வேலைச் சலிப்பிற்க்கான அறிகுறிகளை கண்டறிதல் மற்றும் வேலை தொடர்பான மன அழுத்தத்திலிருந்து மீளுதல்…!

  • by

நீங்கள் வேலையில், வேலைச் சலிப்பை உணர்கிறீர்களா, இந்த பிரச்சனை உங்களுக்கு மட்டும் இல்லை; 89% இந்தியர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் மக்கள் வாழ்க்கையில் தவறான முடிவுகளை எடுக்கின்றார்.
இப்போதுள்ள கொரோனா வைரசால் அதிகமான மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதால், வேலைக்கும் வீட்டு வாழ்க்கைக்கும் இடையிலான எல்லைகள் மங்கலாகி வருவதால் வேலை தொடர்பான வேலைச் சலிப்பு அதிகரிக்கும். இந்த வேலைச் சலிப்பு அதிகமாகிவிட்டால், அது மேலும் பிரச்சனையை மோசமாக்கிவிடும்.

மேலும் படிக்க – மன அழுத்தமாக உணர்கிறீர்களா? உங்கள் மன அழுத்தத்தை கையாள உங்களுக்கு உதவ நாங்கள் உள்ளோம்…!

வேலைச் சலிப்பு என்றால் என்ன?

வேலைச் சலிப்பு என்பது வேலை தொடர்பான மன அழுத்தத்தின் ஒரு வகை. உலக சுகாதார அமைப்பு (WHO) அதன் சர்வதேச நோய்களின் வகைப்பாட்டில் (ஐ.சி.டி) வேலைச் சலிப்பு ஒரு ‘தொழில் நிகழ்வு’ என்று பட்டியலிடுகிறது. இது ஒரு மருத்துவ நிலையாக கருதப்படவில்லை என்றாலும், இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்றும், நீங்கள் சுகாதார சேவைகளை அடைய வழிவகுக்கும் என்றும் WHO குறிப்பிடுகிறது.

வேலைச் சலிப்பு வாழ்க்கைச் சூழ்நிலைகளால் ஒருவர் சோர்வுடனும் இருப்பதோடு அது தொடர்புடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் அந்நபரை மேலும் நிம்மதி இல்லாமல் செய்துவிடும்.

மேலும் படிக்க – நீங்கள் செய்யும் அனைத்து செயலிலும் வெற்றி வேண்டுமா-அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது யோகா..! 

வேலைச் சலிப்பிற்க்கான அறிகுறிகள்:

வேலைச் சலிப்பு, மன அழுத்தம் போன்ற பல அறிகுறிகளை உள்ளடக்கியது என்றாலும், வேலைச் சலிப்பை வேறுபடுத்தும் மூன்று குறிப்பிட்ட உணர்வுகள் உள்ளன:

  • சோர்வாக அல்லது களைப்பாக உணர்தல்.
  • உற்சாகமின்மை மற்றும் உங்கள் வேலையின் மீது எரிச்சல்.
  • உங்கள் வேலையைச் செய்வதற்கான திறன் குறைதல்.

பெரும்பாலும், வேலை சலிப்பு, சோகம் அல்லது நம்பிக்கையின்மை போன்ற மனச்சோர்வு அறிகுறிகளை விளைவிக்கும், மேலும் இது பலவிதமான எதிர்மறை உணர்ச்சிகளுக்கும் உடல் அறிகுறிகளுக்கும் வழிவகுக்கும்.

-விரக்தி அல்லது கோபம்
-செயலில் எரிச்சல்
-கவலை, அல்லது அமைதியின்மை
-தலைவலி, வயிற்று பிரச்சினைகள், உடல் வலி மேலும் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

வேலைச் சலிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:

இந்தியாவில் பணியாளர்கள் மத்தியில் அதிக வேலை சலிப்பு
இருப்பதாக, ஆய்வுகள் கூறுகிறது இது அவர்களின் வேலை செயல்திறனில் குறைந்த நம்பிக்கையைக் காட்டுவதாகவும், தங்கள் வேலையை விட்டு வெளியேற ஒருவித அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும் காட்டுகிறது.
வேலைச் சலிப்பிற்க்கான முக்கிய காரணங்கள் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன:

வேலையில் நியாயமற்ற முறை.
நிர்வகிக்க முடியாத பணிச்சுமை.
பணியில் தெளிவு இல்லாதது.
மேலாளரிடமிருந்து போதுமான தொடர்பு அல்லது ஆதரவு இல்லாதது. நம்பத்தகாத நேர அழுத்தம்.

வேலைச் சலிப்பிலிருந்து மீள்வது எப்படி:

மன அழுத்தத்தை கையாள்வதன் மூலம் வேலைச் சலிப்பை நிர்வகிக்க முடியும். உங்கள் வேலையின் எந்தெந்த பகுதிகள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அடையாளம் கண்டு அதை எளிமையாக்க முயலுங்கள். கிடைக்கும் சிறிய இடைவெளியில் பிடித்த பாடல், சமையல் அல்லது குழந்தைகளுடன் விளையாட்டு என மனதை மாற்றிக்கொள்ளுங்கள்.

உங்களின் பணியாளர்களுக்கு கூடுதல் கட்டுப்பாட்டைக் விதித்து,
பணியிடத்தில் குறுக்கீடுகள் மற்றும் சத்தத்தை குறைத்து, ஊழியர்களுக்கு அவர்களின் வேலையில் முழு சுதந்திரம் மற்றும் முழு உரிமையை கொடுங்கள்.
இயற்கை சூழலை அலுவலகத்தில் கொண்டு வாருங்கள், சிறு பூச்செடி, கொடிகளை பணியிடத்தில் வளர்த்தல்.

மேலும் படிக்க – யோகா சிகிச்சையும் தியான பயிற்சியின் விளைவுகளும்…!

பின்வரும் செயல்களை மேற்கொள்வதன் மூலம் வேலைச் சலிப்பில் இருந்து நீங்கள் விடுபடலாம்;
-> வேலை சம்பந்தமாக உங்கள் தலைமையிடம் பேசுங்கள்.
-> உங்கள் தூக்கத்தை நன்முறையில் வைத்துக்கொள்ளுங்கள்.
->சரியான உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
-> யோகா, தியானம் போன்றவற்றை செய்திடுங்கள்.
-> பணிபுரியும் இடத்தில் தேவையான உதவிகளை கேட்டுபெறுங்கள்.
-> பிடித்த உணவு, பிடித்த பாடலை கேளுங்கள்.
-> எப்போதும் இயற்கையோடு ஒன்றி இருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன