உங்கள் வீட்டில் நீங்கள் செய்ய வேண்டிய கடமை..!

  • by
what you should in your home during this lockdown

கொரோனா வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் பரவாமல் இருப்பதற்காக ஏப்ரல் 15ம் தேதி வரை நாம் முழு அடைப்பில் வீட்டிற்குள் இருக்கவேண்டும் என்று நம்முடைய அரசாங்கம் நமக்கு கட்டளை இட்டுள்ளது. இதைப் பின்தொடர்ந்து பொறுமையுடன், பொறுப்புடன் வீட்டில் இருந்து தங்கள் குடும்பத்தை எவ்வாறு பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதை காணலாம்.

உங்கள் கடமை என்ன

வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒருவிதமான பொறுப்பு இருக்கிறது, அதை அறிந்து உங்கள் வீட்டில் உங்கள் கடமை என்ன என்று நினைத்துப் பாருங்கள். நீங்கள் குடும்பத் தலைவராக இருந்தால் உங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியுடன் மற்றும் யாரையும் வெளியே அனுப்பாமல் பொறுப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும். அதை தவிர்த்து இதற்கான காரணம் மற்றும் அறிவையும் அவர்களுக்கு வளர்க்க வேண்டும்.

மேலும் படிக்க – கரிசலாங்கண்ணியில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

குடும்பத் தலைவி

குடும்பத்தின் தலைவியாக இருந்தால் உங்கள் கணவனையும், குழந்தைகளையும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். அதை தவிர்த்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும், உணவுகளையும் செய்து அவர்களை எப்போதும் புத்துணர்ச்சியாக வைக்கும் பொறுப்பு குடும்பத் தலைவிக்கு உண்டு.

இளைஞர்கள்

இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு இளைஞனும் தனக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கிறது என்பதை உங்கள் குடும்பத்திற்கு உணர்த்த வேண்டும். கொரோனா வைரஸ் எந்த வகையை சேர்ந்தது, அதனால் ஏற்படும் பாதிப்புகள், அதைத் தடுப்பதற்கான வழிகள் போன்ற அனைத்தையும் இளைஞர்களே உங்கள் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு கூற வேண்டும். இதை தவிர்த்து பொறுப்புடன் யாரையும் வெளியே அனுப்பாமல் எல்லாவற்றையும் மிகப் பாதுகாப்பான முறையில் அத்தியாவசிய  பொருட்களை வீட்டிற்கு வாங்கி வரும் பொறுப்புகள் இளைஞர்களுக்கு உண்டு.

மேலும் படிக்க – நெல்லிக்காய் மற்றும் திருபல பொடியை சாப்பிட்டு நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்..!

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்

வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு என்று தனியாக நேரத்தை ஒதுக்குங்கள். அவர்களுடன் விளையாடுவது, உரையாடுவது போன்றவற்றை செய்து அவர்களை எப்போதும் உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள்.

குடும்பத்திற்குள் எந்த ஒரு பிரச்சனைகளும் உண்டாகாமல் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எனவே அத்தியாவசியப் பொருட்களை வாங்கி செல்வது ஒருவர், அதை சமைப்பது ஒருவர் மற்றும் இதற்காக அனைவரும் ஒன்றுசேர்ந்து உதவிகளையும் செய்ய வேண்டும். யாரையும் எதற்காகவும் கேள்விகள் கேட்காமல் இருந்தால் மட்டுமே இந்த இருபது நாட்கள் வீட்டில் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் மற்றும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன