கொரோனாவை தடுத்த நாடுகளில் இருந்து இந்தியா இதை கற்றுக்கொள்ள வேண்டும்..!

  • by
what india should learn from other countries that controlled corona virus

கொரோனா வைரஸ் தாக்குதல் மற்ற நாடுகளில் குறைந்து வரும் சூழ்நிலையில் இந்தியாவில் மட்டும், இதனால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர் கொண்ட நாடுகளிலிருந்து இந்தியா சில வழிமுறைகளை கற்றுக் கொள்ள வேண்டும். அதில் சீனா, சவுத் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் எப்படி கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள் என்பதை நாம் அறியவேண்டும். அதே வழியை பின் தொடர்ந்தால் மட்டுமே இந்தியாவின் கொரோனாவின் தாக்குதலை நம்மால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். இல்லையெனில் இந்த தாக்குதல் அடுத்த ஆறு மாதத்திற்கு நம்மை காயப்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

படுக்கை வசதி

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிப்பதற்காக எல்லா மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி இருக்க வேண்டும். இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு தான் போதுமான அளவு படுக்கை வசதி இருக்கிறது. எனவே இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் அதை சமாளிக்கும் வகைகளில் நம்மிடம் போதுமான அளவு படுக்கை வசதிகள் இல்லை. எனவே இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளும் ஒன்றிணைத்து அதில் இருக்கும் படுக்கைகளை அதிகரித்தால் மட்டுமே இதன் பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். அமெரிக்காவில் பத்தில் இரண்டு பேருக்கு தான் படுக்கை வசதி இருக்கிறது, இருந்தாலும் அந்த நாட்டின் வைரஸ் தாக்குதலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. இதனால் அந்நாட்டின் சமூக தொற்றாக பறவி எல்லோரையும் பாதித்து வருகிறது.

மேலும் படிக்க – கொரானா குறித்த புரளியும் உண்மையும் அறிவோம் !

வெண்டிலேஷன்

கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்த நாடுகளில் முதலில் இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள் எதுவென்றால் அது வெண்டிலேஷன் மட்டும்தான். ஏன் என்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நிச்சயமாக இந்த மெஷினை பயன்படுத்த வேண்டும். இதன் மூலமாகவே அவர்கள் சுவாசிக்க முடியும். எனவே இதை மனதில் கொண்டு உடனடியாக சீனா, ஜப்பான் மற்றும் சவுத் கொரியா போன்ற நாடுகள் வெண்டிலேஷன் இறக்குமதியை அதிகரித்தது. இதனால் இந்த நாட்டில் கொரோனாவின் தாக்குதல் படிப்படியாக கீழ்நோக்கி குறைந்தது. இந்தியாவும் ஒரு வெண்டிலேஷன் மூலமாக இரண்டு பேருக்கு சுவாசத்தை அளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இதை மிகப் பாதுகாப்பான முறையில் செய்தால் மட்டுமே அந்த வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும்.

கட்டுப்படுத்தும் வழிகள்

கொரோனா வைரஸின் தாக்குதலை சீன அரசு மிக சிறந்த முறையில் கட்டுப்படுத்தியது. இதைத் தவிர்த்து இன்று கொரோனா வைரஸ் பாதிப்புகள் படிப்படியாக குறைந்த அனைத்து நாடும் இந்த வழியை பின்தொடர்ந்தது. அதாவது ஊரடங்கு சரியான முறையில் அமல்படுத்தியது. நாம் மாவட்டங்களின் எல்லை பகுதிகளை நாம் வேலிகளை அமைத்து ஊரடங்கு அமல்படுத்தி வருகிறோம், ஆனால் சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் ஊரடங்கை தெருவுக்குத் தெரு வேலிகளை போட்டு கட்டுப்பாட்டுடன் அமல்படுத்தியது. அவர்கள் உடனடியாக ராணுவத்தின் உதவியை கேட்டறிந்து மக்களை முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள்.

பரிசோதிக்கும் முறை

அதேபோல் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகமாக உள்ள நாடுகள் அனைத்துமே அந்த நாட்டு மக்களை அதிகமாக பரிசோதித்து வந்தார்கள். இதன் மூலமாக பாதிக்கப்பட்டவர்களை உடனடியாகக் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சைகளை அளித்து வந்தார்கள். ஆனால் இந்தியாவில் பரிசோதிக்கும் எண்ணிக்கைகள் மிகக் குறைந்த அளவே செய்து வருகிறது. அதற்கு பதிலாக பாதிப்புகள் இருக்கும் என சந்தேகிப்பவர்களை தனிமைப்படுத்தி அவர்கள் வீட்டிலேயே அடைந்து வருகிறார்கள். எனவே இந்த வைரஸ் தொற்றை முழுமையாக அழிப்பதற்கு இதுவரை யாருக்கெல்லாம் இந்த வைரஸ் தொற்று இருக்கிறதோ அவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது மட்டுமே தீர்வாக இருக்கும்.

கேரள மாநிலம்

இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்திய முதல் மாநிலமாக கேரளா மாநிலம் பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அதை சரியான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டின் மூலமாக இந்த வைரஸ் தொற்றை கேரள அரசு முழுமையாக குறைத்துள்ளது. கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டவர்களும் நாளுக்கு நாள் குணமடைந்து அவரவர் வீட்டிற்கு திரும்பி வருகிறார்கள். எனவே இவர்களின் அறிவுரையை பின் பற்றி இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களும் அதே வழியை பின் தொடர வேண்டும் என இந்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது.

மேலும் படிக்க – வைட்டமின் மற்றும் புரோட்டின்களில் இருக்கும் வித்தியாசம்..!

குணமடைந்தவர்கள் இரத்தம்

கொரோனா வயசிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களில் இருக்கும் பிளாஸ்மா என்று கருதப்படும் அவர்களின் ரத்தத்தின் ஒரு பகுதியை எடுத்து அதை வைரஸ் தாக்கப்பட்டவர்களுக்கு அளித்து வருகிறார்கள். இதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து குணமடைந்தவர்கள் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சீன அரசு மருந்தாக அளித்து வந்ததால் இந்த வைரஸ் தொற்றை அவர்களால் இந்தளவிற்கு  கட்டுப்படுத்த முடிந்தது.

மருத்துவமனைகளும், மருத்துவர்களும் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவைகள் அதிகமாக இருந்தால் மட்டுமே இந்த வைரஸ் தொற்றை நம்மால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். இல்லையெனில் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். எனவே மற்ற நாடுகள் இதை தடுப்பதற்கான என்னென்ன வழிகளை பின் தொடர்ந்தார்களே அதை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி நாமும் கொரோனா வைரஸை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன