நெயில் பாலிஷ் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள்.!

What Happen After Few Hours Of Using Nail Polish

சிறுவர்கள் முதல் இளைய பெண்கள் வரை அனைவரும் விரும்பி பயன்படுத்துவது நெயில் பாலிஷ். இதில் ஏகப்பட்ட தரம் மற்றும் வண்ணங்கள் இருக்கின்றன. நாம் நகத்திற்கு அழகு கூட்டும் நெயில்பாலிஷ்ல் ஏன் இத்தனை வகைகள் இருக்கின்றன என்று நீங்கள் சிந்தித்து உள்ளீர்களா..? நெயில் பாலிஷ்ன் தரத்திற்கு ஏற்ற படி நமது உடல் ஆரோக்கியத்தை சீரழிப்பதிலிருந்து காப்பாற்றுகிறது. நெயில் பாலிஷ் நமது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அது ஏன், எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

நாம் அழகுக்காக நெயில் பாலிஷை பயன்படுத்துகிறோம் இதனால் பல சிக்கல்கள் நமக்கு ஏற்படுகிறது. நெயில் பாலிஷ் பயன்படுத்தும் 24 பெண்களை வைத்து செய்யபட்ட ஆய்வில் ஒரு பெண் நெயில்பாலிஷ் பயன்படுத்திய சில மணிநேரங்கள் கழித்து அவளின் உடலில் என்ன மாற்றங்கள் எல்லாம் நிகழ்கிறது என்பதை ஆய்வாளர்கள் அறிந்துள்ளார்கள்.

மேலும் படிக்க – வீட்டிலேயே மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்வது எப்படி?

நெயில்பாலிஷ் பயன்படுத்திய பெண்களின் உடலில் டிரிஃபில்பாஸ்பேட் என்ற நெயில் பாலிஷ் இருக்கும் ரசாயனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதைத் தவிர்த்து நெயில் பாலிஷ் பயன்படுத்திய 10 மணி நேரம் கழித்து இவர்கள் உடலில் ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இப்போது இருக்கும் காலகட்டங்களில் நாம் பயன்படுத்தும் அனைத்து நெயில் பாலிஷ்களிலும் டிரிஃபில்பாஸ்பேட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நெயில்பாலிஷ்ல் இருக்கும் மற்றொரு பொருள் ஃபார்மால்டிஹைடு என்பதாகும். இது நிறமற்ற வாயு, இதைப் ஒவ்வாமை உள்ளவர்கள் பயன்படுத்தினால் அவர்களுக்கு ரசாயனத் தீக்காயங்கள், தோல் அழற்சி மற்றும் புற்றுநோய் கூட உண்டாக வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க – பன்னீர் ரோஜாவை கொண்டு அழகு செய்வோம்!

நெயில் பாலிஷ்ல் இருந்து நீங்கள் தவிர்க்க வேண்டிய மற்றொரு ரசாயனம் டிபுட்டில் பித்தலேட், இது வாசனை திரவியமாகும். விலை மலிவான நெயில்பாலிஷ்களில் இது அதிகளவில் இருப்பதினால் இது உங்களுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படுத்தும். எனவே இது போன்ற ரசாயனங்கள் இல்லாத நெயில்பாலிஷ்களை தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. 

பொதுவாக விலை குறைவான நெயில்பாலிஷ் வகைகளில் இது போன்ற ரசாயனங்கள் அதிக அளவில் இருக்கின்றன எனவே தரமான நெயில் பாலிஷ்களை வாங்கி பயன்படுத்துங்கள் இல்லையெனில் நெயில் பாலிஷ் போடுவதற்கு முன்பு நகத்தின் மேல் பேஸ் கோட்டிங் போட்டுக்கொள்வது நல்லது. இல்லையெனில் செயற்கையான நகங்களை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன