ரெட் ஜோன் மாவட்டம் என்றால் என்ன..!

  • by
what does red zone means in corona virus

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மூன்று விதமாகப் பிரிக்கிறார்கள், அதில் 15 திற்கு மேற்பட்டவர்கள் பாதிப்படைந்திருந்தால் அதை ரெட் ஜோன் என்பார்கள், 15 நபர்களுக்கு கீழ் இந்த கொரோனா வைரஸால் பாதிகப்டிருந்தால் அதை ஆரஞ்சு ஜோன் என்பார்கள். ஒருவர் கூட பாதிப்படையாமல் அல்லது அனைவரும் குணமடைந்திருந்தால் அதை கிரீன் ஜோன் என்பார்கள்.

ரெட் ஜோன்

இந்தியாவில் ரெட் ஜோன் அதிகமாக உள்ள மாவட்டங்களில் பட்டியலில் தமிழகமும் இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 33 ஆயிரத்தைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள். இருந்தும் கிட்டத்தட்ட 23 சதவீதத்திற்கு மேல் குணமாகி வீடு திரும்பி உள்ளார்கள். உலக நாடுகளை ஒப்பிடுகையில் குணமாகும் சதவீதம் இந்தியாவில் அதிகமாக உள்ளது. இருந்தும் ரெட் ஜோன் என்று அழைக்கப்படும் மாவட்டங்கள் இந்தியாவில் அதிகமாக உள்ளது, அதிலும் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களை தவிர்த்து மீதி அனைத்து மாவட்டங்களும் இந்த ரெட் ஜோனுக்கு கீழ் வருகிறது. இந்த ரெட் ஜோனில் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் சேலம் முதல் மூன்று இடங்களில் இருக்கிறது.

மேலும் படிக்க – திராட்சை வினிகர் தெரியுங்களா சத்துக்கள் நிறைந்தது!

ஆபத்து அதிகரிக்கும்

ரெட் ஜோனுக்கு கீழ் உள்ள மாவட்டங்களில் ஆபத்துக்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் 15க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றை பலபேருக்கு பரவி இருக்கலாம், அதைத் தவிர்த்து 4 நாட்களில் இரண்டு மடங்காக அதிகரித்தால் இதைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படும். இது போன்ற பகுதிகளில் ரெட் ஜோன் என்று பிரித்துள்ளார்கள். இதன்மூலமாக இங்கே பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார துறைகளின் செயல்கள் அதிகமாக இருக்கும். நீங்கள் இந்த ரெட் ஜோன் போன்ற இடங்களில் வாழ்பவர்களாக இருந்தால் தயவு செய்து வீட்டை விட்டு வெளிவராமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

அரேஞ்ச் ஜோன்

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 க்கு கீழ் இருந்தால் அந்த மாவட்டங்களை ஆரஞ்சு ஜோன் என்று அழைக்கப்படுவார்கள். தமிழகத்தில் கிட்டத்தட்ட எட்டு மாவட்டங்கள் இந்த பட்டியலில் இருக்கிறது. அவை நீலகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி. இவைகளில் ஒன்று முதல் 14 பேர் வரை பாதிப்படைந்து இருப்பார்கள், இதனால் இது ஆரஞ்சு ஜோனுக்கு கீழ் வந்துள்ளது. எனவே இந்த மாவட்டங்களில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களை குறைப்பது எளிதாக இருக்கும். அதே சமயத்தில் மக்கள் ஊரடங்கை சரியாக பின்தொடர வேண்டும். இதன் மூலமாக இன்னும் சில நாட்களில் வைரஸ் தொற்றுக்கள் பாதிப்படைந்த மாவட்டங்களில் இந்த எட்டு மாவட்டங்கள் விலகுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

மேலும் படிக்க – மனிதனை சீராக இயக்க வைக்கும் மனதை வழி நடத்தும் ரிகி ஜார்ஜ் !

கிரீன் ஜோன்

இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 80 திற்க்கு மேற்பட்ட மாவட்டங்கள் கிரீன் ஜோனுக்குக் கீழ் உள்ளது. ஆனால் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு என இரண்டு மாவட்டங்கள் இந்தப் பட்டியலில் உள்ளது. தர்மபுரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரே ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கிறது எனவே இவர்கள் குணமடையும் சமயத்தில் கிரீன் ஜோன் பட்டியலில் மேலும் இரண்டு மாவட்டங்கள் இணையும்.

ஒரு சில மாவட்டங்களின் எண்ணிக்கை முன்னும் பின்னுமாக இருக்கும் சூழ்நிலையில் மிக விரைவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. அதே சமயத்தில் மக்கள் ஊரடங்கை சரியாக பின் தொடர்ந்தால் மட்டுமே இந்த எண்ணிக்கைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும், இல்லையெனில் தமிழகம் தவிர்த்து இந்தியா முழுவதும் ரெட் ஜோனுக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இது நடக்கக் கூடாது என்று விரும்பும் மக்கள் தயவுசெய்து அரசாங்கம் சொல்வதைக் கேட்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன