ஜீன்ஸ் பேண்டில் இருக்கும் வகைகள்..!

  • by
what are types of jeans pant

ஜீன்ஸ் பேண்ட் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி அணியப்படும் இந்த ஜீன்ஸ் பேண்ட் ஒரு காலத்தில் ராணுவ வீரர்களால் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இதன் தோற்றம் மற்றும் இதன் பயன்பாடு எல்லோரையும் கவர்ந்ததினால் இதை அனைவரும் பயன்படுத்த தொடங்கினார்கள். இன்று ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் ஏராளமானோர் பயன்படுத்தப்படும் இந்த ஜீன்ஸ் பேண்டில் எத்தனை வகைகள் இருக்கிறது என்பதை காணலாம்.

லூஸ்ஃபிட் ஜீன்ஸ்

நாம் சவுகரியமாக அணியப்படுவதற்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த லூஸ்ஃபிட் ஜீன்ஸ். இதை பெரும்பாலான கல்லூரிக்கு செல்பவர்களே அணிந்து செல்கிறார்கள். உங்களுடைய இடுப்பில் இருந்து சற்று கீழே இறங்கி காற்றோட்டமாக இருக்கும் இந்த ஜீன்ஸ் பேண்ட் நீங்கள் கோடைகாலங்களில் அதிகமாக பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – காதணிகளில் இருக்கும் வகைகள்..!

ஸ்லிம்ஃபிட் ஜீன்ஸ்

உங்கள் உடலை ஒட்டி இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டது இந்த ஜீன்ஸ். இதை பென்சில் லெக்கின்ஸ் என்றும் அழைப்பார்கள். இது ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக பிடித்த ஜீன்ஸ் பேண்டாகும்.

ரெகுளர் ஃபிட் ஜீன்ஸ்

இது பொதுவாக எல்லோரும் அணியப்படும் ஜீன்ஸ் பேண்ட் களாகும். உங்கள் அளவிற்கு ஏற்றார்போல் இதை வாங்கி பயன்படுத்தலாம். இதை சாதாரணமாக நீங்கள் எந்த ஒரு அடைக்கு வேண்டுமாலும் அணியலாம். ஆனால் இந்த ரெகுலர் ஜீன்ஸ்கள் பெண்களுக்கு ஏற்றதல்ல.

ஸ்கின்னி ஃபிட்

இந்த வகை ஜீன்சும் கிட்டத்தட்ட ஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ் போன்றுதான். ஆனால் இந்த ஜீன்ஸ் பேண்டின் அடர்த்தி சற்று குறைவாக இருக்கும். உங்கள் உடலோடு உடல் ஒற்றி உங்கள் சருமத்தின் வளைவை தெளிவாக காட்டும் வகையில் உருவாக்கப்பட்டதே இந்த பேண்டுகள்.

நேரோ ஃபிட்

நேரோ ஃபிட் ஜீன்ஸ்கள் உங்கள் இடுப்பில் இருந்து கால்கள் வரை கூர்மையாக கீழே இறங்குவதால் இதை நேரோ ஃபிட் ஜீன்ஸ் என்று அழைக்கிறோம். அது பல வண்ணங்களில் ஆண் பெண் இருவருக்கும் ஏற்றார்போல் கிடைக்கிறது. இந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து இதற்கேற்ப காலணிகளை அணிந்து சென்றால் உங்களின் தோற்றம் அற்புதமாக இருக்கும்.

மேலும் படிக்க – கோடைக் காலங்களில் நாம் எந்த விதமான ஆடைகளை அணியலாம்..!

ரிலாக்ஸ் ஃபிட்

ரிலாக்ஸ் ஃப்பிட் ஜீன்கள் கோடை காலங்களில் உருவாக்கப்பட்டது. இதன் அடர்த்தி குறைந்து காற்று உள்ளே நுழையும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஜீன்ஸ் பேண்ட் செய்யப்படும் துணிகளில் செய்யாமல் அதைவிட மென்மையான துணிகள் செய்கிறார்கள். இதன் மூலமாக காற்றோட்டம் அதிகமாக இருக்கும்.

இதைத் தவிர்த்து ஏராளமான வகைகள் கொண்ட ஜீன்ஸ் பேண்ட்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. உங்களுக்கு பிடித்தமான ஜீன்ஸ் பேண்ட்களை வாங்கி உங்கள் தோற்றத்தை மேம்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன