ஊரடங்கின்போது பெற்றோர்கள் செய்ய வேண்டியவை..!

  • by
what parents should do during this lock down

ஊரடங்கு எல்லா மக்களுக்கும் மன அழுதத்தை கொடுத்துள்ளது. இச்சமயத்தில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் தங்களுக்கு பிடித்த வழிகளில் ஊரடங்கை கழித்து வருகிறார்கள், ஆனால் அவர்களை பாதுகாக்கும் மற்றும் பராமரிப்பு பொறுப்பில் இருக்கும் பெற்றோர்கள் இவர்களுக்கான நல்ல வழிகாட்டலை இச்சமயத்தில் காண்பிக்க வேண்டும். அப்படி தவறினால் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிப்படையும், எனவே பெற்றோர்கள் இச்சமயத்தில் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை காணலாம்.

சிறுவர் சிறுமிகள்

பெற்றோர்கள் இச்சமயத்தில் சிறுவர் சிறுவர்களை மிகச் சரியான முறையில் பாதுகாக்க வேண்டும். அதை தவிர்த்து கொரேணா வைரஸ் என்றால் என்ன அது எப்படி பரவும் போன்ற விழிப்புணர்வு அவர்களுக்கு அளிக்க வேண்டும். இது தவிர்த்து சிறுவர்களை வெளியே விளையாட அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும். அப்படியே அவர்களை அக்கம்பக்கத்தினர்களுடன் பழகும் போது எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்த வேண்டும்.

மேலும் படிக்க – உண்மையான தந்தை பற்றி வேதாளம் சொன்ன கதை!!

பதின் பருவம்

சிறியவர்களை நாம் அப்படி இப்படி அதட்டி நமது வழிகளுக்கு கொண்டு வரலாம், ஆனால் பதின்பருவத்தில் இருப்பவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்பவர்களை கட்டுப்படுத்துவது என்பது சற்று சிரமத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் இவர்களுடன் சண்டையிடும் அளவிற்கு நம்முடைய நிலை தள்ளப்படும். எனவே பெற்றோர்கள் இவர்களிடம் அன்பாகப் பேசி உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதே சமயத்தில் அவர்களின் புத்திசாலித்தனத்தையும் மற்றும் பொது அறிவையும் வளர்க்க வேண்டும். இது போன்றவர்கள் மற்றவர்கள் முன்னிலையில் உதாரணமாக இருக்கும் படி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

வயதானவர்கள்

ஒருசில வயதை எட்டியவுடன் அனைவருமே முதுமை நிலைக்குத் தள்ளப்படுவோம். அச்சமயத்தில் இவர்களுடைய மனநிலை கட்டுப்பாட்டில்லாமல் தேவையற்ற சிந்தனைகளை உண்டாகும். இது போன்றவர்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை அளிக்க வேண்டும் மற்றும் அவ்வப்போது அவருடன் உரையாடுவது போன்றவற்றை செய்ய வேண்டும். இதனால் அவர்கள் மனநிலை அமைதியாகி வீட்டில் உள்ள குழந்தைகளை பார்த்துக் கொள்வார்கள்.

மேலும் படிக்க – இந்த நிலையில் உடலுறவு கொண்டால் உங்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் பிரச்சினை இருக்காது..!

வீட்டில் உள்ளவர்களுடன் எப்போதும் அன்பாக பேசவேண்டும், அதைத் தவிர்த்து அவர்களை எதையாவது செய்யச் சொல்லி கட்டாயப் படுத்தினால் அது எதிர் விளைவுகளை உண்டாக்கும். எனவே பெற்றோர்களாகிய அனைவருமே உங்கள் குடும்பத்தின் சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்றபடி பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். இதை தவிர்த்து வீட்டில் உள்ளவர்களுக்கு நம்பிக்கையை அளித்து வாழ வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன