ஏப்ரல் 14கிற்கு பிறகு நாம் என்ன செய்ய வேண்டும்..!

  • by
what we should do after april 14 to control corona virus

கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிக்காமல் இருப்பதற்காக நாடுமுழுவதும் 21 நாட்கள் முடங்கியிருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது. இதை எல்லா மாநிலங்களும் காவல்துறையினர் உதவியுடன் செயல் படுத்தி வந்துள்ளார்கள். இப்போது இந்த 21 நாள் ஊரடங்கு நிறைவுபெறும் சூழ்நிலையில் மற்ற மாநிலங்களும் இருக்கும் மக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும், மத்திய மற்றும் மாநில அரசுகள் எந்த விதமான கட்டுப்பாடுகளை நமக்கு விதித்திக்கும், அதை நாம் எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்பதை காணலாம்.

தமிழ்நாட்டின் முடிவு

கொரோனா வைரஸினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது தமிழ்நாடு. இங்கே இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து செல்கிறது, இந்த மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு ஏற்றார்போல் கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. ஏப்ரல் 14 க்கு பிறகு மத்திய அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதையே பின்தொடரும் போக்கில் தமிழக அரசு இருக்கிறது. இதைத் தவிர்த்து பாதிப்புகள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் முழுமையாக அடைக்கும் எண்ணத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளையும் உச்சபட்ச கட்டுப்பாட்டில் வைக்க தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடுகளை செய்து வருகிறது.

மேலும் படிக்க – இந்தியா மூன்றாம் மற்றும் இரண்டாம் நிலைக்கு இடையே இருக்கிறது..!

மற்ற மாநிலங்கள்

ஊரடங்கை ஒரு சில மாநிலங்கள் ஏப்ரல் 30 வரை நீடித்துள்ளது. அதில் முதலில் இருப்பது ஒடிசா மாநிலம், அதைத்தொடர்ந்து பஞ்சாப் மாநிலமும் மார்ச் மாதம் 5ஆம் தேதி வரை இந்த ஊரடங்டை நீட்டிக்க முடிவெடுத்துள்ளது. இம்மாநிலத்தில் விவசாயிகளுக்கு மட்டும் விலக்கு அளித்து மக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உயிரிழப்புகளும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் மகாராஷ்டிரா மாநிலம் ஊரடங்கை அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீட்டித்துள்ளது. சண்டிகர், டில்லி மாநிலங்களும் ஊரடங்கை அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க முடிவெடுக்கிறார்கள்.

தென் மாநிலம்

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் ஊரடங்கை நீட்டிக்க முடிவு எடுத்துள்ளது. ஆனால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் மட்டும் இந்த ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்கப்படும் என்று ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் கூறியுள்ளார். கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களும் ஊரடங்கை அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க முடிவு எடுத்துள்ளது. இதில் கர்நாடக மாநிலம் விவசாயத்திற்கும் மற்றும் ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் ஊரடங்கு விளக்கை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க – பருப்புகளும் அதன் தேவைகளும்..!

மக்கள் என்ன செய்ய வேண்டும்

தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற மாநிலங்கள் மத்திய அரசு அறிவுரையை ஏற்று அதன்படி நடக்க திட்டங்களை தீட்டி வருகிறார்கள். இனிமேல் மக்களாகிய நாம் ஊரடங்கு முடிந்த பிறகு நாம் பொறுப்புடன் இருக்க வேண்டும். ஊரடங்கு என்பது மேலும் சில வாரங்களுக்கு அமலில் இருக்கும், இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொழுதுபோக்கு கட்டிடங்கள் என அனைத்தும் முடக்கி வைக்க திட்டமிட்டுள்ளார்கள். கோவில்கள், மசூதி மற்றும் ஆலயங்கள் போன்ற அனைத்தையும் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திறக்கக்கூடாது என்று அரசாங்கம் கூறியுள்ளது. எனவே அத்தியாவசிய வேலைக்காக மட்டுமே நாம் வெளியே செல்ல வேண்டும். தேவை இல்லாமல் வெளியே சென்றால் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறையினர் நமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

கொரோனா வைரஸ் தாக்குதல் முடிந்தாலும் அதன் பாதிப்புகள் அடுத்த சில வருடங்கள் நம் மனதில் இருக்கும். எனவே இதை சரியாக எதிர்கொள்வதே இதற்கான தீர்வாக இருக்கும். எனவே நாம் இப்போது செய்துவரும் தவறுகள் அல்லது செய்த தவறுகள் அனைத்தையும் மறந்து இனி வரப்போகும் காலங்களில் பொறுப்புடன் செயல்பட்டு இந்த வைரஸ் தொற்றை அழிக்க உதவுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன