பிறந்த குழந்தைக்கு நீர் சத்து மிக அவசியம்..!

what happens to new born baby when it is not properly hydrated

ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது மிகப்பெரிய காரியமாகி விட்டது. அதை கடந்த பின்பு அந்தக் குழந்தையை வளர்ப்பது அவ்வளவு எளிதல்ல குறிப்பாக குழந்தையின் ஆரம்பம் முதல் பள்ளிக்குச் செல்லும் வரை நாம் அதிக அளவில் கவனத்தை அவர்கள் மேல் செலுத்தி வளர்க்க வேண்டும் அதிலும் அவர்கள் பேசுவதற்கு முன்பு என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்து அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இப்படி இருக்கையில் பிறந்த குழந்தை செய்யும் ஒரே காரியம் அழுகை, இதை வைத்து தான் நாம் குழந்தைக்கு பசிக்கிறது என்று நினைத்து அவர்களுக்கு பாலூட்டுவோம். முதல் வருடம் முழுக்க தாய்ப்பாலில் இருந்து குழந்தைகளுக்கு அனைத்து சத்துகளும் சென்றடைவதால் நாம் கவலை கொள்ள வேண்டாம். ஆனால் அதன் பிறகுதான் அவர்களுக்கு என்ன உணவு தரவேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு நீர் சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் அது பெரிய ஆபத்தில் அவர்களை தள்ளி விடும் இதிலிருந்து பெற்றோர்களாகிய நாம் தான் அவர்களை காப்பாற்ற வேண்டும். எனவே குழந்தைகளுக்கு எப்போதெல்லாம் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது என்பதை நாம் கண்டறிய சில வழிகள்.

மேலும் படிக்க – பெண்களுக்கான அந்த நாட்கள் நிவாரணி

குழந்தையின் சருமம் வரட்சி அடைந்தாலும் அல்லது அவர்களின் உதடுகள் மற்றும் வாயை சுற்றி தோல் உரிவது போன்ற அறிகுறி தெரிந்தால் அவர்களுக்கு உடனே தண்ணீர் தேவைப்படுகிறது என்று அர்த்தம். அதுமட்டுமல்லாமல் நாம் அவ்வப்போது அவர்களின் நாக்கை பார்க்க வேண்டும் அதில் நீர் சத்து போதுமான அளவு இருக்கிறதா.., இல்லை அது வறட்சி அடைந்துள்ளதா என்பதை கவனித்து அவர்களுக்கு நீராகாரத்தை தரவேண்டும்.

உங்கள் குழந்தை கண்ணீர் வராமல் அழுதால் அவர்களுக்கு நீர் சத்து தேவை பிறந்த குழந்தை ஆரம்ப மாதங்களில் கண்ணீர் வராமல் அழும் அதனால் நாம் இதை நீர் சத்து பற்றாக்குறை என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அதுவே கண்ணீர் வரும் அழுகை ஆரம்பித்த முதல் திடீரென்று கண்ணீர் வராமல் அழுதால் அவர்களுக்கு நீர் சத்து தேவை என்பதற்கான அறிகுறி.

மேலும் படிக்க – உடற்பயிற்சிகள் இல்லாமல் ஒரே இடத்தில் வேலை செய்கிறீர்களா!

குழந்தை ஒரு நாளைக்கு அதிகளவில் தூங்கிக் கொண்டே இருக்கும் அதையும் தாண்டி உறக்கத்திலேயே இருந்தால் அது சோர்வுக்கான அறிகுறி. எனவே ஒரு குழந்தை தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் மட்டுமே சோர்வடையும் இதை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு தண்ணீர் அல்லது பால் அதிகமாக தருவது நல்லது.

குழந்தையின் அழுகையை நன்கு கவனிக்க வேண்டும் அந்த அழகை ஏதாவது ஒரு காரியத்திற்காக இருக்கும் எனவே அதை உணர்ந்து அவர்களுக்கு என்ன தேவை என்பதை பூர்த்தி செய்யுங்கள். மிக எளிதில் ஒரு குழந்தை எரிச்சல் அடைந்தால் அதற்கு உணவு அல்லது நீராகாரம் தேவை என்பதற்கான அறிகுறி. இது அனைத்தையும் கடைபிடித்து உங்கள் குழந்தையின் நீராகாரத்தை அதிகரியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன