அதிகமாகவே இருக்கும்.

டியோட்ரெண்டில் எண்ணெய்கள் மற்றும் ஆல்கஹால் குறைவாக இருக்கும்

அதுவே பர்ஃப்யூமில் ஆல்கஹால் அதன் நறுமணத்திற்கு ஏற்றார்போல் அதிகரிக்கும் பின்பு இதில் சேர்க்கப்படும் எண்ணெய்களும் பர்ஃப்யூமை காட்டிலும் கூடுதலாக இருக்கும்.

மேலும் படிக்க – அழகுசாதன பொருட்களால் ஏற்படும் ஆபத்துகள் !!!

டியோடரன்ட் எல்லா நாட்களிலும் பயன்படுத்துவார்கள் ஆனால் பர்ஃப்யூம் ஏதாவது கொண்டாட்டங்கள் அல்லது திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்றால் மட்டுமே பயன்படுத்துவார்கள்.

டியோடரன்ட் பலவிதமாக உற்பத்தி செய்வார்கள். அதை ஸ்பெரே மூலமாகவும் பயன்படுத்தலாம்,  ஜெல் வடிவில் பயன்படுத்துவார்கள், இல்லையெனில் தைலம் போல் பயன்படுத்தலாம்.

ஆனால் பர்ஃப்யூமை நாம் ஸ்பெரே மூலமாக மட்டுமே பயன்படுத்த முடியும்.

நம் உடம்பில் எங்கெல்லாம் வேர்வை வெளியேறுகிறதோ அங்கு மட்டும்தான் நாம் டியோடரன்ட் பயன்படுத்துவோம்.

பர்ஃப்யூமை நாம் கழுத்துப் பகுதி, மணிக்கட்டு, நம் காதின் பின்பக்கம் அடித்துக் கொள்வார்கள் இல்லையெனில் நாம் அணியும் ஆடைகளில் மேல் இதை பயன்படுத்துவார்கள்.

டியோடரன்டின் விலை எப்போதும் குறைவாகவே இருக்கும் ஆனால் பர்ஃப்யூம் டியோடரன்டுடன் ஒப்பிடுகையில் சற்று விலை கூடுதலாகவே இருக்கும்.

டியோடரண்டை நாம் தேவைப்படும் போதெல்லாம் தடவ வேண்டும் எப்போது நம் மேல் நறுமணம் குறைய ஆரம்பிக்கிறதோ அப்போது இதை பயன்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க – பூங்ககாய் எனும் பூந்திக்காயின் தூய்மை பயன்கள்

பர்ஃப்யூமை அப்படி பயன்படுத்த தேவையில்லை, காலை ஒரு முறை அதை நம் உடம்பில் மேல் போட்டால் போதும் இரவு வரை அந்த நறுமணம் நம் மேல் வீசிக்கொண்டே இருக்கும்.

இப்போது இருக்கும் சந்தை வியாபாரத்தில் டியோடரன்ட் காட்டிலும் பர்ஃப்யூம் தான் அதிகளவில் விற்பனையாகிறது. இதற்கான காரணம் என்னவென்று நீங்கள் அறிந்திருப்பீர்கள் நம் உடலுக்கும், தோற்றத்திற்கும் எந்தவிதமான வாசனைதிரவியம் தேவை என்பதை இப்போது நீங்கள் முடிவெடுத்து இருப்பீர்கள் அதற்கு ஏற்றார்போல் வாங்கி பயன் பெறுவீர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன