பலிபீடம் என்றால் என்ன அதை எதற்கு பயன்படுத்தினார்கள்..!

  • by
பலிபீடம்

பலி பீடம் என்ற உடனே எல்லோர் மனதிலும் ஒரு விதமான பீதி உணர்வு ஏற்படும். ஏனென்றால் பலி பீடம் என்பது பலி இடமாகும், அதாவது உயிரினங்களை பலியாகச் செலுத்தக்கூடிய இடங்கள். இதை அக்காலம் முதல் இக்காலம் வரை ஒவ்வொரு விதமான மக்கள் அவர்கள் கலாச்சாரத்திற்கு ஏற்றார்போல் பலிகளை செய்து வருகிறார்கள். ஆனால் அக்காலத்தில் பலி செய்வதற்காகவே இருக்கும் இடத்தைத் தான் பலி இடம் என்றார்கள். அது உருவாகிய காரணம் மற்றும் அதன் தொடர்ச்சியை இந்த பதிவில் காணலாம்.

பலிபீடம் வரலாறு

பலிபீடம் என்பது சமய காலங்களில் பலிகளை காணிக்கையாக கொடுக்கும் இடமாகும். கோவில்களில், தேவாலயங்களில் மற்றும் புனிதத் தலங்களில் பலி பீடம் என்ற இடங்களை அமைத்து வந்தார்கள். இன்றும் இந்து, கிறிஸ்துவம், பவுத்தமும் போன்றவற்றில் பலிகளை செய்கிறார்கள்.

மேலும் படிக்க – பதின்பருவத்தில் இருப்பவர்களை ஊக்கப்படுத்துவது எப்படி..!

கடவுளுக்கு பலி செலுத்துதல்

கடவுளுக்கு பலி செலுத்துதல் என்பது பண்டைய காலம் முதலிய எல்லா நாடுகளிலும் இருந்து வந்தது. ஆரம்ப காலத்தில் மனிதர்களை பலியாக கொடுத்துவந்த கொடியை மக்கள், நாளடைவில் கடவுள்களுக்கு விலங்குகளை பலியாக கொடுத்தனர். அந்த வழிமுறைகள் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

நரபலி செய்தல்

அக்காலங்களில் மூடநம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படும் வழிதான் நரபலி. இதை செய்வதன் மூலமாக அவர்கள் பலவிதமான ஆற்றலை மற்றும் மனித சக்திகளை பெறலாம் என்று எண்ணிக்கொண்டு மனிதர்களை கொன்று குவித்தனர். ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து மனிதர்களை அழிக்கும் மிருகங்களையும் அழித்தனர்.

மேலும் படிக்க – ஹோலி பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியது!

இன்றும் பலிகள் நடக்கிறது

இந்து மற்றும் கிறிஸ்தவத்தில் இன்றும் பலிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த மதங்களை பின்தொடரும் பக்தர்கள் கோவிலுக்கு சென்று ஏதேனும் வேண்டுதலை முன்வைக்கிறார்கள். அதற்கு காணிக்கையாக பலிகளை கொடுக்கிறார்கள்.

பலி பீடம் என்பது பல்லாயிரக்கணக்கான உயிரை மற்றவரின் சுயநலத்திற்காக அளித்த இடமாகும். எனவே அந்த இடத்தை காணப் போகிறது என்று அது ஒரு காட்சி பொருளாக மாறி உள்ளது. ஆனாலும் இன்றும் பல இடங்களில் விலங்குகளை பலி கொடுத்து தங்களின் சுயநலத்தை வெளிகாட்டுகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன