உங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை..!

  • by
what you should do to keep yourself clean

நாம் தினமும் செய்யப்படும் சிறு செயலினால் உங்கள் வாழ்க்கை அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அதற்கு நாம் முடிந்தவரை நம்மை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு நாம் பெரிய செயல்களை செய்யத் தேவையில்லை, சிறியதாக நம்முடைய பழக்க வழக்கங்களில் ஒரு சில மாற்றங்களை மேற்கொண்டு நம்மை தூய்மைப் படுத்திக் கொள்ளலாம், அதற்கான வழிகளைக் காணலாம்.

கை கழுவும் பழக்கம்

கைகழுவும் பழக்கத்தின் அருமையை நம் முன்னோர்கள் பல வருடத்திற்கு முன்பே நமக்கு அறிவுறுத்தினார்கள். ஆனால் அதன் பெருமையை நாம் இப்போதுதான் புரிந்துகொள்கிறேம். கைகள் மூலமாக எல்லோருக்கும் பலவிதமான வியாதிகள் பரவுகிறது. அதை தடுப்பதற்கு நாம் முடிந்தவரை எல்லோருக்கும் வணக்கம் வைக்கலாம், அப்படியே கை கொடுத்தால் நம் கைகளை வேறு எந்த இடங்களிலும் பயன்படுத்தாமல் கழுவுவது மிக அவசியம். அதிலும் கிட்டத்தட்ட 20 வினாடிகள் வரை தொடர்ந்து நீரை ஊற்றி கழுவினால் அவர்கள் கைகளில் எந்த ஒரு தொற்றுக்களும் இருக்காது.

மேலும் படிக்க – பூஞ்சை தொற்றிலிருந்து காக்க எளிய வழிமுறைகள்

காலையில் குளிப்பது

காலையில் எழுந்து குளிப்பது நம்முடைய உடல் உஷ்ணத்தை குறைத்து நம்மை சுறுசுறுப்பாக வைக்க உதவும். ஆனால் ஒரு சிலர் காலையில் குளிப்பதை தவிர்த்து இரவு வீடு திரும்பிய உடன் குளிப்பார்கள். ஆனால் உண்மையாக நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் காலை, மாலை என இருவேளை குளிப்பதே சிறந்தது. ஆனால் இச்சமயங்களில் சோப்பு போன்ற பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நாள் முழுவதும் நீங்கள் வெளியே திரிந்ததினால் உங்கள் மேல் ஏற்பட்ட அழுக்குகள் மற்றும் கண்களுக்கு தெரியாத கிருமிகளை குளிப்பதன் மூலமாக அகற்றிவிடலாம். அதை தவிர்த்து உங்கள் உடலை குளிர்ச்சி அடைய செய்து ஆழ்ந்த உறக்கத்திற்கு இந்த குளியல் வழிவகுக்கும்.

வாய் துர்நாற்றத்தை அகற்ற வேண்டும்

நம்மையறியாமல் தினமும் கோடிக்கணக்கான கிருமிகளை நாம் உற்பத்தி செய்கிறேம். அது வேறு எங்கும் இல்லை நம் வாய்களில் தான். இரவு முழுவதும் நம் வாய் பலவிதமான கிருமிகளை உற்பத்தி செய்கிறது. இதை தடுக்க வேண்டும் என்றால் காலையிலிருந்து நம் பல்துலக்க வேண்டும். ஒரு சிலர் வெறுமனே தண்ணீர் ஊற்றிக் கொப்பளித்துக் கொண்டு தங்கள் வாயை சுத்தப்படுத்திவிட்டோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் உங்கள் வாய் சுத்தம் அடைய குறைந்தது 20 நிமிடங்கள் வரை அது நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். இதனால் உங்களுக்கு ஏற்படும் பலவிதமான உடல் உபாதைகள் இருந்து தப்பிக்கலாம்.

மேலும் படிக்க – உடலுக்கு ஆரோக்கியம் தரும் நட்ஸ் வகைகள் சாப்பிடுங்கள்

சுத்தமாக இருங்கள்

வீடு திரும்பிய உடன் கை, கால்கள், முகம் கழுவி உடை மாற்றிக் கொள்வது சிறந்தது. இதனால் வெளிப்புறங்களில் இருக்கும் அழுக்குகள், தூசிகள் உங்கள் ஆரோக்கியத்தை குறைத்துவிடும். எனவே நீங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் இந்த செயலை செய்யுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் செய்யப் பயிற்சி கொடுங்கள்.

எந்தளவிற்கு சுத்தமாகவும் இருக்கிறோமோ அந்த அளவிற்கு நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும் எனவே சிறிதுநேரம் உங்களை சுத்தப்படுத்துவதற்கு தினமும் பழகிக்கொள்ளுங்கள். இதனால் மிகப்பெரிய மாற்றம் உங்கள் வாழ்க்கையில் நிகழலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன