கரேனா வைரஸ் இந்தியவை அதிகமாக தாக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் செய்ய வேண்டியவை..!

  • by
what government has to do to control corona virus spreading

உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கரேனா வைரஸ் தாக்கம் இருக்கிறது. அதில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்து இருக்கிறார்கள். இதில் கிட்டத்தட்ட நான்காயிரம் நபர்கள் உயிர் இழந்துள்ளார்கள். இதனால் பல நாடுகளில் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. எனவே உலகில் தாக்கியுள்ள கரோனா வைரஸ் சமீபத்தில் இந்தியாவிலும் புகுந்துள்ளது. இதை நமது நாடு எப்படி தடுத்து மக்களை விழிப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை காணலாம்.

விழிப்புணர்வு

கரோனா வைரஸ் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்புகளின் தாக்கம் இந்த தொற்று இல்லாதவர்கள் எளிதில் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். எனவே இதனால் ஏற்படும் பாதிப்பை ஆரம்பத்தில் தடுத்தால் மட்டுமே நாம் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும். சமீபத்தில் அலைபேசி அழைப்புகளுக்கு முன்னரே கரோனா வைரஸ் விழிப்புணர்வு வாசகத்தை ஒலிக்க செய்துள்ளது இந்திய அரசாங்கம். இது ஒரு நல்ல யோசனை என்றே சொல்லலாம். ஆனால் மொழியை சரியாக அறியாதவர்களுக்கு இந்த வாசகங்களை சிறிய கிராமங்களில் ஒலிபெருக்கி மூலமாக எழுப்பலாம். கரேனா வைரஸின் பாதிப்பில் இருந்து எப்படி மீள்வது, அதை நம்மை அண்டவிடாமல் எப்படி தடுப்பது போன்றவைகளை எல்லா மக்களுக்கும் அறிவுருத்த சுகாதாரத் துறையின் மூலமாக செய்திகளை அனுப்பலாம்.

மேலும் படிக்க – நச்சுகளில் இருந்து உடலை சுத்தப்படுத்த உதவும் உணவுகள்..!

இந்தியாவில் பாதிப்பு

கரோனா வைரஸ் முதல் முதலில் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு நபருக்கு ஏற்பட்டது ஆனால் அவர் இப்போது பரிபூரணமாக குணமாகி விட்டார். அதேபோல் இப்போது தெலுங்கானாவில் ஒருவருக்கும் டெல்லியில் இருவருக்கும் மற்றும் இத்தாலியை சேர்ந்த 15 பேருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் உள்ள ஒருவருக்கும் இந்த கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதை கண்டறிந்துள்ளார்கள். எனவே நம்முடைய அலட்சியத்தினாள் தான் கரேனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது. இதை தடுப்பதற்கு நாம் சில வழிகளை பயன்படுத்த வேண்டும்.

எல்லைப் பாதுகாப்பையும் வலுப்படுத்தவும்

கரேனா வைரஸ் பாதிப்புகள் உள்ள நாடுகளில் மட்டுமே நாடுகளில் இருந்து வரக்கூடிய பயனாளர்களை நாம் பரிசோதித்தோம், அதை தவிர்த்து மற்ற நாடுகளிலிருந்து வரும் மக்களை அலட்சியமாக விட்டுவிடுகிறோம். இது போல் இல்லாமல் எல்லா நாட்டு மக்களையும் கரேனா பாதிப்புகள் உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.

கரோனா வைரஸ்

இந்த வைரஸ் நமது உடலில் முழுமையாக வளருவதற்கு கிட்டத்தட்ட இருபது நாட்கள் எடுத்துக்கொள்ளும். எனவே இதனால் தாக்கப்பட்டதை பலர் அறியாமலேயே இருக்கின்றார்கள். எனவே எல்லோரையும் கிட்டத்தட்ட 20 முதல் 25 நாட்கள் வரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்வதன் மூலமாக குறைந்த பாதிப்புகள், இந்தியாவின் மற்ற பகுதிகளில் பரவாமல் தடுக்கலாம்.

தொற்றுக்களை கட்டுப்படுத்தவும்

கரேனா வைரஸ் மிக எளிதில் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு செல்கிறது. இதை தடுப்பதற்கு நாம் முகமூடிகள் மற்றும் கய்யுறைகளை அணிய வேண்டும். அதை தவிர்த்து கூட்டங்கள் அதிகமாக உள்ள இடங்களுக்குப் போவதை தவிர்க்கலாம். கண்கள், மூக்கு, வாய் பகுதிகளை முடிந்தவரை தொடுவதை தவிர்க்க வேண்டும். பிறகு நமது கைகளை நன்கு சுத்தப்படுத்திக் கொள்வது அவசியம்.

மேலும் படிக்க – அரளிப் பூக்களில் இருக்கும் நன்மை மற்றும் தீமைகள்..!

ஹோலி மற்றும் ஐபிஎல்

சமீபத்தில் வடமாநிலங்களில் ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். எனவே இங்கெல்லாம் கூட்டங்கள் அலைமோதும். இதன் மூலமாக ஒருவருடன் மற்றொருவர் நெருக்கமாக இருக்கும் சூழ்நிலை ஏற்படும் எனவே இதில் ஒருவருக்கு கரேனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலும் அதை எல்லோருக்கும் பரவ வாய்ப்புள்ளது. எனவே முடிந்தவரை பாதுகாப்பான ஹோலியை கொண்டாட வேண்டும் இல்லையெனில் ஹோலியை புறக்கணிக்கலாம். அதேபோல் ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்கள் பல நாடுகளிலிருந்து வருவதினால் உங்களுக்கு கரேனா வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எனவே முடிந்த வரை இது போன்ற பொது இடங்களுக்கு செல்வதற்கு முன் பாதுகாப்பாக செல்லவும், இல்லை எனில் செல்வதை புறக்கணிக்கலாம்.

இந்தியாவில் கரேனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தால் நம்முடைய சுகாதார துறை மேல் பலவிதமான கேள்விகள் ஏழபும் இதற்கு பயந்து கொண்டு நமது அரசு குழந்தை வைரஸ் பாதிப்பில் எண்ணிக்கையை வெளியே சொல்ல மறுக்கிறார்கள். எனவே இது போல் சிறுபிள்ளைத்தனமாக விளையாடாமல் உண்மையை வெளிப்படுத்தி மக்களுக்கு போதுமான அளவு விழிப்புணர்வை நிலையத்துக்கு கரேனா வைரஸ் தொற்றிலிருந்து எல்லாரையும் காப்பாற்றுவதை நமது அரசாங்கம் செய்ய வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன