சினிமா பிரபலங்கள் இதுபோன்ற சூழலில் என்ன செய்ய வேண்டும்..!

  • by
what cinema stars should do during this corona lockdown

கொரோனா வைரஸ் அச்சத்தினால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைந்திருக்கிறார்கள், அதைத் தவிர்த்து பொழுதுபோக்கும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இவர்களின் ஒரே பொழுதுபோக்காக இருப்பது இணையதள மட்டும்தான். எனவே தங்கள் செல்போன்களில் இவர்கள் பார்க்கப்படும் பொழுது போக்கு நிகழ்ச்சியால் தான் இவர்களில் நாட்கள் கழிகிறது. இதுபோல் மக்கள் நம்பிக்கை இழக்கும் சூழ்நிலை உருவாகாமல் இருப்பதற்கு இந்தியாவில் இருக்கும் சினிமா பிரபலங்கள், மக்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும்.

பிரபலங்கள் நன்கொடை

பாலிவுட் மற்றும் தென்னிந்திய சார்பாக ஏராளமான பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். இதில் பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன், ஹேமமாலினி, வருண் தவான் போன்றவர்கள் உதவினார்கள். அதேபோல் தென்னிந்திய நடிகர்களான பிரபாஸ், பவன் கல்யாண், ராம்சரன் போன்றவர்கள் உதவினார்கள். தமிழகத்தில் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்திக், விஜய் சேதுபதி போன்றவர்கள் தடுப்பு பணிகளுக்காக தங்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளார்கள். இந்திய பிரதமர் கேட்டுக்கொண்டதால் சினிமா பிரபலங்களை தவிர ஏராளமான தொழிலதிபர்கள் உதவிகளை வாரி வழங்குகிறார்கள்.

மேலும் படிக்க – ரகுல் ப்ரீத் சிங்கின் வாழ்க்கை..!

விழிப்புணர்வு அவசியம்

கொரோனா தொற்று பரவத் தொடங்கிய காலங்கள் முதல் ஏராளமான சினிமா பிரபலங்கள் கைகழுவுதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பாதுகாப்பாக இருப்பதனால் ஏற்படும் வினைவுகள் என அனைத்தையும் நமக்கு ஆரம்பத்திலேயே கூறி வந்தார்கள். ஒரு சிலர் இதை கிண்டலாக மாற்றினார்கள். இருந்தாலும் இவர்களின் சேவை இன்று ஏராளமானோருக்கு உதவியாக இருந்து வருகிறது.

பொழுதுபோக்கு

இந்தியாவில் இருக்கும் மக்களின் மனநிலையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு அவர்களுக்கு போதுமான விழிப்புணர்வு மற்றும் தங்கள் எண்ணங்களை திசை திருப்பும் பொழுதுபோக்கு அவசியமாகிறது. இது அனைத்தையும் சினிமா பிரபலங்கள் மிக எளிதில் நமக்குத் தர முடியும். எனவே அவர்களை சமூக வலைத்தளங்களில் பின் தொடரும் ரசிகர்களுக்கு, பிரபலங்கள் ஏதேனும் காணொளிகளை பதிவிட்ட கொண்டே இருக்க வேண்டும். அதே போல் எல்லோருக்கும் சரியான அறிவுரை வழங்க வேண்டும். இதன் மூலமாக ஒவ்வொரு ரசிகரும் தங்களுக்கு பிடித்த பிரபலம் சொல்வதைக் கேட்டு அதற்கேற்ப நடந்து கொள்வார்கள்.

மேலும் படிக்க – ராஜமாதா ரம்யா கிருஷ்ணாவின் வாழ்க்கை..!

அஜித், விஜய், ரஜினி காந்த், தனுஷ் போன்ற பிரபலங்கள் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கும் ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். எனவே இதை அறிந்து இது போன்ற பிரபலங்கள் மக்களுக்கு உதவியாக விழிப்புணர்வு பிரச்சாரங்களை இணையதளம் மூலமாக செய்ய வேண்டும் என்பதே சமூக அக்கறை கொண்ட பல பேரின் வேண்டுகோள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன