ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொடுத்த இந்தியா!

  • by

மலேரியா எதிர்ப்பு மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியை சிறப்பானது என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வர்ணித்துள்ளார். இது கோவிட் -19 க்கு சாத்தியமான சிகிச்சையாக கருதப்படுகிறது.  அசாதாரண காலங்களில் இந்தியாவின் உதவி இந்தியாவின் தேவை உளகிற்கே தேவைப்படுகின்றது. .

ஹைட்ராக்ஸி குளோரோகுயின்: 

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் இந்தியாவில்  மிகப்பெரிய அளவில் உற்பத்தியாகின்றது.  அமெரிக்காவுக்கு இதன் தட்டுப்பாடு இருந்தது. இதனை இந்தியா தடை செய்து வைத்தது. ஆனால் டிரம்பின் தொடர்  முயற்சியால் இந்தியா இதனை அமெரிக்காவுக்கு மருந்து ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்கியது. குஜராத்தை தளமாகக் கொண்ட மூன்று நிறுவனங்கள் இந்த மாத்திரைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி  அறிவித்தார். 

அமெரிக்க பிரதமர் நன்றி: 

லட்சக்கணக்கானோர் அமெரிக்காவில் பாதிப்பில் இருக்க இந்தியாவிடம்  ஹைட்ராக்ஸி குளோரோகுயின உற்பத்தி கைவசம் இருக்கின்றது. ட்டிரம் தொடர் முயற்சியால் இந்தியா இதனை திரும்பி கொடுத்தது.

இந்தியப் பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவித்து மாபெரும் அளவில் உதவியதாக கூறினார்.    டிரம்பின் இந்த கோரிக்கையை இந்தியா செவி சாய்த்து கொடுத்த உதவியானது, டிரம்பின் இந்தியப் பாசம் அதிகரிக்க காரணமானது. 

மேலும் படிக்க:வறுமைக் கோட்டிற்குக் கீழ் 40 கோடி மக்கள்..!

அமெரிக்காவின் நெருக்கடியான நேரத்தில் மோடி  செய்த உதவியானது உண்மையில் உணர்ச்சிப்பூர்வமானது. சிறப்பு மிக்க உதவியை இந்தியா செய்தது, இந்தியாவின் தயாள குணத்தை  காட்டுகின்றது. மோடி அமெரிக்காவின் இக்கட்டான நிலையை உணர்ந்து மோடி உதவியது சிறப்பானது ஆகும். இதனை எப்பொழுதும் மறக்க மாட்டோம் என்றார் டிரம்ப்.  உலகிற்கே மருந்து கொடுக்கும் ஆக்கச் சக்தி இந்தியா என்பதை இது சுட்டிக் காட்டியது. 

இந்தியாவில் கொரானா   பாதிப்பு அதிகமானால் அதனை இந்தியர்களுக்கு பயன்படுத்த வேண்டும் என இந்தியா திட்டமிட்டு  ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்வதை  தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். ஆனால் அமெரிக்காவின் இக்கட்டான நிலை கருதி இதனை  கொடுத்தது. ஆபத்தில் உதவிய உற்ற நட்பை என்றும் அமெரிக்கா நினைவு கொள்ளும் என டிரம்ப் செய்தி வெளியிட்டு , மோடியின் தலைமை சிறப்பான நிருபித்துள்ளார்.

மேலும் படிக்க:வைட்டமின் மற்றும் புரோட்டின்களில் இருக்கும் வித்தியாசம்..!

டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்து ட்ரம்ப்  வெளியிட்ட செய்தியை 60 ஆயிரம் பேர் ரீ டீட் செய்தனர் சுமார்  2 லட்சம் மக்கள் பார்த்து லைக் செய்துள்ளனர். அமெரிக்காவில் 4.3. லட்சம்  பேர் கொரானா பாதிப்படைந்துள்ளனர். 

கோவித்க்கு சிகிச்சை :

COVID-19 க்கு சாத்தியமான சிகிச்சையாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அடையாளம் காணப்பட்டுள்ளது, மேலும் இது நியூயார்க்கில் 1,500 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.  இது மக்களை காக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளது. 

இந்த மருந்தானது செயல்படும் என்று எதிர்பார்த்த டிரம்ப், COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 29 மில்லியனுக்கும் அதிகமான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வாங்கியுள்ளார்.   இது இக்கட்டான நேரத்தில் உதவிய இந்தியாவைப் பாராட்ட வைத்திருகின்றது. இந்தியாவின் நட்புறவில் இருக்கின்ற பலத்தை அதிகப்படுத்தியுள்ளது. 

இதில் உள்ள இன்னொரு தர்ம சங்கடம் என்னவென்றால் இந்தியாவுக்கு மற்ற நாடுகளும் கேட்கும் பட்சத்தில் இந்தியா என்ன செய்யும். இன்னும் இந்தியாவில் இந்த கொரானா  தொற்று அடுதடுத்த நிலைக்குப் போனால் இந்தியா எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதை இந்தியா நினைவில் கொள்ள வேண்டும். நிச்சயம் இது குறித்து இந்தியா திட்டமிட்டு செயல்படும் என்பது தெளிவாகின்றது.  எனவே அவசர காலத்தில் உதவிய இந்தியாவுக்கு ஆபத்பாந்தவன் என்ற பெயரும் கிடைத்துள்ளது.  அமெரிக்காவில் இந்த மருந்தானது தேவைப்படும் அளவில் இல்லை மேலும் இதன் கையிருப்பும் குறைவாக இருப்பதால் அமெரிக்கா இந்தியாவிடம் இந்த உதவியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மேலும் படிக்க: கொரானா குறித்த புரளியும் உண்மையும் அறிவோம் !

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன