நம்ம ஊர் நாட்டு காய்கறிகள் எவை என தெரியுமா???

  • by
what are the types of native breed vegetables

முந்தைய தலைமுறையினர் அனுபவித்த  பல விஷயங்களில் நாம் தொலைத் ஒன்று   நாட்டுக் காய்கறிகளின் நன்மையை அறியாமல் இருப்பதே! இன்றைய பெரும்பாலான குழந்தைகளுக்கு பிடித்த உணவாக இருப்பது பிரைட ரைஸ், கோபி மஞ்சூரியன். அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை இப்படி அர வேக்காடாக வேக வைத்த அரிசியும், காய்கறிகளும் சேர்த்த  ஃப்ரைடு ரைஸ ஆரோக்கிய உணவாக இருந்ததில்லை.

பெற்றோர்களின் முக்கிய கடமை 

இதற்குக் காரணம் நம் குழந்தைகளுக்கு நம்ம ஊரு நாட்டு காய்கறிகளைப் பற்றி
சொல்லிக் கொடுக்காமல் போனதுதான். கேரட் ,பீட்ரூட் நன்மை செய்வதுதான்.
ஆனால், அந்த காய்கறிகளுக்கு சலைத்தது அல்ல. நம்ம ஊர் நாட்டு காய்கறிகள்
என்ற கருத்தை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டிய கடமை
பெற்றோர்களிடம் தான் இருக்கிறது.

ப்ராக்கோலி சாப்பிட்டால் கேன்சர் வராது எனவும் மற்றும் விட்டமின்கள் அதிகம்
இருக்கிறது எனவும் தெரிந்த நம் குழந்தைகளுக்கு நம்ம ஊர் கத்திரிக்காயின்
சிறப்பு பற்றி யாரும் சொல்லித் தரவில்லை போல.

நாட்டுக் காய்கறிகளில் உள்ள நன்மைகள் பல இருக்கின்றன அவற்றில்
சிலவற்றை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

மேலும் படிக்க –கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்த 91 வயது முதியவர்..!

கத்தரிக்காய்

சில குழந்தைகளுக்கு கத்தரிக்காயை சாப்பிட்டால் அலர்ஜி வருவதைவிட
கத்தரிக்காயை பார்த்தாலே அலர்ஜி வந்துவிடுகிறது. ஏனென்றால் அவர்கள்
சாப்பிடும் துரித உணவுகளில் கத்தரிக்காயின் பயன்பாடு இல்லாமல்
இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணமே. குறைந்த கலோரியும் அதிக நார்சத்து
கொண்டுள்ள ஒரு காய்கறி தான் கத்தரி.

நம் அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டிய காய்கறிகளில்
முதலிடம் நாட்டுக் கத்திரிக்காய்க்கு தான்.

கத்தரியின் கருநீல தோலில் நிறைந்துள்ள பாலிஃபீனால்கள் ஆல் கிடைக்கும்
ஆன்டி-ஆக்ஸிடன்ட் சர்க்கரை, புற்று நோய் போன்ற பல நோய்களுக்கு
பலனளிக்கக் கூடியதாக இருக்கிறது. லோ கிளைசிமிக் இன்டெக்ஸ் உடைய
உடல் எடை குறைப்பிற்கு இந்த கத்திரிக்காய் பெரிதும் பயன்படுகிறது.

கத்தரியில் பல வகைகள் உள்ளன. பொய்யூர் கத்திரி ,கண்ணாடி கத்திரி, வரி
கத்திரி ,பச்சை கத்திரி என 500-க்கும் மேற்பட்ட வகைகள்
இருக்கின்றன.ஒவ்வொரு கத்தரிக்கும் ஒவ்வொரு மனம், குணம் உண்டு. ஆனால்
இப்பொழுது தயாரித்து வரும் மரபணு செய்யப்பட்ட பிடி கத்திரியில் இவை
எதுவும் இருப்பதில்லை.

வெண்டைக்காய்

வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்றாக போட முடியும் என நம்
பெற்றோர்கள் நமக்கு கூறியதுபோல நாம் நம் பிள்ளைகளிடம் கூற
முடிவதில்லை. கணக்கு வருகிறதோ இல்லையோ ஆனால் உடலுக்கு அதிக
குளிர்ச்சியை தருகிறது இந்த வெண்டைக்காய். வயிற்றில் உள்ள புண்ணை
நீக்குவதற்கும், சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது
வெண்டைக்காய்.

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினம் இரவில் ஒரு வெண்டைக்காய்
சாப்பிட்டால் போதும் அதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சினையை
சரிசெய்து விடுகிறது.

அவரைக்காய், கொத்தவரங்காய்

இப்போதெல்லாம் சமையலில் அரிதாக பார்க்கப்படும் காய்களில் இவை
இரண்டும் உள்ளன. அவரைக்காய் கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, விட்டமின் பி சத்தையும புரதத்தையும் அள்ளித்தருகிறது. அவரை விதை ஆண்மை குறைவு
பிரச்சனையை கூட சரி செய்கிறது.

தயிர் சாதத்திற்கு கொத்தவரங்காய் வத்தல் உடன் சேர்த்து சாப்பிட்டால்
உடலுக்கு அவ்வளவு நல்லது. ஆனால் கொத்தவரங்காயில் வாயு இருப்பதாக
நம்மில் பலரும் அதை அறவே ஒதுக்கி விடுகிறோம் .அதன் விதை பிசின் ஆன 
guar gum இன்று உலகம் முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறது. அதிலுள்ள
நார்ச்சத்துக்கள் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கப் பயன்படுகிறது.

வெள்ளைப் பூசணி ,கோவைக்காய்


பெண்களுக்கு வெள்ளைபடுதல் பிரச்சனையை உடனே சரி செய்வதுதான்
வெள்ளைப் பூசணியின் வேலை. சர்க்கரை நோயாளிகள் உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டிய உணவ காய்கறிகளில் கோவைக்காய் தான் முதலிடம் .

மேலும் படிக்க – கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் பிணத்தை எப்படி கையாள்வது..!


சுரைக்காய், பீர்க்கங்காய் 


உடல் எடை அதிகம் கொண்டவர்கள். உடலில் தேவையில்லாத நீரினை
வெளியேற்ற உதவிடும் சுரைக்காயை வாரம் ஒருமுறையாவது
எடுத்துக்கொள்ளவேண்டும். சுரைக்காய் உடல் சூட்டை தணிக்கிறது கோடை
காலங்களில் உடலுக்கு மிகவும் நல்லது.

பல கனிம உப்புக்களும் நார்ச் சத்துக்களும் நிறைந்த பீர்க்கங்காய் நலம் பயக்கும்
நாட்டு காய்கறிகளில் ஒன்றுதான். பீக்கங்காய் தோல் கூட அதிக நார்சக்தி
மிகுந்ததாக இருக்கிறது. சிறுநீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றுகளை
நீக்கவும் சிறுநீர் எரிச்சலைப் போக்க இந்த பீர்க்கங்காய் பயன்படுகிறது. மேற்கூறிய அனைத்து காய்கறிகளுமே இங்கிலீஷ் காய்கறிகளுக்கு எந்த
விதத்திலும் சளைத்தது அல்ல. இதன் சத்துக்கள் நாம் பார்த்ததை விட அதிகம்
தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன