கர்ம யோகம் என்றால் என்ன..!

  • by
what is mean by karma yoga

யோகாவில் உள்ள நான்கு யோகங்களில் கர்மயோகம் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. கர்ம யோகம் என்பது நீங்கள் செய்யும் செயல்கள் என்று பலரும் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் கர்ம யோகம் என்பது எப்போது ஒரு செயலினால் உங்களை நீங்களே சந்தோஷப்படுத்தி கொள்கிறீர்களோ அது தான் கர்மயோகம்.

கர்மயோக விளக்கம்

கடும் முயற்சியால் நீங்கள் செய்யப்படும் எந்த செயலாக இருந்தாலும் அது வெறும் கர்ம மட்டும்தான், யோக இருக்காது. நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களில் மூலமாக தான் நம்முடைய கர்மா நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் கர்ம யோகம் என்பது உங்கள் செயலை திணிப்பதற்கு பதிலாக உங்கள் விடுதலைக்கு வழி வகுத்தால்.

மேலும் படிக்க – மகத்துவமான மாசி மகம் கொண்டாட்டங்கள்

ஈடுபாடுடன் செய்யும் செயல்

ஒரு நாளைக்கு நீங்கள் பலவிதமான வேலைகளை செய்கிறார்கள், ஆனால் ஒவ்வொரு வேலையையும் ஏதோ செய்கிறோமோ என்ற செய்யாமல் முழு ஈடுபாடுடன் அதன்மேல் அக்கறையுடன் செய்யப்படுவதே சிறந்த செயல்தான் உங்கள் கர்ம யோகமாக மாறுகிறது. எனவே எல்லா செயல்களிலும் தேவைகளை நன்கு அறிந்து அதற்கான யோசனையை வகுத்து அதனால் கிடைக்கப்போகும் நன்மை ஏதும் எதிர்பார்க்காமல் செய்யப்படுதே கர்ம யோகம்.

பலருக்கு நன்மை செய்தல்

அக்கால சத்குருக்கள் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் முழு ஈடுபாடுடன் பல கிராமங்களுக்கு சென்று பலருக்கு ஆசீர்வாதத்தை அளித்து அவர்களுக்கு போதுமான அறிவையும் அளித்து வந்தார்கள். இந்த செயல்களை செய்யும் போது அவர் முழு மனதுடன் முழு ஈடுபாட்டுடன் இருப்பார். இவருடன் இருக்கும் சீடர்கள் தன் குருவின் பாதையை அரை மனதோடு பின் தொடர்வார்கள். எப்போது அவர்கள் முழுமையாக பின்தொடர்கிறார்களே அவர்களின் செய்யலும் கர்ம யோகத்தில் சேரும்.

வலுக்கட்டாயமாக செய்யும் செயல்

நம்முடைய வேலைகளை ஈடுபாடு இல்லாமல் அதை வலுக்கட்டாயமாக செய்தால் அது வெறும் செயலாக இருக்கும். அதுவே மகிழ்ச்சியுடன் அன்புடன், இணைப்புடன் செய்யும் வேலைகள் கர்ம யோகம். ஒரு சிலர் தங்கள் அலுவலகத்திற்கு சென்று தன் மேலதிகாரி சொல்லும் செயலை ஈடுபாடு இல்லாமல் அப்படியே செய்து முடிப்பார்கள். அதுவே உங்கள் வேலையை முழு ஈடுபாடுடன் அதில் நீங்கள் தான் முதன்மை வகிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்வதே சிறந்தது. அதுதான் உங்களுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை உண்டாக்கும்.

மேலும் படிக்க – உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்கும் எளிய மூச்சுப் பயிற்சி.!

கர்ம யோகா கதை

குருஜிகள் ஐரோப்பியாவில் தனது மையத்தை தொடங்கினார். இதில் இவருடன் இணைவதற்காக பல சிஷ்யர்கள் வந்தார்கள். பின்பு அவர்கள் அனைவரையும் குழி தோண்ட சொன்னார், அவர்களும் காலை, மதியம், இரவு வரை உணவு மற்றும் இடைவெளி இல்லாமல் குழி தோண்டிக் கொண்டே இருந்தார்கள். பின்பு குருஜி அவர்களை குழியை மூடிவிட்டு எல்லோரும் சாப்பிட வாங்க என்றார். ஏன் எதற்கு தெரியாமல் தான் செய்யும் வேலையை முழு ஈடுபாடுடன் உணவு, தூக்கம் ஏது மில்லாமல் செய்வதின் மூலமாக கர்மயோகம் கிடைத்தது.

கர்மா என்பது நாம் செய்யும் செயல் தவறாக இருந்தால் நமக்கு ஏதாவது ஒரு வழியில் அந்த தவறு நிகழ்ந்துவிடும். அதேபோல் நன்றாக இருந்தால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். ஆனால் கர்ம யோகம் என்பது அதற்கெல்லாம் மேலானது. இதை ஆன்மீகத்தை பின்தொடர்பவர்கள் மட்டுமே பெற முடியும். இது ஒருவகையான யோகா என்பதினால் சக மனிதர்கள் தங்களது எண்ணம், சிந்தனை அனைத்தும் கட்டுப்படுத்தி கர்ம யோகத்தை பெறலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன