நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன..!

  • by
what is immune power in human body

நோய் எதிர்ப்பு சக்தி என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா விலங்குகள் மற்றும் எல்லா உயிரினங்களுக்கும் இருக்கக்கூடிய ஒரு சக்தி. நம் உடலில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்த்து போராடும் பண்புகளைக் கொண்டது தான் இந்த நோய் எதிர்ப்பு சக்தி. நம்முடைய ரத்தத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையை பொறுத்துதான் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே உங்கள் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்கள் நம் உடலில் ஏற்படும் தொற்றுக்களை எதிர்த்து போராடும். இவை அனைத்திற்கும் காரணம் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள், அது எந்த அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது இதனால் நாம் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக வாழ முடியும்.

நோய்களைத் தடுக்கும்

எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே எல்லா ஜீவராசிகளுக்கும் இருக்கும், ஆனால் நம்முடைய உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறைகளினால் எதிர்ப்பு சக்தி குறைந்து நம்முடைய உடலில் பலவித பிரச்சினைகள் உண்டாகும். எனவே இதைத் தடுப்பதற்கு நாம் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.

மேலும் படிக்க – கரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம்..!

குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி

நமக்கு ஏற்படும் எல்லா வியாதிகளும் குழந்தைகளுக்கும் ஏற்படும், எனவே இதைத் தடுப்பதற்காக தான் குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களுக்கு தடுப்பூசிகள் மூலமாக தடுப்பு மருந்துகளை அளிக்கிறார்கள். இதன் மூலமாக வரவிருக்கும் வியாதிகளை எதிர்க்கும் மருந்தை உடலில் வளர செய்கிறார்கள். ஆனால் சமீபத்தில் உருவாகியுள்ள கொரோனா வைரஸ்க்கு எதிர்ப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்காத காரணத்தினால் இதை எதிர்த்து நம்மால் போராட முடியாது.

முதியவர்களின் எதிர்ப்பு பண்பு

வயது அதிகரிப்பால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே செல்லும். நம் உடலில் உள்ள அணுக்களின் ஆரோக்கியம் குறைந்து அதன் செயலும் வெகுவாக குறையும் இதனால் வயது அதிகரிப்பின் காரணத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அவர்களுக்கு பலவித பிரச்சினைகள் உண்டாகும்.

நோய் தொற்றுகள்

உங்களுக்கு உண்டாகும் புற்று நோய், இருதய நோய், நீரிழிவு நோய் போன்ற அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடினால் தான் தோன்றுகிறது. எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரியுங்கள். ஒருமுறை இதுபோன்ற பிரச்சினைகள் உண்டானால் அதை மீண்டும் சரி செய்வது சற்று கடினமே.

மேலும் படிக்க – சாப் ஸ்பார்கில் சரும கேசத்திற்கான சாம்பூ பார் வாங்கலாம்!

ஆரோக்கியமான உணவுகள்

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை காணலாம். மீன் உணவுகள், ப்ரோக்கோலி, ப்ளூபெர்ரி, மஞ்சள், சக்கரவள்ளி கிழங்கு, கீரை, இஞ்சி, பூண்டு, சூரியகாந்தி விதை, ஆரஞ்சு, பாதாம் போன்ற உணவுகளை எடுத்துக் கொண்டு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதைத் தவிர்த்து குடிப்பழக்கம் மற்றும் புகைப் பழக்கத்தை கைவிடுங்கள், தினமும் சிறிதளவு உடற்பயிற்சிகள் செய்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரியுங்கள்.

கொரோனா வைரஸ் மட்டுமல்ல உங்களை எந்த ஒரு பிரச்சினைகளும் அண்டாமல் இருப்பதற்கு நாம் இந்த உணவுகளை நம் உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும். இதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி உங்களுக்கு அதிகரிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன