144 தடையுத்தரவு நாட்களில் எவை இயங்கும்?? எவை இயங்காது??

  • by
what will function, will not function during 144 across country

கரோனா பரவலைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அறிவித்துள்ளது மத்திய அரசு. இம்மாதிரியான தடையுத்தரவு இருக்கும் காலங்களில் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு அவைகளில் எவை இயங்கும் எவை இயங்காது என்பதை அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது அவற்றை விளக்கமாகப் பார்க்கலாம். மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவையில் உள்ள அனைத்தும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியுமா?

நமது இருப்பிடத்திலிருந்து அத்தியாவசியத் தேவைகளுக்கும் மட்டுமே வெளியில் செல்ல அனுமதியுண்டு. மற்றும் அத்தியாவசிய சேவை துறைகளில் பணியாற்றும் ஊழியராக இருந்தால் அவர்களுக்கும் வெளியே செல்ல அனுமதி உண்டு. அவசர உதவி தேவைப்பட்டாலும் அல்லது  உணவுக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு கடைகளுக்குச் செல்ல வெளியில் செல்லலாம் .

மேலும் படிக்க – ஊரடங்கில் உங்கள் வீட்டில் புத்தக வாசிப்பு நல்ல சினிமாக்கள் பார்க்கலாம்.

பால்,காய்கறிகள் கிடைக்குமா? 

அத்தியாவசிய தேவையான பால் காய்கறிகள் இவை அனைத்திற்கும் தட்டுப்பாடு வராது என அரசாங்கம் கூறியுள்ளது. இதனால் தேவைக்கு அதிகமாக வாங்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் எச்சரித்துள்ளது. காய்கறிகள் கடை வழக்கம்போல் திறந்திருக்கும். ஆனால் கூட்டமாக சேராமல் ஒவ்வொருவரும் மூன்று அடி இடைவெளியில் இருந்து மட்டுமே காய்கறிகளை வாங்க வேண்டும்.

ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவுகளை வாங்க முடியுமா?

மொபைல் செயலிகள் மூலம் வீட்டிலிருந்தபடியே உணவுகளை வாங்குவதற்கும் தடை விதித்துள்ளது அரசாங்கம். இதனால் வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டிய ஒரு நல்ல நிலைமை ஏற்பட்டுள்ளது.

இணைதள சேவைகள் தொடர்ந்து கிடைக்குமா?

பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய அனுமதி அளித்துள்ளதால் இணையதள சேவையும் அத்தியாவசிய தேவைகளின் பட்டியல் இடப்பட்டிருக்கிறது. சேவையில் ஏதேனும் இடையூறு ஏற்படுமாயின் அது உடனடியாக சரி செய்யப்படும்.

தண்ணீர் குழாய் அடைப்பு அல்லது மின்சார இணைப்புகளை பிரச்சனை ஏற்பட்டால்?

தண்ணீர் மற்றும் மின்சாரம் என்பது அத்தியாவசிய தேவையில் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆகையால் பிளம்பர், எலெக்ட்ரிசியன்கள் வீட்டிற்கு அழைக்க தடையில்லை .ஆனால் குடிநீர் பிரச்சனை, மின் துண்டிப்பு போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு மட்டும் அவர்களை அழைத்துக் கொள்ள அனுமதியுண்டு.

விமான சேவைகள் நடைபெறுகிறதா?

நகரைவிட்டு வெளியே செல்வதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுவிட்டது.

மேலும் படிக்க – இந்தியாவில் அனைத்து ரயில் சேவைகளும் முடக்கத்தில் உள்ளது..!

அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் ஆனால் என்ன செய்வது?

இம்மாதிரியான தடையுத்தரவு நாட்களில் டாக்ஸி ,ஆட்டோ சேவைகள் கிடைக்காது. அவசரமாக மருத்துவமனைக்கு போக வேண்டுமென்றால் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு செல்லலாம்.

அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்பவர்கள் எப்படி செல்வது?

நான் அத்தியாவசிய தேவை சேவையில் உள்ளவன் என்று போலீசாரிடம் சொல்வதற்கு, நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் கொடுத்துள்ள அடையாள அட்டையை காண்பித்து விளக்கத்தை கூறவேண்டும்.

வெளி மாவட்டங்களுக்கு யாரெல்லாம் வேலைக்குச் செல்லலாம் ?

அத்தியாவசிய தேவை பணிகளில் ஈடுபட்டுள்ளன காவல்துறை, தீயணைப்புத்துறை , ஊடகம் மற்றும் அவசர மருத்துவ உதவித் துறை இவர்கள் மட்டுமே ஊரடங்கு நடைபெறும் போது வெளிமாவட்டங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

வங்கிகள்  ஏடிஎம்கள் செயல்படுமா?

கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்று அரசு கூறியுள்ளது. நம் வீட்டின் அருகிலுள்ள ஏடிஎம் அல்லது வங்கிக்கு சென்று பணம் எடுத்துக் கொள்ளலாம். பண பரிவர்த்தனை தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. முடிந்தவரை ஆன்லைன் மூலமே பணத்தை செலுத்துவது சிறந்தது என்று வங்கிகள் அறிவுறுத்துகின்றனர்.

மருந்து பொருட்கள் கிடைக்குமா?

நீரிழிவு நோய் மற்றும் வேறு சில நோய்க்கு உட்பட்டவர்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை வாங்கிக் கொள்வதற்காக மருந்தகம் கண்டிப்பாக செயல்படும். இவையும் அத்தியாவசிய சேவையின் கீழ் வருகிறது. அனைத்து மருந்து கடைகளும் திறந்திருக்கும்.

மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் எப்படி வாங்குவது ?

இம்மாதிரியான தடையுத்தரவு நாட்களில் மளிகை கடைகள் திறந்திருக்கும். அத்தியாவசிய தேவையான பொருள்களை மட்டும் வாங்குவதற்கு வெளியில் சென்று கடையில் சென்று வாங்கி கொள்ளலாம். ஆனால் ஒரே நேரத்தில் கூட்டமாக சென்று வாங்காமல் ஒவ்வொருவரும் தனித்தனியாக கடைகளுக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம்.

வேலைக்காரப் பெண்கள் பணிக்கு வர அனுமதி இருக்கிறதா.?

அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகளில் வீட்டு வேலைக்காரர்கள் பணிக்கு வர இதுவரை தடை ஏதுமில்லை. ஆனால் அவர்களுக்கு நோய்த் தொற்று பரவ

வாய்ப்புள்ளது என்பதால் அடுக்குமாடி குடியிருப்பு நல சங்கங்கள் வீட்டு வேலைக்கு வரவேண்டாம் என அவர்களே கூறியுள்ளனர்.

மேலும் படிக்க – போர்க்கால சமயங்களில் உங்கள் பணத்தை எப்படி திட்டமிட்டு செலவு செய்வது..!

அரசு வாகனங்கள் இயங்குமா?

அனாவசியமாக யாரும் வீட்டை விட்டு வேறு இடங்களுக்கு செல்லக்கூடாது என்பதற்காக தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள், ரயில் ஆட்டோ மெட்ரோ ரயில் போன்றவை இயங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது .சொந்த வாகனங்களில் வெளியே சென்றாலும் காவல்துறையினர் கண்காணிக்கப்பட்டு விசாரிப்புக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

இம்மாதிரியான சூழ்நிலையில் யாரும் நம்மை கட்டுப்படுத்துவதாக எண்ணி கொள்ளாமல் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பதால் மட்டுமே வேகமாக பரவி வரும் இந்த பெரும் தொற்று நோயை தடுக்க முடியும் வீட்டில் இருந்தபடியே குடும்பங்களுடன் அதிக நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியாக இருப்போம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன