ஆண்களின் சிறுநீர் மிக சூடாக இருந்தால் என்ன நடக்கும்?

what causes urine of men hot? what are the risk factors?

ஆண்கள் தங்கள் பொழுதை சிறுநீர் கழிப்பது மூலமாக அவ்வப்போது கழித்து வருகிறார்கள். பெண்கள் எப்படி தங்களுக்கான இடைவெளியை எடுத்து ஒப்பனைகள் செய்கிறார்களோ அதே போல்தான் ஆண்களும் வேலை நேரங்கள் மற்றும் விளையாடும் நேரங்களில் தங்களுக்கான இடைவெளியை எடுத்து சிறுநீர் கழிப்பார்கள். ஆனால் நாம் சிறுநீர் கழிக்கும் போது அது வெப்பமாக உணர்ந்தால் அதை பற்றி நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை ஆனால் சிறுநீர் என்பது நம் உடலில் இருக்கும் மாற்றங்களில் வெளிப்பாடாகவே உள்ளது எனவே உங்கள் சிறுநீர் வெப்பமாக அல்லது நிறம் மாற்றம் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

சிறுநீர் என்பது நம் உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் ஒன்றாகும் இதன் வெப்ப நிலை நம் உடல் வெப்பத்தை ஏற்றார்போல் வெதுவெதுப்பாக இருக்கும் ஆனால் சில சமயங்களில் நாம் எதிர்பார்த்ததைவிட அதிக வெப்பத்தில் நம் சிறுநீர் வெளியேறும். இது போன்ற சமயங்களில் இது எளிதில் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

மேலும் படிக்க –தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்.!

சில சமயங்களில் நாம் குளிர்ச்சி நிறைந்த இடங்களில் இருக்கும் போது சிறுநீர் கழிக்கும் நேரங்களில் நமது சிறுநீரின் வெப்பம் அதிகரிக்கும் இது இயற்கையான சூழல் ஏற்படும் வெப்பம் என்பதால் இதனால் எந்த தீங்கும் இல்லை அதுவே சாதாரண வெப்பநிலையில் உள்ள இடத்தில் சிறுநீர் கழிக்கும் போது அது மிக வெப்பத்தை வெளியிட்டால் இது உங்கள் உடலில் இருக்கும் பிரச்சினையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.

ஆண்களுக்கு ஏற்படும் சிறுநீரகப்பை வீக்கம் அல்லது பாக்டீரியா தொற்றுக்கள் காரணமாக இது போன்ற நிலை அடிக்கடி உண்டாகிறது. இந்த பிரச்சனையில் நீங்கள் இருப்பது எப்படி உணர வேண்டும் என்றால் எப்போதெல்லாம் நீங்கள் சிறுநீர் கழிக்கிறார்களோ அப்போதெல்லாம் கழிக்கும் பகுதியில் எரிச்சலும், வலியும் உண்டாகும் மற்றும் சிறுநீர் வெளியேறுவது சில மாற்றங்கள் ஏற்படும். எனவே உங்களுக்கு காய்ச்சல், பிறப்புறுப்பில் வீக்கம் அல்லது சிறுநீர் அடர்த்தியாக வெளியேறுதல் போன்றவைகளை நீங்கள் உணர்ந்தால் இது நிச்சயம் பாக்டீரியா தொற்றுகளாகவே இருக்கவேண்டும். இது மட்டுமில்லாமல் அதிகமான துர்நாற்றம் உங்களுக்கு வாந்தி, மயக்கம், குமட்டல் மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்றவைகளை நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால் நிச்சயம் இது பாக்டீரியா தொற்று ஆகவே இருக்க வேண்டும்.

மேலும் படிக்க – மஞ்சள் பாலில் இத்தனை நன்மைகளா ?

எனவே சிறுநீர் வெப்பமாக வெளியேறுவதை எளிதில் எடுத்துக் கொள்ளாமல் அதற்கான தீர்வை உடனே காண வேண்டும். இதற்கு நீங்கள் அருகில் உள்ள மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுவது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன