மே மாதம் 29 ஆம் தேதி என்ன நடக்கப்போகிறது..!

  • by
what is going to happen on may 29 - abhigya anand

அபிக்கியா ஆனந்த் என்ற 14 வயது சிறுவன் உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றி சரியாக கணித்துள்ளான் என்று சமூக வலைத்தளங்களில் இவரின் புகழ் உச்சத்திற்கு சென்றுள்ளது. இதைத் தவிர்த்து ஒரு சில ஊடகங்களும் இவரைப் பற்றிய செய்திகளை வெளியிட்டு வருகிறது. அப்படி இந்தப் பதினான்கு வயது சிறுவன் என்ன தான் சொன்னான், மே 29-ஆம் தேதி என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.

அபிக்கியா ஆனந்த்

இச்சிறுவன் ஏழு வயதில் இருந்து ஜோதிடத்தையும் அதைப் பற்றிய தெளிவுகளையும் மக்களுக்கு காணொளி மூலமாக தெரியப்படுத்தி வந்துள்ளார். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நாட்டில் என்னென்ன நன்மைகள் மற்றும் தீமைகள் நடக்கப்போகிறது என்பதை பற்றி தன்னுடைய யூடியூப் பக்கமான கான்சயன்ஸ் என்ற சேனலை உருவாக்கி அதில் இவர் ஏராளமான காணொளிகளை பதிவிட்டு வந்துள்ளார். அதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பதிவிட்டிருந்த ஒரு காணொளியில் உலகம் முழுவதும் கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸ் கிருமியால் பாதிக்கப் போகிறது என்று குறிப்பிட்டு இருந்தார். அது அப்படியே இன்று நடந்து வருகிறது, எனவே எல்லா மக்களும் இவர் கணித்த இந்த சம்பவத்தை நினைத்து பூரிப்படைந்துள்ளார்கள்.

மேலும் படிக்க – கோடைக்காலத்தில் கொரோனாவின் தாக்கம் குறையும்..!

கொரோனா வைரஸ்

உலக மக்களை அதிகமாக பாதித்து வரும் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை பற்றி கூறியிருந்த அபிக்கியா ஆனந்த் அவர்கள் இந்த வைரஸ் தொற்று மே 29ஆம் தேதியிலிருந்து குறைய தொடங்கும் என்று கணித்துள்ளார். அதேபோல் ஒரு சில விஞ்ஞானிகளும் இந்த வைரஸ் தொற்றின் தாக்குதல் மே மாத இறுதியில் குறையும் என்று கூறியிருக்கிறார்கள். இது இரண்டும் ஒத்துப் போகும் நிலையில் இவர் சொன்ன அனைத்தையும் மக்கள் நம்பத் தொடங்கியுள்ளார்கள். கொரோனா வைரஸ் தாக்குதல் மேலும் ஒரு சில மாதங்கள் தொடரும் என ஒரு சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இருந்தும் இதுவரை இவர் சொன்ன எல்லாமே ஓரளவுக்கு நிகழ்ந்து வருவதினால் எதுவும் நிகழலாம் என்று மக்கள் கூறுகிறார்கள். ஒருவேளை இந்த சம்பவம் நடந்தாலும் இவர் மேல் உள்ள நம்பிக்கை மக்களிடையே பல மடங்கு அதிகரிக்கும்.

ஆனந்தின் கணிப்புகள்

அதேபோல் இந்த சிறுவன் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியடையும் என்று கூறியிருந்தார், ஆனால் சமீபத்தில் உலக சந்தையின் அடிப்படையில் இந்தியாவின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடுகையில் சற்று அதிகமாகவே உள்ளது. அதேபோல் இவரின் கடந்த காலத்தில் ஒரு சில கணிப்புகளை இவர் கூறி வந்தார் அதில் கிட்டத்தட்ட 30% மட்டுமே நடந்துள்ளது. எனவே இவர்கள் குறிப்பிட்ட ஒருசில செயல்கள் நிகழ்ந்தாளும், ஏராளமான கணிப்புகள் சாதாரண மனிதர்கள் கூட கணிக்கும் வகையில் இருந்துள்ளது.

மேலும் படிக்க – நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பஞ்சாமிர்தம்..!

ஜோதிடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்ன நிகழப்போகிறது என்று கணித்து கூறுவார்கள்.  ஆனால் நாம் எதிர்பார்ப்பதைவிட நாம் வாழ்க்கை வேறு பாதையில் செல்லக் கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். எனவே ஜோதிடத்தில் நடப்பது அப்படியே நம் வாழ்க்கையில் நடக்கும் என்பதற்கான 100% உத்தரவாதத்தை யாராலும் கொடுக்க முடியாது. அதே போல் இனி வரும் காலங்களில் இவர் சொல்வது அனைத்தும் பலிக்கும் என்று நம்புவது முட்டாள் தனமாகும். எதுவாக இருந்தாலும் மே 29ஆம் தேதி என்ன நடக்கிறதோ அதை பொருத்து இவரின் கணிப்பு தீர்மானிக்கப்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன