மதுரை மார்க்கெட்டில் நடந்தது என்ன..!

  • by
madurai

நாடுமுழுவதும் லாக்டவுனில் இருக்கும் நிலையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டை அடைவதற்காக நடைபயணம் மேற்கொண்டு, தாங்கள் நினைத்ததை சாதித்துள்ளார்கள். இப்படி கஷ்டப்பட்டு தங்கள் நாட்களை கடந்து வரும் இதுபோன்ற மக்களுக்கு இடையில் அத்தியாவசிய உணவுக்காக கொடுக்கப்பட்ட நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களிலும் மற்றும் அரசாங்க விதியை மதிக்காமல் ஊர் சுற்றுபவர்களுக்கு இருக்கிறார்கள். இவர்களுக்கு நாம் என்ன அறிவுரை மற்றும் விழிப்புணர்வு செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் அடிப்படை அறிவுகள் ஏதும் இல்லாததால் இந்தியாவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் ஏராளமானேர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதற்கு உதாரணமாக மதுரையில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் அங்காடிகளில் கூட்டம் கூட்டமாக அலைந்து திரிந்துள்ளார்கள்.

ஊரடங்கு உத்தரவு

கொரோனா வைரஸை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பத்தாவது நாள் அன்று மதுரையில் உள்ள மக்கள் தங்கள் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை கூட்டம் கூட்டமாக, சமூக இடைவெளி ஏதும் இல்லாமல், போதுமான பாதுகாப்பு கவசம் அணியாமல் வாங்கி சென்றுள்ளார்கள். இதில் யாராவது ஒருவருக்கு இந்த தொற்று இருந்தாலும் அது மதுரை முழுக்க பாதிக்கும் அபாயம் இருக்கிறது. இதுபோன்று தெளிவும் மற்றும் விழிப்புணர்வு இல்லாததால் இந்த மக்கள் தங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி எண்ணாமல் அங்காடிகளுக்கு சென்று காய்கறி வாங்கி வருகிறார்கள்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸை அழிப்பதற்கு மனவலிமை தேவை..!

யார் குற்றம்

தமிழகத்தில் படிக்காதவர்களை விட படித்தவர்களே அதிகளவிலான தவறுகளை செய்கிறார்கள். உதாரணத்திற்கு நாடுமுழுவதும் முடக்கத்தை அறிவித்த உடனே படித்த மக்கள் தான் முதலில் கூட்டம் கூட்டமாக கோயம்பேடு மற்றும் ரயில் நிலையத்துக்கு வந்து காவல் அதிகாரிகளுடன் சண்டையிட்டார்கள். அதேபோல் சமூக இடைவெளியை மதிக்காமல் பேருந்துகளில் அடித்துக்கொண்டு ஏரி, கூட்டத்திற்கு இடையே பயணம் செய்தார்கள். மதுரையில் நடந்த இந்த சம்பவத்தையும் விழிப்புணர்வு அதிகமாக உள்ள மக்களே செய்திருப்பார்கள் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளது. நமக்கு கிடைக்கக்கூடிய அத்தியாவசிய பொருட்கள் எப்போதும் கிடைக்கும் என்று அரசாங்கம் தெளிவாக நமக்கு அறிவுறுத்தியது, இருந்தும் அதை பொருட்படுத்தாமல் இது போன்ற செயலில் ஈடுபட்டு உள்ளார்கள்.

அரசாங்க பிரச்சனை

மதுரையில் உள்ள அங்காடி நாள் முழுவதும் திறந்திருக்க யார் அனுமதி கொடுத்தார்கள். அப்படி அனுமதி கொடுத்தாலும் அந்த அங்காடிகளை ஏன் வியாபாரிகள் திரந்து வைத்துள்ளார்கள். சமூக இடைவெளியை சரியாக கடைபிடிக்காத இந்த இடத்திற்கும் மற்றும் இந்த செயலுக்கும் யார் பொறுப்பு. வியாபாரிகள் தைரியமாக இது போன்ற செயலில் ஈடுபடுவதற்கு நிச்சயம் ஏதேனும் அரசியல் பின்னணி இருக்கும்.

நாகரீகம்

கடந்த சில வாரங்களாகவே தமிழக மக்கள் சமூக வலைத்தளங்களில் வட இந்தியர்களை கேலி செய்யும் வகையில் ஏராளமான பதிவுகளை பதிவிட்டார்கள். இதை செய்த நாம் அவர்களைப் போல் எந்த தவறும் செய்யாமல் ஒழுக்கமாகவும் மற்றும் நாகரீகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவு இல்லாமல் இதுபோன்று தவறான செயல்களை செய்வதன் மூலமாக நம்மை இகழ்வதற்கு நாமே அவர்களுக்கு இது போன்ற செய்திகளை அளித்து வருகிறோம். இந்த சம்பவம் தமிழக தொலைக்காட்சியை தவிர்த்து வட இந்தியத் தொலைக்காட்சிகளில் அதிக அளவில் ஒளிபரப்பு செய்கிறார்கள்.

மேலும் படிக்க – கொரானாவின் ஆய்வுகளில் முடிவு நெருங்குகின்றது

தலை நிமிர்ந்து பாருங்கள்

ஒழுக்கம் என்பது வீட்டில் மட்டுமே இருந்தால் போதாது, நம்முடைய சமுதாயம் மற்றும் நம்முடைய நாட்டிலும் ஒழுக்கத்தை நாம் பின்பற்ற வேண்டும். அது தவறும் போது நீங்கள் எந்த காரியத்தை செய்தாலும் அது தவறாகவே முடியும். எனவே உலகம் முழுக்க இருக்கும் மக்கள் தங்கள் வாழ்க்கையை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுகிறார்கள். ஆனால் நாம் மட்டும் ஏன் அலட்சியமாக இதுபோன்று காரியத்தில் ஈடுபடுகிறேம்.

லாக் டவுன் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் நிறைவடைகிறது. ஒன்று இரண்டு நாளுக்கு பிறகு இது மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது. எனவே எதுவாக இருந்தாலும் முற்போக்கு சிந்தனையுடன் அதை எதிர் கொள்ளுங்கள். இந்தச் செயல் அனைத்தும் மனிதர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டவை, அவர்களின் எதிர்காலத்தில் நீடித்து வாழ வேண்டுமென்றால் அரசு சொல்வதைக் கேட்டு நாம் அப்படியே நடக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன