லாக் டவுனின் போது பிரிட்ஜில் என்னென்ன வைத்துக் கொள்ளலாம்..!

  • by
what to keep in refrigerator during this lockdown

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவாமல் இருப்பதற்காக உலகின் பல பகுதிகளில் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது, அதில் இந்தியாவும் கிட்டத்தட்ட கடந்த 10 நாட்களாக முழு அடைப்பில் உள்ளது. இது போன்ற சமயங்களில் நம் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையான அளவு வாங்கி நம்முடைய ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்கிறோம். இப்படி கண்டதை ஃப்ரிட்ஜில் வைக்காமல் தேவைக்கேற்ப உணவுப் பொருட்களை மட்டும் வைக்க வேண்டும்.

காய்கறிகள்

கெடும் தன்மைகளைக் கொண்ட காய்கறிகளை மட்டும் நம் பிரிட்ஜில் வைக்க வேண்டும். அதை தவிர்த்து வாங்கப்பட்ட அனைத்து காய்கறிகளையும் உள்ளே நுழைக்க வேண்டாம். தக்காளி, கேரட், பீன்ஸ், குடைமிளகாய், காலிபிளவர், முட்டைகோஸ், ப்ரோக்கோலி, பச்சை மிளகாய் போன்றவற்றை தனித்தனியாக ஏதேனும் டப்பாக்களில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலமாக அதன் தன்மைகள் எதுவும் குறையாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் பிணத்தை எப்படி கையாள்வது..!

பழவகைகள்

கொரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருப்பதற்கு நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு நாம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ள பழங்களை உட்கொள்ள வேண்டும். இனிமேல் நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்காடிகளுக்கு சென்று நாம் ஆரோக்கியமான பழங்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, கொய்யா, வாழைப்பழம், திராட்சை போன்றவற்றை வாங்கி பயன்பெறலாம். இவைகளின் தன்மை மாறாமல் இருப்பதற்கு நாம் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வைக்க வேண்டும். அதேபோல் ஒருமுறை ஒரு பாகத்தை பயன்படுத்தி மிதமுள்ள பாதியை பிரிட்ஜில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

உணவுப் பொருட்கள்

பிரிட்ஜில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் குளிர்பானங்களை வைத்துக் கொள்ளலாம். ஆனால் இது போன்ற தொற்றுகள் அதிக அளவில் பரவி வரும் சூழ்நிலையில் நாம் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். எனவே காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டும் இந்த சூழலில் சாப்பிடுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் குளிர் பானங்களைத் தவிருங்கள்.

மேலும் படிக்க – லாக் டவுனின் பொழுது காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்துவது..!

வீட்டு உணவுகள்

நம் குடும்பத்திற்கு ஏற்றார் போல் குறைந்த அளவு உணவுகளை சமைத்திடுங்கள், அதை தவிர்த்து ஏராளமான உணவுகளை சமைத்து ஃப்ரிட்ஜில் அடக்கி வைக்காதீர்கள். ஒரு நிலையை கடந்தவுடன் பிரிட்ஜில் இருக்கும் உணவுப் பொருட்கள் விஷயமாக மாறும் தன்மை இருக்கிறது. எனவே உங்கள் ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும் இந்த செயல்களை முழுமையாக தவிர்த்து விடுங்கள்.

நம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் ஃப்ரிட்ஜின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். ஆனால் இது போன்ற சூழல்களில் பால், தயிர் மற்றும் காலை உணவுக்குப் பயன்படுத்தப்படும் இட்லி, தோசை மாவுகளை நாம் பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். அதையும் முழுமையாக அடைத்து பாதுகாப்பான முறையில் வைக்க வேண்டும். இதுவே உங்கள் ஆரோக்கியம் மற்றும் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன