இதுதான் உண்மையான நட்பு..!

  • by
whats the characteristics of true friendship

உண்மையான நட்பு என்பதை நாம் அதிகமாக திரைப்படங்களில் பார்த்திருப்போம் தளபதி, நாடோடிகள், உள்ளம் கேட்குமே, நண்பன், என்றென்றும் புன்னகை போன்ற படங்கள் நட்பு என்றால் என்ன என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறது. ஆனால் இது அனைத்தும் நம் நட்புக்கான உணர்வை அதிகப்படுத்துவதே தவிர நம்மால் இதுபோல் உண்மையான நண்பர்களாக இருக்க முடியுமா.? இல்லை நம்மில் யாராவது இவ்வளவு அதிக நட்பை கொண்டிருக்க முடியுமா.? என்பதை சிந்தித்துப் பாருங்கள். உண்மையான நட்பு என்றால் உண்மையில் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

எப்போதும் ஊக்கப் படுத்துவார்

உண்மையான நண்பர்களை நாம் எளிதில் கண்டுபிடித்து விடலாம். எப்போது ஒருவர் உங்களில் எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா நேரங்களிலும் உங்களை ஊக்கப் படுத்துகிறார்களே அவர்தான் உண்மையான நண்பர்கள். அதாவது ஏதேனும் நிகழ்ச்சிகளில் நடனம் ஆடும்போது, புதிதாக வேலைக்கு செல்லும் போது, ஏதேனும் தோல்வியில் இருந்து மீண்டு வரும்போது உங்களை ஊக்கவிப்பார்.

மேலும் படிக்க – இமைகளை நோக்கி இதயத்திலிருந்து சொல்லவும் காதலை

உங்கள் குணங்களை பொறுத்து அவர்களின் நட்பு இருக்காது

பொதுவாக காதலுக்கு கண்ணில்லை என்பார்கள் அதேபோல நட்புக்கும் கண்ணில்லாமல் இருந்தால்தான் அது உண்மையான நட்பு. நீங்கள் செய்யும் எந்த காரியமாக இருந்தாலும் உங்கள் துணையாக நின்று அதை செய்து முடிப்பார்கள். சில சமயங்களில் அது தீய காரியமாக இருந்தாலும் அதை செய்து உங்களை அதில் இருந்து விடுவிக்க முயற்சி செய்வார்கள்.

உடனடியாக மன்னித்து விடுவார்கள்

பொதுவாக உண்மையான நண்பர்களுக்குள் சண்டை மற்றும் வாக்குவாதம் அதிகமாக இருக்காது. அப்படியே இருந்தாலும் அதை விளையாட்டுத்தனமாக முடிந்து விடும். ஆனால் ஒரு சில சண்டைகள் அதிகமாக ஏற்படும் போது அதற்கான மன்னிப்புகளை உடனே ஒருவருக்கொருவர் பகிர்ந்த கொள்வார்கள். இதுதான் உண்மையான நட்புக்கான உதாரணம்.

மேலும் படிக்க – காதலர் தினத்தில் கலக்கலான திட்டங்களோட ஜமாயுங்க!

எப்போதும் உங்கள் பின்னால் இருப்பார்கள்

எந்தக் காரியமாக இருந்தாலும் இவர்கள் எப்போதும் உங்கள் பின்னால் இருப்பார்கள். அதாவது வீட்டு விசேஷங்கள் அல்லது வீட்டில் நடக்கும் துன்பங்கள், கஷ்டங்கள், சந்தோஷங்கள் என எல்லாக் காலங்களிலும் உங்களுடன் துணையாக நிற்பார்கள்.

எப்போதும் தொடர்பில் இருப்பார்கள்

உண்மையான நண்பர்கள் எப்போதும் உங்களுடன் தொடர்பில் இருப்பார்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள், எங்கே இருக்கிறீர்கள் என எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வார்கள். உங்களுக்கு பிடித்தது எது என்று உணர்ந்து அதற்கான வழிகளையும் ஏற்பாடு செய்வார்கள். அதை தவிர்த்து அதை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டார்கள்.

மேலும் படிக்க – அவசர காதல் பேச்சுகள் ஆறா வடுக்களாகும்

உங்கள் ரகசியங்களை பாதுகாப்பார்கள்

உங்களுக்கான நேரங்களை கொடுத்து, நீங்கள் அன்று முழுவதும் சந்தோஷப்படும் போதும் அவர்களின் தோல்களை கொடுப்பார்கள். இதை தவிர்த்து உங்களின் எல்லா ரகசியங்களையும் தங்கள் ரகசியங்களை போல் பாதுகாப்பார்கள். இது நண்பர்களுக்கான உலகம், இதற்குள் வேறு யாருக்கும் அனுமதி கிடையாது என்பது போல் நேர்மறையாக வாழ்வார்கள்.

நண்பர்களுக்குள் சீண்டல்கள், கிண்டல்கள், சண்டைகள், சேட்டைகள் இருக்கும் ஆனால் வேறுதல் என்பது ஒருபோதும் இருக்காது. அது தான் உண்மையான நட்பாகும். ஏதேனும் சிறிய காரியங்களுக்கு கூட சண்டை வந்தால் அது உடனடியாக மன்னிப்பில் முடிய வேண்டும் தவிர பிரிவில் முடிந்தால் அது உண்மையான நட்பாக இருக்க முடியாது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன