அதிக குளிர்ச்சியால் தொண்டைக்கு வரும் ஆபத்து என்ன தெரியுமா???

  • by
what happens to your throat when you eat many icy products

கோடையில் வெயிலை சமாளிக்க நாம் அனைவரும் குளிர்ச்சியான ஐஸ்கிரீம், ஜூஸ் , போன்ற பொருட்களை அதிகமா சாப்பிடுகிறோம். இதனால் சிலருக்கு தொண்டை வலி ஏற்படும். இது எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா??? தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி காரணமாக தான் இந்த வலி ஏற்படுகிறது. இதை டான்சில் என்பார்கள்.

டான்சில் மூலம் ஏற்படும் விளைவுகள் அபாயகரமானதாக இருக்கின்றன. அதை உடனே சரி செய்வது நன்மை பயக்கும். அதை எவ்வாறு கண்டறிவது அதற்கான சிகிச்சை முறை  என்ன என்பதை விளக்கமாக பார்க்கலாம். 

டான்சில் எந்தப் பகுதியில் இருக்கும்?

டான்சில் என்பது ஒரு சுரப்பி. இது இயற்கையாகவே நம் வாய்க்குள் மூன்று இடங்களில் காணப்படுகிறது. தொண்டையின் உள் நாக்கு இரண்டு புறமும், நாக்குக்கு அடியிலும், மூக்குக்கு பின்னாலும், இந்த மூன்று இடங்களில் உள்ளன டான்சில். இவற்றின் முக்கிய பணி நம் சுவாசப் பாதைக்கும் உணவுப் பாதைக்கும் ஒரு பாதுகாப்பு வளையமாக செயல்படுவதுதான். 

மேலும் படிக்க – கேரட் ஆப்பிள் பழரசம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..!

டான்சிலின்முக்கியப் பணி என்ன?

நாம் உணவு உண்ணும் போதும், தண்ணீர் அருந்தும் போதும், அதிலுள்ள கிருமிகள் நம் தொண்டையை தாக்காத வண்ணம் பாதுகாத்துக் கொள்வதற்காக இருப்பதுதான் டான்சில். உணவு பொருட்கள் உள்ளே வரும்பொழுது அந்தத் தகவலை உடனே மூளைக்கு தெரிவிப்பது தொண்டையில் உள்ள டான்சில் தான். சில சமயங்களில் கிருமிகள் மிகவும் பலம் வாய்ந்ததாக இருப்பதால் அந்த கிருமிகளினால் டான்சில் பாதிக்கப்பட்டு விடுகிறது. இதனால்தான் தொண்டையில் வலி , ஒருவித வீக்கமும் ஏற்படுகிறது. 

டான்சில் திசுக்கள் தொடர்ந்து கிருமிகளோடு போராடுவதுதான் தொண்டையில் வீக்கம் ஏற்படக் காரணம்.இதை நாம் டான்சில் அலர்ஜி என்கிறோம்.

டான்சில் வீக்கத்திற்கு காரணமாகும் கிருமிகள் எவை?

பலம்வாய்ந்த கிருமிகளுடன் போராடுவதுதான் வீக்கம் ஏற்படுகிறது. பீட்டா ஹீமோ லைட்டிக் ஸ்ட்ரெப்டோகாகஸ் எனும் பாக்டீரியா கிருமி தான் இந்த வீக்கத்திற்கு முக்கிய காரணம். இதைத்தவிர ப்ளூ வைரஸ், டிப்தீரியா, அடினோ வைரஸ் போன்ற கிருமிகளினாலும் இந்த வீக்கம் ஏற்படுகிறது.

டான்சில் யாரையெல்லாம் தாக்கும் அதிகம் பாதிக்கிறது?

நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு அதிகமாக அடிக்கடி சளி, இருமல், சைனஸ் போன்ற பிரச்சினைகள் வரும். இவர்களுக்கு டான்சில் வர வாய்ப்புகள் அதிகம்.

காற்று மாசுபாடு அதிகம் உள்ள பகுதிகளில் பணியாற்றுபவர்கள் மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் அவர்களுக்கும் டான்சில் வீக்கம் அதிகமாக ஏற்படும். 

பிரிட்ஜில் இருந்து குளிர்ச்சியான பொருட்களை எடுத்து உடனே சாப்பிடுவது ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான பானங்கள் அருந்துவது இந்த டான்ஸுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதிக குளிர்ச்சியானது டான்சில் உள்ள ரத்தக் குழாய்களை  சுருங்க செய்துவிடுவதால் டான்சில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகிறது. இதனால்தான் கிருமிகள் அதிக பலத்துடனும் டான்சில் பலம் குறைவாகவும் இருக்கிறது.

டான்சிலின் வகைகள் எவை?

இரண்டு வகையான வீக்கங்கள் ஏற்படுகின்றன. ஒன்று திடீர் டான்சில் வீக்கம். மற்றொன்று நாட்பட்ட டான்சில் வீக்கம். முதல் வகையில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி உணவை விழுங்கும்போது வலி. காது வலி போன்ற அறிகுறிகள் இருக்கும்.

முதல் முறையாக டான்சில் வீக்கம் வருந்துவது சரியான தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்க தவறியவர்களுக்கு அடிக்கடி பாதிப்பு ஏற்படும். இந்த

பாதிப்பின் காரணமாக டான்சிலின் நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்துவிடுகிறது. இதனால் கிருமிகள் உடன் போராட முடிவதில்லை இந்த காரணத்தினால் தான் நாட்பட்ட டான்சில் வீக்கம் ஏற்படுகிறது.

குழந்தைகளுக்கு ஏற்படும் டான்சில் அறிகுறிகள்? 

நாட்பட்ட டான்சில் வீக்கத்தால் தொண்டை வலி நிரந்தரமாக இருக்கும். அடிக்கடி காய்ச்சல் வரும் .

பசியின்மை போன்ற பிரச்சனைகளுடன் குழந்தையின் எடையும் விரைவாக குறைந்து காணப்படும். 

டான்சில் சீழ் பிடித்து வாய் நாற்றம் ஏற்படும். இதனால் காதில் சீழ் வடியும். கேட்கும் திறன் குறைவாக இருக்கும். கழுத்தில் அடிக்கடி நெறி கட்டி இருக்கும். சைனஸ் தொல்லை ஏற்படும். குரல் கரகரப்பாக மாறிவிடும்.

மேலும் படிக்க – பழச்சாற்றின் சிறப்பு அதன் பயன்கள்

கிருமிகள் நச்சுப் பொருள்களை வெளியிடுவதால் அவை ரத்தத்தில் கலந்து சிறுநீரகம், நுரையீரல், இதயம் போன்ற அனைத்து உறுப்புகளையும் பாதிக்க ஆரம்பிக்கிறது.

டான்சில் கான சிகிச்சை முறை என்ன?

திடீரென ஏற்பட்ட டான்சில் வீக்கத்திற்கு மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்தி விடலாம். ஆனால் நாட்பட்ட வீக்கத்திற்கு ஆப்ரேஷன் தான் செய்தாக வேண்டும். லேசர் சிகிச்சை அல்லது Radio frequency ablation என்ற நவீன சிகிச்சையில் வலியின்றி மிகவும் சரியாக தான் டான்சிலை அகற்ற முடியும் என்று கூறப்படுகிறது. இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களுக்கு மீண்டும் இந்த பிரச்சனை வருவதில்லையாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன