அப்படி என்னதன் சூரரைப் போற்றில் இருக்குது..!

what's special in soorarai pottru movie

இயக்குனர் சுதா பிரசாத் இயக்கும் மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் சூரரை போற்று. இந்தப் படம் ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி சொல்லும் படம். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் நடிக்கிறார். சாதாரணமாக எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் மிகப்பெரிய அளவில் மெனக்கெட்டு நடிக்கும் தன்மை கொண்டவர் சூர்யா. இவர் ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி முழுமையாக ஆராய்ந்து அவரைப் போலவே தனது நடை, உடை, பாவனைகளை கொண்டு நடித்திருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஜி ஆர் கோபிநாத் அவர்கள் இந்திய ராணுவத்தில் பயின்று தனது 28 வது வயதில் வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் இறங்கினார். அதைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் தயாரிக்கும் கம்பெனியை தனது நண்பர்களுடன் இணைந்து தொடங்கினார். அதன் வெற்றியை தொடங்கி ஏர் டெக்கான் என்ற விமான சேவையை உருவாக்கினார். மற்ற விமான சேவைகள் கொடுக்க முடியாத அளவிற்கு மிகக் குறைந்த விலையில் டிக்கெட்டுகளை கொடுத்து இந்த விமான சேவையை உருவாக்கினார். அதே சமயத்தில் சிறு நகரங்கள் அனைத்திற்கும் தனது விமான சேவையை தொடங்கினார். இதனால் மிகப்பெரிய வெற்றியடைந்து வருடத்திற்கு ஒரு புதிய விமானம் வாங்கும் அளவிற்கு உயர்ந்தார். ஆனால் இவரின் வளர்ச்சியை கண்டு பயந்த ஜெட் ஏர்வேஸ் இவர் விடும் பாதைகளில் தங்களது விமானத்தையும், விமான சேவைகளையும் தொடங்கினார்கள். அதுமட்டுமல்லாமல் இவரை விட மிகக் குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகளை விற்றார்கள். இதனால் இவரின் தொழில் பெரிதாக பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க – யோகிபாபு-வின் வாழ்க்கை வரலாறு..!

நஷ்டத்தில் சென்ற ஏர் டெக்கானை, கிங்பிஷர் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா தங்களுடன் இணையுமாறு கேட்டுக்கொண்டார். இதை நம்பி கோபிநாத் அவர்களும் இணைந்தார். சில வருடங்கள் கழிந்த பிறகு விஜய் மல்லையா கோபிநாத்தை தன் நிறுவனத்தை விட்டு விலக்கினார். இதனால் கோபிநாத் நம்பிக்கை துரோகத்தினால் அவர் உருவாக்கிய நிறுவனத்தை விட்டு வெளியேறி மீண்டும் தான் தொடங்கிய எலிகாப்டர் நிறுவனத்தில் கவனத்தைச் செலுத்தினார். அதைத் தொடர்ந்து சில முயற்சிகள் எடுத்து பலனளிக்காததினால் விமான சேவைகளில் இருந்து முற்றிலுமாக விளங்கினார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து விமானத்துறை உருவாக்கும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றி அடைந்த கோபிநாத் அவர்கள் நம்பிக்கை துரோகத்தின் மூலமாக விழுந்தார். இவரின் வாழ்க்கையை பற்றி பலருக்கும் தெரியாத சமயத்தில் சூரரைப்போற்று என்ற படத்தின் மூலமாக இவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள் இயக்குனர் சுதா பிரசாத் மற்றும் நடிகர் சூர்யா அவர்கள்.

நாம் பொதுவாக வெற்றி பெற்ற நபர்களை பற்றி தான் பேசுவோம். ஆனால் அந்த நபர் வெற்றி பெற்று தோல்வி அடைந்து இருந்தால் காலப்போக்கில் அவரை மறப்பது தான் மனித இயல்பு. இன்றுவரை, மிகப்பெரிய தொழிலதிபர் என்று சொல்லும்போது நம் மனதிற்கு தோன்றுவது அம்பானியின் குடும்பத்தினர்தான். அவர்களைத் தொடர்ந்து டாட்டா, பிர்லா என ஒரு சிலரைப் பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால் தென்னிந்தியாவில் அதுவும் கர்நாடகாவில் பிறந்த ஒரு விவசாயின் மகன் இவ்வளவு உயரத்திற்கு சென்றுள்ளார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மேலும் படிக்க – மனசுகுள்ள இருந்து பேசுவதுதான் சேரன்..!

கோபிநாத் மற்றும் அவரின் வாழ்க்கையில் நடந்த ஏராளமான சம்பவங்கள் நம்மை ஊக்குவிக்கும் அளவிற்கு இருக்கும் என்ற எண்ணத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. படம் 90களில் நடக்க இருப்பதினால் நம்மை காலத்தை பின்னோக்கி செல்ல இந்த படம் உதவியாக இருக்கும்.

சூர்யாவின் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம். தன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்துக் கொடுக்கும் நடிகர்களில் சூர்யாவும் மிக முக்கியமானவர். சூரரைப்போற்று திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான சில நாட்களிலேயே பலகோடி ரசிகர்களால் பார்க்கப்பட்டு, பாராட்டப் பட்டுள்ளது. எனவே இந்த படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு என்று சொல்லலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன