நவீன யுவதிகளின் யுனிக்கான உடைகள் ஒரு பார்வை..!

What is the latest update in Women's Wear

2000ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து பெண்கள் அணியும் ஆடையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதிலும் 2020 வந்துள்ள நிலையில் ஆடைகளின் தரம் மற்றும் விதம் எட்டாத உயரத்திற்கு சென்றுள்ளது. இதில் பெண்கள் தாங்கள் அணியும் ஆடையின் வகைகளை வெவ்வேறு விதமாக அமைத்துக் கொண்டே செல்கிறார்கள். இதெல்லாம் ஃபேஷன என்று நினைத்த ஆடைகள் இன்று இதுதான் ஃபேஷன் என்ற நிலைக்கு வந்துள்ளது. அப்பேற்பட்ட 2020இல் சிறந்த ஆடைகளாக கருதப்படும் ஆடைகளை இங்கே பார்ப்போம்.

காலனிக்குள் ஆடையை அணிவது

பழைய படங்களில் ரஜினிகாந்த் தனது ஆடைக்கு மேலாக தனது காலனியை அணிவார். இதுவே இக் காலத்தில் மிகப்பெரிய பேஷனாக மாறியுள்ளது. பெண்கள் கோடை காலத்திற்கு ஏற்றார் போல் தங்கள் ஆடையை வெவ்வேறு விதமான மாற்றிக்கொள்கிறார்கள், அதிலும் இந்த விதமான ஆடைகளின் வரவு மிகவும் அதிகரித்துள்ளது. தங்களின் கால் சட்டைகள் சேதம் அடையாமல் இருப்பதற்கும் புதுரக ஆடையை அணிவதற்கும் இதுபோன்ற ஆடைகளை பெண்கள் அதிகமாக விரும்புகிறார்கள்.

மேலும் படிக்க – இந்திய ஃபேசன் மார்க்கெட்டில் ஹிட் அடித்த டிரெண்டுகள்..!

பெரிய ரக விக்டோரியா கைகள்

அக்கால மகாராணி விக்டோரியா தாங்கள் அணியும் ஆடையின் கைகள் மட்டும் சற்று பெரிதாக இருக்கும். அதை பப் டைப் என்போம். இவை இக்காலத்தில் ஃபேஷனாக அணிகிறோம்.

பெண்கள் தாங்கள் அணியும் சாதாரண ஆடைகள் முதல் மிடி போன்ற மேலாடைகள் வரை எல்லாவற்றிற்கும் இதுபோன்ற கைகளை அமைத்துக் கொள்ளலாம். இந்த வகை கைகள் பெண்களை மேலும் அழகாக காண்பிக்கிறது இதனால் பெண்கள் இதை அதிகமாக விரும்புகிறார்கள்.

சாதாரண ஆடைக்கு பெரிய காலணிகள்

பெண்களின் கால்கள் எப்போதும் மிக அழகாக இருக்கும். அதை அவர்கள் அலங்கரிப்பதற்காக அணியப்படும் காலணிகள் அவர்களை அழகாக காண்பிப்பது மட்டுமல்லாமல் அவர்களின் முழு தோற்றத்தையும் அழகாக காண்பிக்கும். இதனால் பெரிய ரக காலணிகளுடன் நாம் எந்த ஒரு மேலாடையை அணிந்தாளும் நாம் மிக அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்போம்.

மேலும் படிக்க – வீட்டிலிருந்தபடியே சர்மத்தில் ஏற்படும் வெள்ளைத் திட்டுகளை அகற்றுவது எப்படி?

தோலால் செய்யப்பட்ட கோட்

சமீபத்தில் பெண்கள் மிக மெலிதாக இருக்கும் துணிகளை கொண்ட மேல் உடையை அணிகிறார்கள். இதற்கு சற்று மாறாக வெளிநாடுகளில் பெண்கள் அணிவது போல் தோலினால் செய்யப்பட்ட கோட்டை அணிவது இப்போது ஃபேஷனாக மாறியுள்ளது. பெண்கள் எந்த ஒரு ஆடை அணிந்தாலும் அதற்கு மேல் கருப்பு அல்லது ப்ரவுன் நிற கோட்டை அணிவதன் மூலம் அவர்களை கிளாஸ்சாக காண்பிக்கலாம்.

மேலும் படிக்க – அழகை அதிகரிக்கும் கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்..!

சரியான உபகரணங்கள்

பெண்கள் அணியும் ஆடுகளுக்கு ஏற்றார்போல் சரியான உபகரணங்களை அவர்கள் அணிய வேண்டும். இப்போது இருக்கும் காலங்களில் ஃபேஷன் என்ற பெயரில் பெண்கள் அவர்கள் தலைக்கு தொப்பி, இடுப்புக்கு பெல்ட் மற்றும் தங்கள் ஆணைக்கு ஏற்றார்போல் பணப்பை மற்றும் காலணிகளை தேர்ந்தெடுத்த அணிகிறார்கள்.

இதனால் அவர்களின் ஆடைகள் அழகின் முழுமையடைகிறது. இதைத் தவிர்த்து மற்றவர்களிடமிருந்து இவர்களை தனிமைப்படுத்தி வைக்கும் அளவிற்கு இவர்களின் ஆடை இருக்கிறது. எனவே இது போன்ற ஆடைகளை அணிந்து நீங்களும் உங்கள் ரசனையை எல்லோருக்கும் உணர்த்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன