மே 3க்கு பிறகு ஊரடங்கு நீடித்தால் என்னவாகும்..!

  • by
what happens if lock down gets extended after may 3

கொரோனா வைரஸ் மக்களை பாதிக்காமல் இருப்பதற்காக கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் மக்கள் யாரும் வெளியே செல்லாமல் வீட்டில் அடைந்து கிடைக்கிறார்கள். நாடு முழுவதும் ஊரடங்கிள் இருப்பதினால் மக்கள் வெளியே செல்லாமல் வீட்டில் தங்கள் வேலைகளை செய்து வருகிறார்கள். மே 3ஆம் தேதி வரை இருக்கும் இந்த ஊரடங்கு 4ஆம் தேதியில் இருந்து தளர்க்கப்படும் என ஏராளமான மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். ஆனால் கொரோனா வைரஸின் எண்ணிக்கை குறையாமல் இன்றுவரை அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்ற பயம் மக்களிடையே நிகழ்கிறது.

ஊரடங்கு நீட்டிப்பு

மார்ச் 22ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த ஊரடங்கு கிட்டத்தட்ட 30 நாட்களுக்கு மேல் மக்கள் கடைபிடித்து வருகிறார்கள். முதலில் மார்ச் 30 வரை நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்கள் சேர்த்து ஏப்ரல் 14 வரை பின் தொடரும் படி மத்திய அரசு கேட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாமல் அதிகரித்ததினாள் ஊரடங்கு மேலும் 18 நாட்கள் கடைபிடிக்கும் படி மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் கட்டளையிட்டது. இதனால் மே 3ஆம் தேதி வரை அனைத்து மக்களும் ஊரடங்கை பின் தொடர வேண்டும் என மாநில அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்தது.

மேலும் படிக்க – ஊரடங்கில் ஆரோக்கியமாக வேலை செய்யலாம்

பொருளாதார பாதிப்பு

கிட்டத்தட்ட 40 நாள் வரை மக்கள் இந்த ஊர் அடங்கி பின் தொடர வேண்டிய சூழ்நிலை நிகழ்ந்துள்ளது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பது மட்டுமல்லாமல் தொழில் மற்றும் வருமானம் அனைத்தும் பாதித்துள்ளது. இதனால் ஒவ்வொரு குடும்பமும் ஊதியங்கள் பெற முடியாமல் வீட்டில் தவித்து வருகிறார்கள், அரசாங்கம் கொடுக்கும் ஒரு சில நிவாரணப் பொருட்கள் ஒரு சில நாட்களே வருவதினால் அனைத்து மக்களும் வேதனையில் இருக்கிறார்கள். இதைத் தவிர்த்து மக்கள் வேலைக்கு செல்லாததால் செலவுகளும் குறைந்துள்ளது, இதனால் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது.

மக்கள் அவஸ்தை

மக்கள் படும் வேதனையை குறைப்பதற்காக ஏராளமான தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவி தொகைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அளித்து வருகிறார்கள். இதனால் ஓரளவிற்கு பொருளாதாரத்தை சீர் அமைத்து மக்களுக்கு மத்திய அரசு உதவிகளை அளித்து வருகிறது. இதைத் தவிர்த்து மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள், மருந்துகள் மற்றும் பாதுகாப்பு பொருட்கள் என அனைத்தையும் முன்கூட்டியே வாங்கி தயார் நிலையில் வைத்துள்ளது.

மேலும் படிக்க – சோசியல் மீடியா பயன்பாடு அதிகரித்துள்ளது..!

ஒருவேளை நீடித்தால்

மே மூன்றாம் தேதிக்கு பிறகு ஒரு வேளை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாள் மக்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர் கொள்வார்கள். மக்களின் மனநிலை வெகுவாக மாறி வருகிறது, ஆண்களைவிட பெண்கள் மன குழப்பத்தில் இருக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டில் தவித்து வரும் இவர்களின் மனநிலை மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால் என்னி பார்க்காத அளவுக்கு மக்களின் மனநிலை மாறி, அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும். அதே போல் அலுவலகம் செல்ல முடியாமல் தவிக்கும் ஆண்கள், வெளியே செல்ல முடியாமல் தவிக்கும் இளைஞர்கள் மற்றும் வெவ்வேறு இடங்களில் மாட்டித் தவிக்கும் உறவினர்கள் என எல்லோரின் மனநிலையும் மிக மோசமான நிலைக்கு செல்லும்.

நமது அரசாங்கம் வேலைக்கு செல்வதில் ஏராளமான கட்டுப்பாடுகளை அமல் படுத்தி உள்ளார்கள் இருந்தும் வீட்டைவிட்டு வெளியூர் சென்று மாட்டிக் கொண்ட ஏராளமான மக்கள் இன்றும், தங்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே மத்திய மற்றும் மாநில அரசு இதற்காக குறைந்தது ஒரு வாரம் வரை ஊரடங்கை கட்டுப்பாடுகளுடன் விளக்க வேண்டும். இதனால் மக்களும் தங்கள் மனநிலையும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொண்டு அடுத்த ஊரடங்கை சிறப்பாக எதிர்கொள்வார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன