கொரோனாவுக்கு எதிராக போராடும் வீடுகளில் இருக்க வேண்டியவை..!

  • by
what things should be there in house while fighting against corona virus

கொரோனா வைரஸ் தொற்று உலகை பெரிதாக பாதித்துள்ளது, இதைத் தவிர்த்து இந்தியாவின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக வெளிநாடுகளிலிருந்து வீடு திரும்பியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் அருகே இருப்பவர்கள், அவர்களை தொடர்பு கொண்டவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரையும் இந்திய அரசாங்கம் தனிமைப்படுத்தி வருகிறது.

கொரோனா வெளிப்பாடு

ஒருவருக்கு கொரோனா நோய்கள் இருந்தால் அது முழுமையாக வெளிபடுவதற்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் வரை ஆகும். இதனால் யாருக்கு இந்த மாதிரி தொற்று இருக்கிறது என்பதை உடனடியாக கண்டறிய முடியாது. எனவே இதைக் கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா வைரஸ் இருக்கும் என சந்தேகப்படுபவர்களை தனிமை படுத்து வருகிறார்கள். இதன்மூலமாக இரண்டு முதல் நான்கு வாரங்களில் இவர்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியும்.

மேலும் படிக்க – உடலில் நோய் எதிர்க்கும் சளியை தடுக்கும் மூலிகைகள்

பரிசோதனையில் தாமதம்

மக்கள்தொகை அதிகமாக இருக்கும் இந்தியாவில் சந்தேகிக்கும் ஒவ்வொருவரையும் நம் பரிசோதித்தால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை மோசமாகிவிடும். ஏனென்றால் நாம் பரிசோதிக்கப்படும் கருவிகள் போதுமான அளவு கையிருப்பு நம்மிடம் இருக்கிறது, ஆனால் இதை வைரஸ் தொற்று இல்லாதவர்களுக்கு பயன்படுத்தும்போது அந்த கருவி பயனில்லாமல் போகிறது. இதன் மூலமாகவே அவர்களை தனிமைப்படுத்தி அந்த வைரஸ் தொற்று இருக்கும் அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே அவர்களை பரிசோதிக்கிறார்கள்.

தனிமைப்படுத்தியவர்கள் செய்ய வேண்டியவை

கொரோனா வைரஸ் உங்களுக்கு இருக்கும் என்ற சந்தேகத்தில் உங்களை தனிமை படுத்தி இருந்தால் நீங்கள் அதை நினைத்து பயப்பட தேவையில்லை. உங்கள் வீட்டை சுத்தப்படுத்தி நீங்கள் தனிமையில் இருங்கள். உங்கள் உறவினர்கள் மற்றும் குடும்பத்தில் இருப்பவர்களுடன் நெருக்கமாக பழகாதீர்கள், உங்கள் கைகளை இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை அலசுங்கள், முக கவசம் அனிந்து கொள்ளுங்கள். கபசுரக்குடிநீர் மற்றும் வைட்டமின் சி உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுங்கள், சிறிய இடைவெளி விட்டு வெதுவெதுப்பான நீரை குடியுங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி

கொரோனா வைரஸ் உறுதியான பிறகு உங்களுக்கு மருத்துவமனைகளில் முதலில் கொடுக்கும் மருந்துகள் அனைத்தும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதாக இருக்கும். எனவே நீங்கள் வீட்டில் தனியாக இருக்கும்போது இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இதன் மூலமாக இந்த வைரஸால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் மற்றும் உங்களை முழுமையாக குணப்படுத்தவும் உதவும்.

வீட்டில் இருக்க வேண்டியவை

உங்களுக்கு வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகத்தால் உங்களுக்குத் தேவையான சனிடேஷன் மற்றும் வீட்டை சுத்தப்படுத்த தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். இதன்மூலமாக தினமும் நீங்கள் பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் நன்கு துடைத்துக் கொள்ளுங்கள் மற்றும் வீட்டை ஒருமுறைக்கு இருமுறை உங்களால் பரப்பப்பட்ட கிருமிகள் எதுவும் மற்றவர்களுக்கு பரவ கூடாது என்ற எண்ணத்தில் முழு கவனத்துடன் வீட்டை சுத்தப்படுத்துங்கள். தேவைப்பட்டால் மஞ்சள் நீர், வேப்பிலை நீர் போன்றவைகளை வீட்டை சுற்றி தெளியுங்கள், இதன் மூலமாகக் கிருமிகள் அனைத்தும் அழியும்.

மேலும் படிக்க – கொரானாவுக்கு மருந்து குறித்து ஆயுவுகள் !

ஒரு நிலையான மனநிலை

கொரோனா வைரஸ் என்பது வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே ஏதேனும் உடல் பிரச்சனை உள்ளவர்களை அதிகமாக தாக்குகிறது. எனவே உங்கள் நம்பிக்கை இழக்காமல் இந்த வைரசுக்கு எதிராக போராடுங்கள். நாம் ஒரு மாதம் கஷ்டப்பட்டால் மட்டுமே உங்களின் வாழ்க்கை அழகாகும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். இதை தவிர்த்து உங்கள் குடும்பத்தில் எவரேனும் இது போல் தனிமைப் படுத்தி இருந்தால் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் உரையாடுங்கள்.

கொரோனா வைரஸ் தொற்று உள்ள வீடுகளை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல் அந்த வீட்டில் உள்ள நோயாளிகளின் மனநிலையை புரிந்து நடந்துகொள்ளவேண்டும். இதைத் தவிர்த்து இந்த தொற்று உறுதியானால் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் ஏற்பாடு செய்து தரவேண்டும். ஆனால் இந்த நிலை வரை செல்லாமல் உங்களை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் பார்த்துக்கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன