லாக்டவுனில் பிரபலங்கள் செய்யும் உடற்பயிற்சி..!

  • by
what exercise does celebrities do during lock down

லாக்டவுன் சமயத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வகைகளில் அவர்களின் நேரத்தை செலவு செய்கிறார்கள். ஆனால் ஒரு சிலரோ தங்கள் உடலை கட்டுப்பாடாக மற்றும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள ஏராளமான முயற்சிகளை செய்வார்கள். அப்படி என்னதான் செய்தாலும் சினிமா பிரபலங்களை போல் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியவில்லை, எனவே அவர்கள் செய்யும் உடற்பயிற்சிகளை பின்தொடர்ந்து நாமும் அவர்களை போல் மெலிந்து மற்றும் இளமையான தோற்றத்தைப் பெறலாம்.

கார்டியாக் பயிற்சி

எல்லா பிரபலங்களும் தங்கள் உடலை வலிமையாக வைத்துக் கொள்ள முதலில் செய்யப்படுவது இந்த கார்டியாக் உடற்பயிற்சி, ட்ரெட்மில் அல்லது பூங்காக்களில் ஓடுவதினால் உங்கள் கார்டியாக்கை சமநிலையில் வைத்துக் கொள்ளலாம். தினமும் 10 நிமிடங்கள் நம்மால் முடிந்த வேகத்தில் இந்த ஓடும் பயிற்சியை மேற்கொள்வதன் மூலமாக உங்கள் உடலில் உள்ள அனைத்து தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்துவிடும். இதன் மூலமாக சினிமா பிரபலங்களை போல் நீங்களும் மெளிதாக இருக்கலாம்.

மேலும் படிக்க – கொரானா குறித்த புரளியும் உண்மையும் அறிவோம் !

உடல் வளைவுகள்

அதே போல் உங்கள் உடல் முழுவதும் வளைந்து நெளியும் படியான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அதாவது கால்கள், இடுப்பு, கைகள், கழுத்து மற்றும் தலை பகுதிகளைத் எல்லா பக்கமும் திருப்ப முயற்சி செய்ய வேண்டும். இதை எல்லா உறுப்புகளுக்கும் செய்வதினால் உடலில் உள்ள பகுதிகள் அனைத்தும் இலகுவாக மாறும். அதே போல் உங்கள் நரம்புகள் வலுவடைந்து ரத்த ஓட்டமும் சீராகும்.

தண்டால் எடுப்பது

நாம் தரையிலோ அல்லது ஏதேனும் மேஜைகளில் நமது கைகளை ஊன்றிக் கொண்டு கீழும், மேலும் எந்திரிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து 20 முறை செய்வது சிறந்தது. அதைத்தொடர்ந்து இடையே 20 விநாடிகள் ஓய்வு எடுத்து பின் மீண்டும் 20 முறை செய்ய வேண்டும். உங்கள் எடையை உங்கள் கைகளைக் கொண்டு நீங்களே தூக்குவதினால் உங்களின் பலம் அதிகரிக்கும்.

பின்புறம் வலைவது

இரண்டு கால்களைவைத்து நேராக நின்று கொள்ள வேண்டும். பிறகு உங்கள் கையை இடுப்பில் வைத்து அப்படியே பின்புறம் வளைய வேண்டும். உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அதுவரை வளைந்திருந்து பின்பு ஒரு காலில் நின்று கொண்டு வளைய முயற்சி செய்ய வேண்டும். இதை மாற்றி மாற்றி செய்வதன் மூலமாக உங்கள் முதுகு எலும்புகள் வலுவாகும்.

ஸ்குவாட் பயிற்சி

ஸ்குவாட் பயிற்சி என்பது நாம் கைகளை முன்னே நேராக நோக்கியவாறு வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அப்படியே நாற்காலி இல்லாமல் நாற்காலியில் அமர்வது போல் உட்கார வேண்டும். இதுபோல் உட்கார்ந்த எந்திரிக்க வேண்டும், தொடர்ந்து பத்து முதல் பதினைந்து முறை கூட இதைச் செய்யலாம். பிறகு 10 விநாடிகள் ஓய்வு எடுத்து மீண்டும் இதை செய்ய வேண்டும். இதன் மூலமாக உங்கள் கால்கள், இடுப்புகள் மற்றும் உடலில் உள்ள தசைகள் அனைத்தும் வலுவாகும்.

மேலும் படிக்க – வைட்டமின் மற்றும் புரோட்டின்களில் இருக்கும் வித்தியாசம்..!

க்ரஞ்சஸ் பயிற்சி

நாம் தரையில் வானத்தை நோக்கியவாறு படுத்துக் கொள்ள வேண்டும், பிறகு நம்முடைய கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும் கொள்ள வேண்டும். நமது தலையை நேராக வைத்துக்கொண்டு அப்படியே முதுகை தூக்கி உங்கள் முட்டிவரை வளைக்க வேண்டும். பின்பு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும், இதை உங்களால் முடிந்தவரை செய்வதினால் உங்கள் உடல் ஆற்றல் அடைந்த அனைத்து கெட்ட கழிவுகள் வெளியேறும்.

ஒவ்வொரு உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன்பும் மற்றும் முடித்த பின்பும் நாம் ஓய்வு எடுப்பதை தடுக்க வேண்டும். அச்சமயங்களில் குதித்துக் கொண்டிருக்கலாம், இல்லையெனில் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். இதை பின் தொடர்வதன் மூலமாக உங்கள் உடல் ஆரோக்கியமாக வைத் தவிர்த்து, சினிமா பிரபலங்களை போல் நீங்களும் மெலிதாகவும், இளமையாகவும் இருக்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன