கனடா நாட்டுக் கொடியில் இருக்கும் மாப்பில் இலையின் வரலாறு..!

  • by
what is the history of maple leaves

மாப்பில் மரத்தில் அதிகளவில் காணப்படும் இந்த மாப்பில் இலைகள் கனடா நாட்டின் அடையாளமாக இருக்கிறது. ஒரு நாட்டின் பெருமையை எடுத்துச் சொல்லும் அவர்களின் தேசியக்கொடியில் இந்த மாப்பில் இலை பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம், இதன் வரலாறை இப்போது காணலாம்.

மாப்பில் இலையின் வரலாறு

1700இல் இந்த மாப்பில் இலையை பிரெஞ்சு கனடா நாடு தங்களின் அடையாளமாக வைத்தார்கள். அவர்கள் நாட்டில் அதிக அளவில் காணப்படும் இந்த மரத்தின் இலையை அவர்களின் பெருமையாக கருதி தங்கள் நாட்டின் கொடிகளில் இந்த இலையை வரைந்தார்கள். அதைத் தவிர்த்து எல்லா பெருமைக்குரிய விஷயங்களிலும் இந்த இலையைப் வரைந்தார்கள்.

மேலும் படிக்க – இந்தியாவில் புகழைப் பறைசாற்றும் வரலாற்று சின்னங்கள்!

காடுகளின் ராஜா

மாப்பில் இலையை கனடா நாட்டவர்கள் அவர்களின் காடுகளில் ராஜாவாக கருதினார்கள். இதைத் தவிர்த்து, அவர்களின் அடையாளமாக இந்த இலையை நம்பினார்கள். 1868 ஆம் ஆண்டு மற்றும் 1921ம் ஆண்டு இந்த இலையை தங்கள் படைகளில் அடையாளமாகவும் வைத்துக் கொண்டார்கள்.

தேசிய அடையாளம்

கன்னட தேசிய கீதம் மற்றும் பல பாடல்களில் இந்த இலையின் புகழைப் பற்றி பாடியுள்ளார்கள். இதை புனிதமாகவும் மற்றும் மதிக்கத்தக்க ஒரு மரமாக கண்ட மக்கள் அனைவரும் பார்க்கிறார்கள். கன்னட நாடுகளில் மட்டும் அதிகளவில் காணப்படும் இந்த மரம் அவர்களின் பூமியை சொர்க்க பூமியாக மாற்றி உள்ளது என்று பலராலும் நம்பப்படுகிறது.

மேலும் படிக்க – பழங்குடியினர்களின் உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள்..!

நாணயங்கள்

இந்த இலையை அவர்களின் நாணயங்களில் அச்சிட்டார்கள். அதைத்தொடர்ந்து உலகப்போர் நடக்கையில் அவர்களின் ராணுவ அடையாளமாகவும் இந்த இலையை பயன்படுத்தினார்கள்.

எல்லா நாடுகளும் அந்த நாட்டின் சிறப்பு வாய்ந்த ஏதாவது ஒரு மிருகங்களையும் அல்லது பறவையோ தங்களின் அடையாளமாக வைத்துக் கொள்வார்கள் ஆனால் கனடா நாட்டவர்கள் சற்று புதுமையான முறையில் இந்த இலையை தங்களின் அடையாளமாக வைத்துள்ளார்கள். இதன் மூலமாக அவர்கள் இயற்கைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பது புரிகிறது. ஒரு இலைக்கு இவ்வளவு பெரிய வரலாற்றை உருவாக்கிய பெருமை கண்ட நாட்டவர்களுக்கு உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன