கொரோனா அறிகுறிகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்..!

  • by
what you should if you have corona virus symptoms

அதிகாலையில் எழுந்திருக்கும் பொழுது உங்கள் தொண்டையில் ஏதேனும் அசௌகரியம் இருந்தால் அல்லது உடல் சூடாக இருந்தால் உடனே அது கொரோனா வைரஸ் என்ற பயத்தை கொள்வதை நாம் முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் முதலில் நம்முடைய சுவாசப் பகுதியை பாதிக்கச் செய்கிறது. இதை கவனத்தில் கொண்டு மூச்சினை நன்றாக இழுத்து பிடுத்துக்கொண்டு எவ்வளவு வினாடிகள் உங்களால் தாக்குப்பிடிக்க முடிகிறது என்று பாருங்கள். இச்சமயங்களில் உங்கள் மார்பகத்தில் அல்லது சுவாசப் பாதையில் ஏதேனும் அசவுகரியம் ஏற்பட்டால் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

தமிழக அரசு

தமிழக அரசு கிட்டத்தட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி இருந்தது. இவர்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 28 நாட்களை கடந்து உள்ளதால் அவர்களுக்கான தனிமைப்படுத்துதல் நாட்கள் முடிவுக்கு வந்தது. மீதமுள்ளவர்கள் வீட்டில் மேலும் சில வாரங்களுக்கு தனிமையாக இருக்க வேண்டும். இதன் முடிவில் தான் இன்னும் எத்தனை பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதியாக உள்ளது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். இதில் தனிமைப்படுத்தி உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸின் மேல் உண்டான பயம் அதிகரிக்கும். அதை தவிர்த்து ஒவ்வொரு நாளும் இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்குமோ என்ற அச்சம் ஏற்படும். எனவே இதுபோன்ற சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை காணலாம்.

மேலும் படிக்க – முருங்கைக்காயின் முக்கியத்துவம்..!

அவசர தொலைபேசி எண்

தமிழக அரசு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் இருக்கும் மக்களுக்காக அவசர உதவி எண்ணை அமல் படுத்தி உள்ளார்கள். எனவே இந்த எண்ணை அழைப்பதன் மூலமாக உங்கள் வீட்டிற்கு உடனடியாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவி சாதனங்கள் அனைத்தும் கொண்டு வரப்படும். அதைத் தவிர்த்து உடனடியாக உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் செயலையும் அவர்கள் துவங்குவார்கள். இது அனைத்தும் உங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாக இருக்கும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் மட்டுமே இது போன்ற அவசர என்னை நாம் தொடர்பு கொள்ள வேண்டும். இதன்படி உங்கள் வீட்டில் அருகே உள்ள சுகாதாரத்துறை உங்களை அழைத்து மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து உங்களுக்கான உதவிகளை செய்வார்கள்.

செயலி மூலம் கண்காணிப்பு

அதேபோல் தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸை முழுமையாக தடுப்பதற்காக ஒரு செயலியை உருவாக்கி உள்ளார்கள். எனவே தமிழகத்தில் யாரெல்லாம் வீட்டில் தனிமைப்படுத்தி வைத்துள்ளார்களே அவர்களுக்கான கேள்வி மற்றும் பதில்கள் அனைத்தும் இந்த செயலியில் மூலமாக அவர்களுக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். இதைத் தவிர்த்து அவர்கள் எத்தனை நாட்களுக்கு வீட்டில் தனிமையாக இருக்க வேண்டும், மற்றும் எத்தனை நாட்கள் கடந்து வந்தார்கள் என்ற கணக்குகளையும் அவர்கள் அந்த செயலியில் மூலமாக பார்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அந்த செயலில் மூலமாகவே நீங்கள் அவசர உதவியை பெறலாம். அதில் சுகாதாரத்துறை, சுகாதார செயலாளர்கள் மற்றும் மருத்துவர்கள் என அனைத்து உதவிகளும் உங்களுக்கு கிடைக்கும் வகையில் அந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க – வெள்ளரிக்காய் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது..!

மருத்துவ பரிசோதனை

உங்களுக்கு அல்லது உங்கள் வீட்டில் அருகே யாராவது ஒருவருக்கு இந்த தொற்று இருப்பது உறுதியானால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். முடிந்தவரை அவர்களை நீங்களே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மருத்துவ உதவி வரும் வரை காத்திருக்க வேண்டும். யார் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்களோ அவர்களைச் சுற்றி உள்ளவர்களும், அவர்கள் குடும்பத்தாரையும் மருத்துவ பரிசோதனை செய்வது மிக அவசியமான ஒன்று. இதன் மூலமாக இந்த தொற்று சமூக தொற்றாக மாறாமல் நம்மால் தவிர்க்க முடியும்.

எனவே கொரோனா வைரஸ் மூலமாக ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு, உங்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளுங்கள். அதை தவிர்த்து உங்கள் உடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அது உடனே கொரோனாவாக இருக்கும் என்ற பயத்தையும் குறைத்து உங்கள் பிரச்சனையை முழுமையாக ஆராய்ந்து அதற்கேற்றபடி அரசிடம் உதவிகளை பெறுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன