கருப்பை நீர்க்கட்டிகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்???

முன்பெல்லாம் பெண்கள் வயதுக்கு வருவதற்கான சில குறிப்பிட்ட வயது
நிர்ணயக்கப்பட்டது. ஆனால் இன்றோ பத்து வயது தொடங்கிய உடனே பெண்கள்
பூப்பெய்தி விடுகின்றனர். இதற்கு காரணம் நவீன கால உணவு பழக்க வழக்க
முறைகளை தான். ஆரோக்கியம் என்று நாம் நினைத்து உண்ணும் ஒவ்வொரு
உணவும் நமது வருங்கால சந்ததியினருக்கு ஆபத்தை ஏற்படுத்தி கொண்டு
இருக்கிறது. அதிலும் இப்போது மிக அதிகமாக காணப்படும் ஒரு பிரச்சனை
கருப்பை நீர்க்கட்டி. அதை எவ்வாறு நாம் தினசரி உணவின் மூலமே சரி
செய்யலாம் என்று பார்க்கலாம்.

நீர் கட்டிக்கு அடிப்படையாக அமையும் அழகு சாதன பொருட்கள்

முன்னரெல்லாம் மணி அடித்தது போல மாதம் வாதம் வந்துகொண்டிருந்த
மாதவிடாயை இப்பொழுது வருடத்துக்கு 76 மில்லியன் டாலர் செலவழித்து
வரவழைக்க வேண்டி இருக்கிறது. (76 மில்லியன் டாலர் என்பது மாதவிடாய்
பிரச்சனையை தீர்க்கும் மருந்துகளின் இறக்குமதி வீதம்).
பெண்கள் பயன்படுத்தும் தொட்டிகளில் குறிப்பாக நகப்பூச்சு, லிப்ஸ்டிக்
முகப்பொலிவு கிரீம்கள் என எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் ரசாயனங்கள்
தான் குறைப்பிரசவம் சினைப்பை நீர்க்கட்டிகள் என ஏராளமான சிக்கல்களை
உருவாக்குகின்றன.

அழகு சாதன பொருட்களில் பயன்படும் இல்லை லெட் ,ஃபார்மால்டிஹைடு
போன்ற வேதிப்பொருட்கள் மேல்பூச்சாக மட்டுமல்ல உடலின் நுண்துளை
வழியாக உடலின் உட்புறமும் செல்கின்றன. இதுதான் பல பிரச்சனைகளுக்கு
அடிப்படையாக அமைகிறது.

மேலும் படிக்க – கரும்பு சாப்பிடுவதினால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா..!

எவ்வாறு நீர்க்கட்டிகள் உருவாகின்றன 

மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வருவது, மூன்று
மாதம் இரண்டு மாதம் என தாமதமாக வெளியேறுதல் போன்ற நிலை இருந்தால்
அதற்கு காரணம் சினைப்பையில் சுரக்கும் ஹார்மோன் குறைபாடு. தான் மாதம்
ஒருமுறை சினை முட்டையை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு.
இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு சிறு நீர் கட்டி தோன்றி
விடுகின்றன. இதை (PCOD) Polycystic disorder என்பார்கள். இதை ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறிந்து முறையான சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம் . மேலும் சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல ஒரு குறைபாடு தான். சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம்.

நீர்க்கட்டிகள் உருவாக காரணமாகும் உணவு பழக்கவழக்கங்கள்

இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் பெண்கள் பூப்படைந்தால்
அவர்களுக்கென உணவு வகைகள் சமைத்து தனி கவனிப்புடன்
பார்த்துக்கொள்வார்கள். நாட்டுக்கோழி முட்டையை ஊற்றி தரப்படும்
நல்லெண்ணெய், உளுந்தைத் தோல் நீக்காமல் செய்த உளுத்தங்களி.
இவையெல்லாம் அவர்கள் வாழ்வில் சந்திக்கவிருக்கும் பல பிரச்சனைகளை
தயக்கமில்லாமல் தாங்கிக்கொள்ள, அவர்கள் பூப்படைந்த காலத்தில்
கொடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உணவுகள். ஆனால் இன்றோ 
அருவருப்புடன் வெறுத்து ஒதுக்கும் பெண் பிள்ளைகள் அதிகரித்து வருகின்றனர்.
துரித உணவுகளில் அவர்கள் காட்டும் நாட்டத்தில் சிறிதளவேனும் நம் நாட்டு
பாரம்பரிய உணவில் காட்டியிருந்தால் இந்த மாதிரியான சினைப்பை
நீர்க்கட்டிகள், குழந்தையின்மைக்கான பிரச்சனைகளும் ஒருவேளை வராமல்
இருந்திருக்குமோ?

ஹார்மோன்களின் உரம் உளுத்தங்களி

ஈஸ்ட்ரோஜன் புரோஸ்ட்ரேஷன் எனும் ஹார்மோனுக்கு உரமாக மாறி
மாதவிடாயை சீர்படுத்துகிறது இந்த உளுத்தங்களி. அதேபோல் பப்பாளியில் இருக்கும் பாலீ பீனால் மற்றும் வைட்டமின்களும் கருப்பை வலுவாக செய்ய உதவும் என்று
குழந்தைகளுக்கு சொல்லித் தருவது இன்றைய பெற்றோர்களின் மிக முக்கிய
கடமையாகும்.

மாதவிடாய் ஒழுங்குபடுத்த கொடுக்கப்படும் ஹார்மோன் மாத்திரைகளாலும்
உடல் பருமன் அதிகரிக்கும். சினைப்பையில் உற்பத்தியாகும் முக்கிய இரு
ஹார்மோன்களின் திருவிளையாடல்கள் தான் சினைப்பை நீர்கட்டி உருவாக
காரணமாகிறது. சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுசிறு கட்டிகள்

தோன்ற கூடும். உடலில் ஏற்படும் மாற்றங்கள் கருப்பை நீர்க்கட்டிக்கு முக்கிய
காரணம்.

மேலும் படிக்க – சைக்கிளிங் செல்வதினால் கிடைக்கும் பயன்கள்..!

நீர் கட்டியை சரிசெய்யும் உணவுகள் 

நீர்கட்டிகள் உருவாக்கத்தின் காரணமாக திடீரென உடல் பெருத்து மாதவிடாய்
வராமல் சிரமப்படும் பெண்கள் சோற்றுக் கற்றாழையும், வெந்தயமும், பூண்டும்
பனை வெல்லமும் சேர்த்து கிளறிய காலை உணவை அதிகமாக
எடுத்துக்கொண்டால் உடல் எடை குறையும்.

மாதவிடாயை சரிசெய்ய பயன்படும் லோ கிளைசிமிக் தன்மையுடைய
தானியங்களை தினை, கம்பு, சோளம், வரகரிசி முதலிய உணவுகளையும்
ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் உள்ள குடம்புளி இந்த உடல் எடையை குறைக்க
ஓரளவுக்கு உதவி செய்யும்.

வெற்றிலை,, வாழைப்பழம் சோற்றுகற்றாழை என கருத்தரிக்க உதவும் பல மரபு
உணவுகளும் மறந்து போனது கூட இந்த நீர்க்கட்டிகள் இருக்க ஒரு காரணமாக
இருக்கிறது.

இம் மாதிரியான உணவுகளை தினசரி சாப்பிட்டு வந்தால் கருத்தரிப்பு
பரிசோதனைக்காக மருத்துவமனையில் காத்திருக்க வேண்டிய அவசியம்
ஏற்படாது.

கருப்பை நீர்க்கட்டி உருவாக மிக முக்கிய காரணம் நம் பாரம்பரிய உணவு
முறைகளை நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்காமல் போனதுதான்.
பெண்களுக்கு ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் உளுந்து, வெந்தயம். பூண்டு
போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நிச்சயம் நல்ல பலனைக்
கொடுக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன