இளம் வயதில் ஏன் வழுக்கை ஏற்படுகிறது?

what the reason why youngsters are getting bald head

இப்போது இருக்கும் காலகட்டங்களில் 23 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு வழுக்கை ஏற்படுவது எளிதாகிவிட்டது இது சாதாரணமான வழுக்கை என்றே பலரும் எண்ணிக் கொள்கிறார்கள். ஒரு சிலரோ தலைமுறையின் பிரச்சினைகளினால் ஏற்பட்டுள்ளது என்று தங்கள் மனதை தேற்றிக் கொள்கிறார்கள். இது ஒருபுறம் இருக்கையில் உண்மையில் வழுக்கை எதனால் ஏற்படுகிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தென்கொரிய விஞ்ஞானிகளால் செய்யப்பட்ட ஆய்வில் கிட்டத்தட்ட 25 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அதிகமாக வழுக்கை ஏற்படுகிறது. அதற்கு காரணம் அவர்கள் செய்யும் வேலைகள்தான் என்று கூறியுள்ளார்கள். இந்த ஆய்வில் 25 முதல் 60 வயது உள்ள ஆண்களை கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர்களை கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஒவ்வொருவருக்கும் சில மணி நேரம் கூடுதலாக வேலைகள் செய்யுமாறு கேட்க பட்டார்கள், இதில் அதிகப்படியான வேலை செய்கிறாரவர்களுக்கு மிக விரைவில் அதிகமாக வழுக்கை ஏற்படுகிறது என்பதை கண்டறிந்துள்ளார்கள்.

மேலும் படிக்க – நகத்தைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்க வேண்டுமா?

இதைத் தவிர்த்து நாம் இரவு நேரங்களில் அதிகமாக கண்விழித்திருந்தால் வழுக்கை ஏற்படும் என்றும் கூறியுள்ளார்கள். பொதுவாகவே ஆண்கள் இரவு வேளையில் அல்லது இரவு நேரங்களில் சமூக வலைதளங்களில் அதிகமாக இருப்பதினால் இவர்கள் தூக்கத்தை தள்ளிப் போடுகிறார்கள். இதனால் இவர்களுக்கு போதுமான அளவு ஓய்வு கிடைக்காமல் தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி இவர்களுக்கு முடி உதிர்தல் ஏற்படுகிறது.

பெண்களைவிட ஆண்களுக்கு வழுக்கை அதிகமாக ஏற்படுகிறது. இதற்கு காரணம் ஆண்களுக்கு என்று இருக்கும் ஹார்மோன் பிரச்சினைகள்தான் ஆனால் பெண்களோ இதை எளிதில் எடுத்துக் கொள்ளக்கூடாது. இவர்கள் தங்கள் முடியை பராமரிக்கும் விதத்தை பொறுத்து இவர்களின் முடி உதிர்தல் இருக்கிறது. எனவே பெண்கள் தங்கள் முடியை இறுக்கமாக கட்டுவதை தவிர்க்க வேண்டும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் குறைந்து முடி உதிர்தல் அதிகரிக்கிறது.

மேலும் படிக்க – இளநரையை விரட்டணுமா? அப்ப இந்த எளிய வழிகளை முயற்சி செய்து பாருங்க..!

நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளினால் கூட நமக்கும் முடி உதிர்தல் ஏற்படும் எனவே முடிந்தவரை சிறிய பிரச்சினைகளுக்கு மருந்து மாத்திரைகளைத் தவிர்த்து இயற்கை வழியில் குணப்படுத்துவது நல்லது அப்படி தவிர்க்க முடியாத காரணங்களால் மருந்துகள் எடுப்பவர்களாக இருந்தால் நிச்சயம் உங்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை ஏற்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன