இந்திய ஃபேசன் மார்க்கெட்டில் ஹிட் அடித்த டிரெண்டுகள்..!

what is the trend in Indian fashion market

இந்தியாவில் ஆடைகள் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டுக்கும் அதிகரித்துக்கொண்டே போகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தொடக்கத்தில் கிட்டத்தட்ட 10% ஆடைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. மொத்தமாக கடந்த ஆண்டு 20 ஆயிரம் கோடிக்கு ஆடைகள்  விற்பனையானது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கடந்த ஆண்டை விட அதிகளவில் ஆடைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இது அனைத்திற்கும் காரணம் இப்போது இந்திய அளவில் பரவலாக இருக்கும் பெண்களின் ஆடைகளின் வடிவமைப்புதான்.

காதி ஆடைகள்

பழங்கால பாரம்பரியமிக்க காதி ஆடைகளை வைத்து புதுவிதமான வகைகளில் ஆடைகளைத் தயாரிக்கிறார்கள். அதிலும் பெண்களுக்கான பிரத்தியேக ஆடைகள் காதி துணிகள் மூலமாக தயாரிக்கும்போது அவர்கள் கால பயணம் சென்று அக்கால ராணியைப் போல் தோற்றம் அளிக்கிறார்கள். காதி ஆடைகளில் பெண்களின் மேலாடையில் கை பகுதிகளில் கயிறுகள் கோர்த்த வண்ணம் செய்யப்படும் ஆடைகள் இப்போது இந்திய அளவில் அதிகமாக விற்பனையாகி வருகிறது.

மேலும் படிக்க – முகத்தில் உடனடி பொலிவை பெறுவதற்கு இதை செய்யுங்கள்.!

இண்டிகோ நிற ஆடைகள்

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் கருப்பு நிற ஆடையை அதிகமாக அணிவார்கள். ஏனென்றால், பார்த்த உடன் உடனடியாக எல்லோர் மனதையும் கவரும் தோற்றம் கருப்பு நிற ஆடையை அணிவது மூலமாக கிடைக்கிறது. ஆனால் இப்போது கருப்புக்கு மாற்றாக இன்டிகோ நிற ஆடைகளை அணிகிறார்கள். இந்த ஆடைகளை கொண்டு கைகள் இல்லாத சிறிய வகை ஆடைகளை அணிகிறார்கள். ஆண்கள் லெனின் ஷர்ட்களை அணிவதில் அதிகமான ஆர்வத்தை காட்டி வருகிறார்கள்.

இந்திய பாரம்பரிய ஆடைகள்

ரேமண்ட் மற்றும் வில்ஸ் லைஃப் ஸ்டைலில் கிடைக்கும் இந்திய பாரம்பரிய ஆடைகள் ஆண்களின் அழகை ஒரு படி மேலே தூக்கி செல்லும் அளவிற்கு இருக்கிறது. சாதாரணமாக ஆண் வெண்ணிற ஆடைகளை அணிந்தாலும் அதைப்பற்றிய கருத்துக்கள் பெண்கள் நேர்மறையாக சொல்வார்கள். ஆனால், இந்த ரக ஆடைகளை அணிவதன் மூலம் ஆண்களுக்கு ஆடைகளே நேர்மறையான கருத்துகளை அளிப்பார்கள்.

மேலும் படிக்க – மகத்துவம் நிறைந்த மருத்துவ வெட்டி வேர்

கருப்பு-வெள்ளை கிரே

இந்த வண்ண நிறங்களை ஒன்றுசேர்த்து கட்ட வடிவில் ஒவ்வொரு வரிசையாக செய்து தயாரிக்கப்படும் ஆடைகளின் விற்பனை அதிகமாக உள்ளது. இதுபோன்ற ஆடைகளின் நாம் எந்த இடத்திற்கும் அணிந்து செல்லலாம், அதேபோல் இதற்கான ஆக்சஸரீஸ் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். பொதுவான ஒரு அழகை கொண்டுள்ளது இந்த ரக ஆடைகள்.

ட்ரெண்டிங் சாரீஸ்

பெண்கள் வேலைப்பாடுகள் அதிகம் உள்ள மேலாடையை அணிந்து அதற்கு எதிர் வண்ணத்தில் புடவை அணிவார்கள். ஆனால் இந்த வருட ட்ரெண்டிங்கில் இருக்கும் புடவை எதுவென்றால் மேல் ஆடைக்கு பதிலாக விளையாட்டு சமயங்களில் போடப்படும் மேலாடையை அணிந்து லெனின் துணியால் செய்யப்பட்ட புடவை, அதற்கு கீழ் பென்சில் பிட் ஜீன்ஸ் அணிகிறார்கள். ஆரம்பத்தில் இதை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் இன்று பல பெண்கள் பல கொண்டாட்டங்களில் இதுபோன்ற ஆடைகளை அணிந்து வருகிறார்கள்.

மேலும் படிக்க – தமிழ் சினிமா பிரபலங்களின் ஆரோக்கியம் மற்றும் சருமத்தை பாதுகாக்கும் உணவுகள்..!

கலைநயமிக்க ஆடைகள்

ஆடைகளில் எம்ப்ராய்டரி மற்றும் கற்களை பதித்தவாறு காக்ரா சோளிகள் அதிகமாக அங்காடிகளில் விற்பனையாகிறது. கருநீலம், நீலம் ஆடைகள் எல்லோர் மனதையும் கொள்ளை கொள்ளும் அளவிற்கு இருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நிச்சயம் இது போன்ற ஆடைகளை வாங்காத பெண் இருப்பது அரிது.

போகிமேனியா பிரைடல்

திருமணத்திற்கு நாம் பாரம்பரிய முறையிலான புடவைகளை அணிந்து செல்வோம். ஆனால், திருமண நிகழ்ச்சிக்கு ஏற்றார்போல் மணப்பெண்ணுக்கு இணையாக பிரைடல் புடவை ஒன்று அறிமுகமாகியுள்ளது. புடவை மற்றும் ஜாக்கெட் இரண்டும் ஒன்றாக இணைந்தவாறு அதன் வரிசைகள் இருக்கின்றன. வண்ணங்கள் மாறுபட்டாலும் அதன் மேல் போடப்பட்ட கோடுகள் இணைந்துள்ளது. இரண்டும் வெவ்வேறு ஆடைகள் என்பதை அருகில் சென்று பார்த்தால்தான் தெரிகிறது. இது பற்றி பட்டினால் செய்யப்படாவிட்டாலும் பார்ப்பதற்கு பட்டை போலிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்களில் இது அதிகமாக விற்பனையாகிறது.

இதை தவிர்த்து ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் ஏராளமான புது ரக ஆடைகள் இந்த வருடம் எல்லா அங்காடிகளிலும் கிடைக்கின்றன. நீங்கள் ஆடை விரும்பிகளாக இருந்தாள் எந்த ஆடை உங்களை மிகவும் கவர்ந்தது என்பதை இந்த பதிவின் கீழ் கருத்துக்களாக வெளியிடலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன