லாக்டவுன் ஒருவேளை தொடர்ந்தால் என்ன செய்வது..!

  • by
what if lock down gets extended after april 14

கொரோனா வைரஸ் இந்திய முழுவதும் பரவாமல் இருப்பதற்காக மார்ச் 22ஆம் தேதி நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இரவு 12 மணி அளவில் லாக்டவுன் நிறைவடையும் என்று கூறியிருந்தது. இதை ஏராளமான மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் வருமானம் என அனைத்தும் முடங்கியுள்ள நிலையில் இந்த லாக்டவுன் முடிவை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ஆனால் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதினால் ஒருவேளை இந்த லாக்டவுன் நீடித்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெளிவாக காணலாம்.

லாக்டவுன் விளக்கம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களையும் காணொளி மூலம் சந்தித்து நாட்டின் நிலைமை மற்றும் நாட்டில் உள்ள பிரச்சினைகள் என அனைத்தையும் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து லாக்டவுனை விளக்கலாமா, வேண்டாம், அப்படி விலகினால் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றி குழுவாக ஆலோசித்தார்கள். ஒரு சில மாநில தலைவர்கள் நீட்டிக்க வேண்டும் என்றும், ஒரு சிலர் விவசாயத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்கள். இதைதொடர்ந்து லாக்டவுன் நீட்டிப்பது மற்றும் நிறைவு பெறுவதை பற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவலும் மத்திய அரசு அறிவிக்கவில்லை.

மேலும் படிக்க – தூய்மையான சூழல் நோயற்ற வாழ்வு..!

ஒருவேளை நீடித்தால்

ஒருவேளை லாக்டவுன் நீடித்தால் நாம் அனைவரின் மன நிலையையும் ஒரு நிலைப் படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்தால் இதுபோன்ற நீட்டிப்பை மத்திய அரசு அறிவிக்கும். மனிதரின் அன்றாட வாழ்க்கையைவிட அவர்களின் உயிர் மிக முக்கியமானது. எனவே உயிரை பாதுகாக்கும் இந்த லாக்டவுன் வழிமுறையை நீட்டிக்க  வாய்ப்புகள் இருக்கிறது. லாக்டவுனை சரிவர பின் படுத்தாத நாடுகளான அமெரிக்காவில் இன்று ஒரு நாளில் மட்டும் கிட்டத்தட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள். எனவே இது போல் அலட்சியம் காட்டாமல் நமது தேசத் தலைவர்கள் லாக்டவுனை நீடிக்கச் செய்யலாம்.

நீட்டிக்க காரணம்

கொரோனா வைரஸ் கண்ணுக்குத் தெரியாத ஒரு கொடிய கிருமியாகும். இது ஒருவரிடமிருந்து மற்றொருவர் மிக எளிதில் பரவக்கூடியது. பாதிக்கப்பட்டவர்கள் வெளியிடும் காற்றில் கூட இந்த வைரஸ் பரவுகிறது. இதனால் லாக்டவுன் நிறைவு பெற்றால் மக்கள், கூட்டம் கூட்டமாக தங்கள் அலுவலகம் மற்றும் பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதைத் தவிர்த்து மதக்கூட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களில் பங்கு பெறுபவர்கள் என எல்லோரையும் இந்த வைரஸ் தொற்று தாக்கிவிடும். இதனால் ஏற்படும் பாதிப்புகளை இந்திய மக்கள் இன்றுவரை பெரியதாக உணரவில்லை இதற்கு எடுத்துக்காட்டாக நரேந்திர மோடி அவர்கள் மக்கள் ஊக்கம் அடைவதற்காக வீட்டில் விளக்கேற்ற சொன்னார் ஆனால் இந்திய மக்கள் தவறாக புரிந்து கொண்டு தங்களால் முடிந்த பொருட்கள் அனைத்தையும் கூட்டம் கூட்டமாக எரித்து சாய்த்தார்கள், இதுபோன்ற செயல்களுக்கு பயந்து தான் லாக்டவுனை இந்திய அரசு நீட்டிக்க வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க – சீனர்கள் சாப்பிடும் அருவருப்பான உணவுகள்..!

லாக்டவுன் முடிவு

ஒருவேளை லாக்டவுன் முடிவுக்கு வந்தாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பார்கள். ஒரு சில முக்கிய நிறுவனங்களை மட்டும் செயல்பட கட்டளை இடுவார்கள். இதைத் தவிர்த்து வீட்டில் இருந்தபடியே வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்வார்கள். தேவாலயங்கள், கோவில்கள் மற்றும் மசூதிகள் என அனைத்தையும் மூடி வைக்கும்படி கேட்டுக் கொள்வார்கள். தேவையில்லாமல் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதை தடுப்பார்கள். லாங்டவுன் நிறைவு பெற்றாலும் மக்கள் சமூக இடைவெளியில்தான் பயணம் செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்துவார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று இன்றுவரை சமூக தொற்றாக மாறாமல் இருப்பதனாலேயே இந்த லாக்டவுன் நிறைவுபெறும் நிலையில் இருக்கிறது. ஆனால் இனி வரப்போகும் நாட்களில் இந்த வைரஸ் தொற்று அதிகரித்தாலோ அல்லது மக்கள் அலட்சியமாக இருந்தாலும் இந்த லாக்டவுன் நீடிக்க அதிகமான வாய்ப்புள்ளது, இது அனைத்தும் மக்களாகிய நம் கையில்தான் இருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன