ஆழ்மனதில் அற்புத சக்தி அறிந்து கொள்ளுங்கள்..!

what is the use of inner power

பிரபஞ்சத்தில் நம்மை அறியாமல் ஏகப்பட்ட சக்திகள் இருக்கின்றன. அதை அனைத்தையும் அறிவதற்கு மற்றும் பெறுவதற்கே முனிவர்கள் மற்றும் ஞானிகள் ஆழ்ந்த தவத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு புண்ணிய ஸ்தானத்திலும் எல்லோரும் எதிர்பார்ப்பது மோட்சம் என்பார்கள். ஆனால் உண்மையில் இவர்களுக்கு மிகப்பெரிய சக்தியான மனதை கட்டுப்படுத்தும் சக்திக்காகவே இவர்கள் தியானம் இருக்கிறார்கள். ஒவ்வொருவரின் மனதிலும் நாம் கணக்கிடபடாத பல ஆற்றல் இருக்கின்றன. அந்த சக்திகளை நாம் சரியாகப் பயன்படுத்தினால் இவ்வுலகில் நாம் எந்த செயலையும் மிக எளிதில் செய்ய முடியும்.

ஆழ் மனதின் ஆற்றலை ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் ஆராய்ச்சி செய்து வந்தார். அவர் வானத்தில் இருக்கும் மேகங்களை தன் எண்ணங்கள் மூலமாக நகர முயற்சித்தார். நீண்ட எண்ணத்தின் பிறகு அவர் நினைத்தபடியே மேகங்கள் கலைந்தனர். முதல் முறை அதிக நேரம் எடுத்துக் கொண்ட இந்த செயல் அடுத்தடுத்து முறையில் ஐந்து நிமிடத்திற்குள் செய்து முடித்தார். மேகங்கள் கலைவது என்பது இயல்பு என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. சாதாரணமாக மேகங்கள் கலைவதற்கு சில நேரங்களே எடுக்கும் ஆனால் சில சமயங்களில் காற்றோட்டம் இல்லையென்றால் அது இருக்கும் நிலையிலேயே பல மணி நேரம் இருக்கும். இவர் இந்த செயலை பலமுறை செய்து காட்டினார்.

மேலும் படிக்க – அஜீரணத்தைப் போக்கும் அடுப்பங்கரை பொருட்கள்..!

இதன் மூலமாக, நாம் என்னத்தைக் கொண்டு ஏதாவது ஒரு செயலை செய்ய முடியும். நாம் எதையாவது எண்ணிக் கொண்டே இருந்தால் நிச்சயம் அந்த செயலை நம்மால் செய்து முடிக்க முடியும். நாம் எப்போதும் நேர்மறை எண்ணங்களை அதிகமாகக் கொண்டிருப்பதன் மூலம் நல்ல செயல்களை அதிகமாக செய்யலாம்.

இதேபோல் மற்றொரு ஆராய்ச்சியில் இரண்டு மைக்ரோஸ்கோப் அடியில் இரண்டு விதமான பாக்டீரியாக்களை வைத்துவிட்டார். அதில் முதல் பாக்டீரியாவை வாழ்த்தியும் அதனிடம் நல்ல வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்தினார். இரண்டாம் பாக்டீரியாவை சபித்துக் கொண்டே இருந்தார். இரண்டு பாக்டீரியாக்களில் இரண்டாவது பாக்டீரியா அவர் சபித்தது போல் இறந்துவிட்டது. முதல் பாக்டீரியா செழிப்புடன் இருந்தது.

இந்த இரண்டு ஆராய்ச்சியிலும் சொல்லப்படும் முடிவு ஒன்றுதான். நமது எண்ணம் எவ்வாறு இருக்கிறதோ அதைப் போல்தான் மற்றவர்களின் வாழ்க்கையும் அமைகிறது. இதனால்தான் ஒருவரின் சாபத்தை கொள்ளாதீர்கள் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். ஒரு செயலையும் அல்லது ஒரு வார்த்தையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தால் அது நிச்சயம் ஒரு நாள் நடந்துவிடும். இதேபோல் தான் நம் மனதில் ஆழ்ந்த சிந்தனை மூலமாக எதை செய்யவேண்டும் என்று சிந்தித்துக் கொண்டே இருந்தால் நிச்சயம் நீங்கள் நினைக்காத சமயத்தில் அது நடந்துவிடும்.

மேலும் படிக்க – சீரகம் கலந்த உணவு சாப்பிட்டால் நம்மை சீராக்கும்

எண்ணங்களின் சக்தி மிக அதிகம். எப்போதெல்லாம் நமக்கு கோபம் வருகிறதோ அப்போதெல்லாம் நம் உடல் படபடக்கும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும் அதே போல் பதட்டம் வரும் போதும் நம்முடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். இதனால் நம் உடலில் ஒரு சில ரசாயன மாற்றங்கள் ஏற்படுகிறது. நம் உடல் இயங்குவது எப்படி என்று விஞ்ஞானிகளால் கூட அறிய முடியாது. அப்படிப்பட்ட உடலிலும் இது போன்ற மாற்றங்கள் நிகழும் போது அதைச் சுற்றி இருக்கும் மக்களின் வாழ்க்கையில் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எண்ணுங்கள்.

எண்ணம் போல் வாழ்க்கை, இனிமேல் உங்கள் எண்ணங்களை நேர்மறையாக வைத்துக்கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் உங்களை அழிப்பது மட்டுமல்லாமல் உங்களைச் சுற்றி உள்ளவர்களையும் அழித்துவிடும். இதை கருத்தில் கொண்டு எப்போதும் நேர்மறையாகவும், நல்ல எண்ணங்களை கொண்டு இருங்கள். இது உங்கள் வாழ்க்கையையும் நேர்மறையாக மாற்றிவிடும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன