பேலியோ உணவு: உடல் எடை குறைக்குமா?

 • by

பேலியோ உணவு என்பது மனிதர்களுக்கு புதிது அல்ல, பாலியோலிதிக் காலத்தில் சாப்பிட்டதைப் போன்ற உணவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு உணவுத் திட்டம் தான் இது. சுமார் 2.4 மில்லியன் முதல் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பேலியோ உணவு முறை இருந்துள்ளது.

பேலியோ உணவில் பொதுவாக குறைந்த அளவிலான மீன், இறைச்சிகள், பழங்கள், காய்கறிகள், மற்றும் நட்ஸ்கள் ஆகியவை இருக்கும்.

முன்பிருந்த காலங்களில் வேட்டையாடி சேகரிப்பதன் மூலம் பெறக்கூடிய உணவுகள் தான் இவை, இந்த உணவுகளில் பால் பொருட்கள், பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் அடங்கும்.

இந்த உணவு முறைக்கு பாலியோலிதிக் உணவு, வேட்டைக்காரர் உணவு மற்றும் கற்கால உணவு என்ற பெயர்களும் உண்டு.

பேலியோ உணவிற்க்கான தற்போதைய அவசியம்:

மேலும் படிக்க –  குறைந்த கார்போஹைட்ரேட் உணவு மட்டும் போதுமா?

இந்த பேலியோ உணவின் முக்கிய நோக்கம் ஆரம்பகால மனிதர்கள் சாப்பிட்டதைப் போன்ற ஒரு உணவு முறைக்கு நம்மை திருப்புவதாகும்.

விவசாய நடைமுறைகளுடன் தோன்றிய நவீன உணவுக்கு மனித உடல் மரபணு ரீதியாக இது பொருந்த சற்று காலமாகும் இருப்பினும் இது அதீத நன்மை பயக்கும் ஒரு உணவு முறை.

இப்போதுள்ள உணவுமுறைகள் கிராமத்தில் இருக்கும் மக்களும் நகர மக்கள் போல் தங்கள் உணவில் பலவித மாற்றங்களை கொண்டுவந்துள்ளனர்.

இத்தகைய புதிய உணவு முறையால் உடலின் தகவமைப்பு மாற்றம், உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய் பரவுவதற்கு ஒரு காரணியாக கருதப்படுகிறது.

பேலியோ உணவைப் ஏன் பின்பற்ற வேண்டும்:

பேலியோ உணவைப் பின்பற்ற இரு முக்கிய காரணங்கள் உள்ளது. அவை

 • உடல் எடையை குறைக்க அல்லது ஆரோக்கியமான எடையை பராமரிக்க விரும்புதல்.
 • உணவைத் திட்டமிட உதவுதல்.

இப்போதுள்ள காலகட்டத்தில் உடனடியாக மக்கள் இந்த முறைக்கு மாறுவது சற்றே கடினம் ஏனென்னில் பல ஆண்டுகளாக இருக்கின்ற உணவு முறைக்கு பழக்கமாகிவிட்டதால் அவர்கள் மாறுவதற்கு சிறு தயக்கம் இருக்கும். மேலும் இப்போதுள்ள உணவில் பல வகையான சுவைகள் இருப்பதால் அவற்றிற்கு மக்கள் அடிமைகளாக உள்ளதும் ஒரு காரணம்.

பேலியோ உணவின் விவரங்கள் :

இப்போது பல இடங்களில் இந்த பேலியோ உணவு முறை சந்தைமயமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு இதன் பரிந்துரைகள் வேறுபடுகின்றன, மேலும் சில உணவுத் திட்டங்கள் மற்றவர்களை விட கடுமையான வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளன. இதை நாமே வீட்டில் செய்யலாம். பொதுவாக, பேலியோ உணவுகள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகின்றன.

எதையெல்லாம் சாப்பிடலாம்:

கீழ்காணும் உணவுகள் அக்கால மக்களால் உண்ணப்பட்டது இன்றும் இதை ஒரு சிலரே எடுத்துக்கொள்கிறார்கள்,

 • காய்கறிகள்
 • பழங்கள்
 • குறைந்த அளவு இறைச்சிகள்
 • நட்ஸ்
 • குறைந்த அளவு கிழங்குகள், தேன்
 • மீன் அதிலும் குறிப்பாக கானாங்கெளுத்தி, சால்மன் போன்ற ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்கள்.
 • ஆலிவ் எண்ணெய் / வாதுமை கொட்டை எண்ணெய்

மேலும் படிக்க – நீங்கள் செய்யும் அனைத்து செயலிலும் வெற்றி வேண்டுமா-அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது யோகா..! 

எதையெல்லாம் சாப்பிடக்கூடாது:

பின்வரும் உணவுகளை ஒருவர் பேலியோ முறையை பின்பற்றுகிறார் என்றால் நிச்சயம் தொடக்கூடாது.

 • கோதுமை, ஓட்ஸ் மற்றும் பார்லி போன்ற தானியங்கள்
 • பால் பொருட்கள்
 • பருப்பு வகைகள், பீன்ஸ், பயறு வகைகள், நிலக்கடலை மற்றும் பட்டாணி
 • உப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை
 • உருளைக்கிழங்கு
 • பதப்படுத்தப்பட்ட உணவுகள்

இதன் முடிவுகள்:

பல சீரற்ற மருத்துவ பரிசோதனைகள் பேலியோ உணவை நீரிழிவு உணவு போன்ற பிற உணவுத் திட்டங்களுடன் ஒப்பிட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, பழங்கள், காய்கறிகள், குறைந்த அளவிலான இறைச்சிகள், தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களின் உணவுகளுடன் ஒப்பிடும்போது பேலியோ உணவு சில நன்மைகளைத் தரக்கூடும் என்று இந்த சோதனைகள் தெரிவிக்கின்றன.
இதனால் விளையும் நன்மைகள் பின்வருமாறு:

மேலும் படிக்க – பிரபலமான யோகா நிலையும் அதன் நன்மைகளும்..!

 • உடல் எடை இழப்பு
 • உணவு மேலாண்மை
 • மேம்படுத்தப்பட்ட குளுக்கோஸ்
 • குறைந்த ட்ரைகிளிசரைடுகள்
 • சிறந்த இரத்த அழுத்தக் கட்டுப்பாடு

இது போன்றதொரு பயனளிக்கும் உணவுமுறைகள் அன்றே நம் முன்னோர்கள் மேற்கொண்டதை நாமும் மேற்கொண்டால் நம் வாழும் காலத்தில் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை நம்மால் வாழ முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன