காதலர் தினத்தில் கலக்கலான திட்டங்களோட ஜமாயுங்க!

  • by
What is the Plan to Celebrate Valentines Day

ஒவ்வொரு வருடமும் நாம் அன்னையர் தினம், ஆசிரியர் தினம் என எதை மறந்தாலும் காதலர் தினத்தை மட்டும் நாம் மறக்கமாட்டோம். ஏனென்றால் அதை சார்ந்த பல இளைஞர்கள் வாழ்கிறார்கள் எனவே இவர்கள் தங்களின் காதலர் தினத்தை எங்கே, எப்படிக் கொண்டாடலாம் என்பதற்கான தெளிவான திட்டங்களை இந்த பதிவில் காணலாம்.

காதலை சொல்வதற்கான சரியான நாள்

இதுவரை நீங்கள் “சிங்கிள் தான் கெத்து” என்ற எண்ணத்தில் இருப்பவராக இருந்தால், இப்போது காதல் வாழ்க்கையில் இணைய விரும்புகிறீர்கள் என்றால். உங்கள் காதலை சொல்ல சரியான நாள் இதுவாகும். எனவே எல்லா பயங்களையும், தயக்கத்தையும் ஒதுக்கிவிட்டு இந்த தினத்தில் உங்கள் காதலை உங்களுக்கு பிடித்த பெண்ணிடம் தைரியமாக சொல்லுங்கள். அதை அவர் ஏற்றுக் கொண்டாள். இது உங்களுக்கான காதலர் தினம் இல்லை என்றால் உங்கள் முயற்சியை அடுத்த வருடம் வேறு ஒரு பெண்ணிடம் தொடருங்கள். எந்த வகையிலும் உங்கள் காதலை நிராகரித்த பெண்ணை துன்புறுத்துவது உண்மையான காதலாக இருக்காது.

மேலும் படிக்க – தோழியே வாழ்க்கை துணைவியானால் தொடுவானம் தொட்டுச் செல்லும்..!

காதலில் இருப்பவர்கள் செய்ய வேண்டியவை

காதலர் தினத்தன்று நாம் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டும் போதாது, மற்ற 365 நாட்களும் நாம் மகிழ்ச்சியாக இருப்பதே உண்மையான காதலர் தின கொண்டாட்டம். எனவே உங்கள் காதலி அல்லது காதலனை மதித்து அவருக்கான வாழ்க்கையை வாழ அனுமதித்து அவரைப் புரிந்து நடப்பதன் மூலமாக தான் உங்கள் காதலர் தினம் முழுமையடையும். காதலர்களுக்குள் எவ்வகையான பிரச்சினைகள் இருந்தாலும் அதை பேசி நல்ல நிலைக்கு கொண்டு வருவதே உண்மையான காதலின் செயல். எனவே காதலிப்பவர்கள் காதலர் தினத்தை வீணாக்காமல் அவர்களை நன்கு புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்வதே சிறந்ததாகும்.

முதல் காதல்

இது நீங்கள் காதலித்த முதல் காதலர் தினமாக இருந்தால் அவர்களுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை பரிசுகளை வாங்கி தாருங்கள். அதேபோல் இனிப்புகள், பூக்கள், அவர்களுக்கு பிடித்த பரிசுகள் என எல்லாவற்றின் மூலமாக உங்கள் காதலி அல்லது காதலனை சந்தோஷப்படுங்கள். அதை தவிர்த்து உங்கள் துணையுடன் பரிசுகளை எதிர்ப்பதை நிறுத்துங்கள். ஏனென்றால் சில சமயங்களில் இதன் மூலமாக உங்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைக்கலாம். எனவே எப்போதும் ஒருதலை காதலை போல் ஒரு தலை பரிசாக எண்ணுங்கள்.

மேலும் படிக்க – வாயை மூடி பேசும் காதலுக்குள் வம்பு இருக்காது

அனுபவமுள்ள காதலர்கள்

ஒரு சிலர் பல காதலர் தினத்தை கடந்து வந்திருப்பார்கள். இவர்கள் ஒரு காதலியுடன் அல்லது காதலுடன் பல வருடங்களாக காதலை கொண்டவர்களாக இருந்தால் உங்களின் மற்ற காதலர் தினங்களில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை பற்றி பேசி ஏதேனும் சுற்றுலா செல்வது சிறந்ததாக இருக்கும். அதை தவிர்த்து இருவரும் ஒரே அறையில் பலமணிநேரம் கழிப்பதை தவிர்க்க வேண்டும். அதுவே ஏற்கனவே காதலித்து அந்த காதல் பிரிந்து வேறொரு காதலி அல்லது காதலன் உடன் காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள் என்றால் உங்கள் பழைய காதலின் நினைவுகளை மீண்டும் கொண்டுவராமல் புதியதாக ஒரு காதல் அனுபவத்தை உண்டாக்குங்கள். இதுவே உங்கள் காதல் பலத்தை அதிகரிக்கும்.

காதலித்து திருமணம் ஆனவர்கள்

ஒரு சில காதலர்கள் அவர்கள் காதல் திருமணத்தில் முடிந்துவிட்டால், காதலர் தினத்தை பெரிதாகக் கொண்டாட மாட்டார்கள். அவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு இதுதான், உங்கள் காதல் உண்மையாக இருந்தால் காதலர் தினத்தன்று நீங்கள் ஒரு காதலராக உணர்ந்து அதற்கேற்ப கொண்டாட்டங்களில் செய்வது சிறந்தது. எனவே காதலர் தினத்தன்று காதலன் காதலிக்கு என்னவெல்லாம் செய்வார்களோ அதை உங்கள் காதலிக்கு செய்யுங்கள். இது உங்கள் உறவை மேலும் வலுவடையச் செய்யும்.

மேலும் படிக்க – காதலில் இந்த இணைப்பு இருக்க வேண்டும்!

பிரிந்த காதல் ஒன்றிணையும்

காதல் முறிவை தொடர்ந்து உங்கள் நினைவெல்லாம் உங்கள் காதலன் அல்லது காதலியாகவே இருக்கிறீர்கள் என்றால் உங்கள் காதலை மீண்டும் இணைப்பதற்கு சிறந்த நாள் காதலர் தினம். எனவே உங்கள் ஈகோ, கோபம் என எல்லாவற்றையும் துறந்து உங்கள் காதலியிடம் சென்று மன்னிப்பு கேளுங்கள். அதுவே சிறந்த காதலுக்கான முன்னுதாரணமாக இருக்கும்.

மீண்டும் இணைந்த காதலர்கள் எதுவாக இருந்தாலும் முதலில் இருந்து தொடங்குவதே சிறந்ததாகும். இதன் மூலமாக உங்கள் பழைய கால மோசமான அனுபவங்களை மறந்து விடுவீர்கள்.

பணமில்லா காதலர்கள்

இந்த காதலர் தினத்திற்கு நீங்கள் செலவு செய்ய பணம் ஏதும் இல்லை என்றால் கவலை வேண்டாம். உண்மை காதலுக்கு பண பரிமாற்றம் தேவையில்லை, இருந்தாலும் உங்களால் முடிந்த கைவினைப்பொருட்கள், கடிதங்கள் மூலமாக உங்கள் காதலை வெளிப்படுத்தலாம். அதை தவிர்த்து உங்கள் காதலி அல்லது காதலனுடன் நேரத்தை செலவழிப்பது மிகப்பெரிய செல்வமாகும். எனவே அதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் உங்கள் காதலர் தினத்தை ஒருவருக்கொருவர் காதல் பரிமாற்றம் செய்து காதலர் தினத்தை கொண்டாடுங்கள்.

எனவே இந்த காதலர் தினத்தன்று உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சந்தோஷமான நிகழ்வுகளை உருவாக்குங்கள், அதை தவிர்த்து அற்பமான சந்தோஷ்ங்களுக்காக ஏதேனும் தவறுகளை செய்துவிட்டு வாழ்க்கை முழுவதும் கவலைப்படுவதை தவிர்க்க வேண்டும். எனவே உண்மையான மற்றும் நல்ல காதல் ஒரு காதலர் தினத்தை எவ்வாறெல்லாம் கொண்டாட வேண்டுமோ அத்தகைய வழியில் கொண்டாடுவதே சிறந்தது ஆகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன