நீர் பற்றாக்குறையை தடுப்பதற்கு நாம் செய்ய வேண்டியவை..!

  • by
what steps we should take to control water scarcity

கடந்த ஆண்டு இறுதியில் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் நீர் பற்றாக்குறை ஏற்பட்டது. சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் மழை பெய்ததால் இந்த பற்றாக்குறை விலகியது. ஆனால் இதுபோன்ற மழை நமக்கு நிரந்தரமான தீர்வு அளிக்காது. எனவே நீரை பாதுகாத்து அதை சரியாக பயன்படுத்துவதன் மூலமாக தான் நம்முடைய எதிர்காலம் நீர் நிலை உள்ளதாக மாறும், இல்லை எனில் நீரில்லாமல் உலகம் வெப்பமாகி வறட்சியின் கையில் சிக்கிக் கொள்ளும்.

தண்ணீரை மறுசுழற்சி செய்யுங்கள்

நாம் தினமும் பயன்படுத்தும் நீரை மறுசுழற்சி செய்வதன் மூலமாக நீர் பற்றாக்குறையை நம்மால் தடுக்க முடியும். கழுவி நீரை நாம் செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். அதேபோல் கை கழுவுவது மற்றும் குளிப்பதற்கு பயன்படுத்தும் நீரை இதேபோல் மறுசுழற்சி செய்யலாம்.

மேலும் படிக்க – கனடா நாட்டுக் கொடியில் இருக்கும் மாப்பில் இலையின் வரலாறு..!

மற்றவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்

தண்ணீரின் தேவையும், அதை எவ்வளவு குறைவாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். எல்லோரும் தண்ணீரை குறைவாக பயன்படுத்தும் வகையில் உங்கள் வீட்டில் உள்ள குழாய்களை அமையுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு தண்ணீரால் கிடைக்கும் பயன்களை புரிய வையுங்கள். இதன் மூலமாக அவர்களின் எதிர்காலம் செழுமையாக இருக்கும்.

இயற்கையை வளருங்கள்

மரம், செடி, கொடிகள் அதிகமாக உள்ள இடங்களில் குளிர்ச்சித்தன்மை அதிகமாக இருக்கும். இதன் மூலமாக நீராவி அதிகரித்து அது மீண்டும் மழையாக நமக்கு கிடைக்கும். எனவே நாம் எந்த அளவிற்கு நம் நாட்டை பசுமையாக வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு மழை அதிகமாக நமக்குக் கிடைக்கும். இதன் மூலமாக நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி நமக்கு ஏற்படும் நீர் பற்றாக்குறை நிரந்தரமான தீர்வுக்கு வரும்.

புதிய தொழில்நுட்பம்

கடல்நீரை குடிநீராக மாற்றுவது மற்றும் கழிவு நீரை சுத்தமான நீராக மாற்றும் புதிய தொழில்நுட்பங்கள் நம்முடைய நாட்டில் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல மக்கள் இறங்கி உள்ளார்கள். இன்றும் இதற்கான உதவித்தொகைகள் அவர்களுக்கு அளித்து இந்த தொழில்நுட்பம் முழுமையாக வளர்ச்சி அடைய நம்நாடு உதவ வேண்டும்.

மேலும் படிக்க – பழங்கால தமிழர்களின் வாழ்க்கை முறைகள்..!

தூய்மையாக பார்த்துக் கொள்ள வேண்டும்

நாம் நீர்நிலை அதிகமாக உள்ள இடங்களுக்கு சுற்றுலா செல்கிறோம், ஆனால் அங்கு செல்லும் இடங்களில் நாம் தேவையற்ற பொருட்களை மற்றும் கழிவுகளை அங்கே போடுவதினால் நீர் நிலையின் உற்பத்தி குறைக்கும். எனவே நெகிழி போன்ற பொருட்களை சுற்றுலா செல்லும் இடங்களில் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நம் சுற்றுச்சூழலை எந்தளவிற்கு பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நீர் நிலையின் வரத்து அதிகரிக்கும்.

எல்லோரும் தங்கள் வீட்டில் மழைநீரை சேகரிக்கும் தொட்டிகளை வைக்க வேண்டும். அதைத் தவிர்த்து விட்டை சுற்றி மரங்கள் மற்றும் செடிகளை வளர்த்து இயற்கையை வளர்க்க வேண்டும். இதன் மூலமாக நீர்நிலை பிரச்சினை நம்முடைய எதிர்காலத்தை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன