பாக்கெட் நிறையுமா நம்ம பட்ஜெட்டினால்..!

What going to be change in our Lift After Budget

இந்திய நாடு வளமாக வாழ வேண்டுமென்றால் அவர்கள் பட்ஜெட்டை சரியாக திட்டமிட்டு நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். இல்லையெனில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து மீண்டும் நாம் பிற நாடுகளிடமிருந்து கையேந்தும் சூழல் ஏற்படும். இதைத்தான் நம் வீட்டில் நாம் திட்டமிடும் பட்ஜெட்டிலும் நடக்கிறது. அதிகமான செலவுகள் கோருவதினால் நாம் மற்ற நிறுவனங்களிடமிருந்து கடன் தொகையை பெற்று அதை கட்ட முடியாமல் தவிர்க்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே பட்ஜெடை நாட்டில் எப்படி சரியாக திட்டமிடுகிறார்களே அதேபோல் நம் வீட்டிலும் திட்டமிட வேண்டும்.

இந்தியாவின் பட்ஜெட்

இந்தியாவின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாகவே வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதை சரி செய்வதற்காக கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பல மாற்றங்களை கொண்டு வந்தார்கள். ஆனால் அதில் எந்த பயனும் அளிக்கவில்லை இதனால் இந்த ஆண்டு அவர்களின் பட்ஜெட்டில் வெளிநாட்டு தொழில்கள் இந்தியாவில் செய்வதற்கான வரிகளை குறைத்துள்ளார். அதேபோல் பொருட்களின் வரியையும் குறைத்து மக்களின் தேவைகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளார்கள்.

பட்ஜெட் தாக்கத்தினால் மக்கள் யாரும் புதியதாக வீடுகள், மனைகளை வாங்குவதை தவிர்த்து வருகிறார்கள். இதனால் அரசாங்கம் வீடுகள் கட்டுவதற்கான பொருள்களின் மேல் உள்ள வரிகளை குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால் வீடுகளின் வரிகளும் குறைந்து தொழிலதிபர்களும் வளம் பெறுவார்கள். இதனால் இந்தியாவின் பொருளாதாரம் உயரும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.

மேலும் படிக்க – தமிழ்நாட்டில் தொழில் துறையில் சாதித்த பெண் மற்றும் அவர்களின் கதை.!

வீட்டின் பட்ஜெட்

நமது வீட்டுடைய பட்ஜெட் சரியாக இருந்தால்தான் நாட்டுடைய பட்ஜெட் உயரம். நாம் வாங்கும் வருமானத்தை சரிசமமாக மூன்று பங்குகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். முதல் பங்கை நாம் அத்தியாவசிய வாழ்க்கைக்கு தேவையான, உணவு, உடை மற்றும் இருக்கை என இதற்கு செலவு செய்ய வேண்டும். பிறகு இரண்டாம் பங்கான 30 சதவீதத்தை நமது வாழ்க்கைக்குத் தேவையான சந்தோஷத்திற்கு பயன்படுத்த வேண்டும். பின்பு கடைசி பகுதியான 20 சதவீதத்தை நாம் நமது சேமிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

ஆனால் நீங்கள் ஏதாவது ஒரு மிகப்பெரிய தேவைகளுக்காக கடன் பெற்றவர்களாக இருந்தால் கடைசிப் பகுதியில் 10% கடனை அடைக்க பயன்படுத்துங்கள்.

திட்டமிடுதல் மிக அவசியம்

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பலபேர் அத்தியாவசிய வாழ்க்கையை இழந்து வருகிறார்கள். என்னதான் நீங்கள் ஒரு நல்ல நிலையில் இருந்தாலும் சேமிப்புகள் இல்லை என்றால் உங்கள் வேலை போகும் சமயங்களில் உங்களை மிகப் பெரிய பிரச்சினைக்குள் தள்ளி விடும். எனவே சேமிப்புகள் எப்போதும் உங்கள் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும். அதை தவிர்த்து ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க – தமிழர்களால் மறக்கப்பட்ட பாரம்பரிய மற்றும் மருத்துவ குணங்கள் கொண்ட உணவுகள்..!

பணத்தை மிச்சப் படுத்துங்கள்

ஒவ்வொரு மாதமும் நம் வீட்டிற்குத் தேவையான சில மளிகை பொருட்களை வாங்குவோம் அதில் எந்த பொருட்கள் இந்த மாதம் வரை பயன்படுத்தாமல் இருக்கிறதோ அந்த பொருளை வாங்குவதை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள். அதேபோல் ஒவ்வொரு மாதமும் தேவையான பொருள், தேவையற்ற பொருள் என இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தை தரும் பொருட்களை அதிகமாக வாங்கிக்கொள்ளுங்கள் அதேபோல் மிக விரைவில் பாழாகும் பொருட்களை தவிர்ப்பது நல்லது.

உங்கள் வீட்டில் ஏதாவது கொண்டாட்டங்கள் நடப்பதாக இருந்தால் அதை சரியாக திட்டமிட்டு செயல்படுத்துங்கள். இதற்காக ஆடம்பர செலவுகளை தவிர்த்து குறைந்த செலவில் ஆடம்பரமாக எப்படி காண்பிப்பது என்ற திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க – கெட்ட கனவுகள் நமக்கு என்ன சொல்ல வருகிறது..!

மற்றவர்களின் வாழ்க்கை

உங்கள் கண் முன் ஏராளமான மக்கள் வாழ்வார்கள், அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்கள் என்று தவறான எண்ணங்களை கொள்வதை தவிருங்கள். என்றால், ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினைகள் இருக்கும். அதை மறக்கடிப்பதற்காகவே அவர்கள் ஆடம்பரமாக இருப்பதைப் போல் காண்பித்துக் கொள்வார்கள். எனவே அவர்களைப் பார்த்து நீங்களும் ஆடம்பரமாக இருக்க முடிவு செய்ததால் அதைத் தவிர வேறு முட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை.

எப்போதும் இயல்பு வாழ்க்கைக்கு முன்னுரிமை தாருங்கள். அவர்கள் என்னதான் ஆடம்பரமாக இருந்தாலும் மகிழ்ச்சியை குறைவாகவே கொண்டிருப்பார்கள். எனவே அந்த மகிழ்ச்சி அதிகரிக்க நீங்கள் எந்த வழியை தேர்ந்தெடுத்தாலும் அது சிறந்ததாகவே இருக்கும். பணம் கொடுத்துதான் மகிழ்ச்சியை வாங்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டால் உலகில் 90% மனிதர்களால் மகிழ்ச்சியை வாங்க முடியாது.

எனவே உங்கள் சந்தோஷமான வாழ்க்கையை உங்கள் மேல் பாக்கெட்டிலேயே உள்ளது அதை நன்கு கவனித்து அதற்கேற்ப செலவுகளை செய்து உங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன