ஆண்கள் முடி வளர பயன்படுத்தும் 10 சிறந்த எண்ணெய்கள்.!

what are the top 10 best rated hair growth oil for men

இயற்கையாகவே நம் முடி வளர்வதற்கு நம் தலையில் எண்ணெய் சுரக்கிறது ஆனால் நம் சுற்றுச் சூழல் மற்றும் நமது வாழ்க்கை முறையினால் அந்த எண்ணெய்கள் சுரக்காமல் நமது முடி ஆரோக்கியமற்றதாக மாறி சில வருடங்களிலேயே நமது முடியை இழக்க நேரிடுகிறது. இதிலிருந்து தப்பிப்பதற்காக ஆண்கள் இயற்கையாக விற்கப்படும் எண்ணெய்களை அதிக அளவில் வாங்கி பயன் படுத்துகிறார்கள் இதில் சிறந்த எண்ணெய் எது என்பதை பார்ப்போம்.

1. அர்பன் கப்ரு

இது நமது முடி வளர்ச்சியை தூண்டும் உயர்தர பொருட்களினால் செய்யப்பட்ட எண்ணெய். இது நமது கூந்தலை ஆரோக்கியம் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் நமது அன்றாட தேவையாகவே மாறி வருகிறது. இதை நீங்கள் முடிகளில் அல்லது வேர்களில் படும்படி தேய்த்தால் உங்கள் முடியின் ஆயில் அதிகரிக்கும் தவிர்த்து உங்கள் கூந்தலுக்கு அதிகமாக ஊட்டமளித்து பலவீனமான முடியை கூட பலப்படுத்தும்.

2. லிவான் ஹேர் கேன்

உங்களின் ஆரோக்கியமான முடி சில நாட்களுக்குப் பிறகு மெலிந்து விட்டதா கவலைப்படாமல் இந்த எண்ணெயை வாங்கி பயன்படுத்துங்கள். இது பலவீனமான முடியை குணப்படுத்தும் தன்மையை கொண்டது. இது பலவிதமான மருத்துவ பரிசோதனைகளை செய்து இதன் செயல் திறன்களை நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இது. உங்கள் முடி உதிர்வதற்கு எதிராக போராடும்.

மேலும் படிக்க – நைட் கீரிம் போடுங்க நாள் முழுவதும் பிரெஷா இருங்க.!

3. மென் டிசர்வு

இதில் இயற்கையாகவே இருக்கும் தாதுக்கள் மற்றும் பாரா எண்ணெய்கள் உங்கள் தலைமுடியை வலுப்படுத்தி அதில் இருக்கும் பொடுகுகள் மற்றும் அழுக்குகளைப் போக்க உதவுகிறது. இது மட்டுமல்லாமல் உங்கள் தலை வறட்சி அடைந்து அதன் மூலமாக ஏற்படும் பிளவுகளில் இருந்து காப்பாற்றுகிறது.

4. கிளிகானிக் ஆர்கானிக் ஜோஜோபா எண்ணெய்

இருப்பதிலேயே இதுதான் விலை உயர்ந்த எண்ணெய். ஆனால் இதன் விலை ஏற்றார்போல் இதன் செயலும் இருக்கும். இது நமது உச்சந்தலை, தாடி மற்றும் கூந்தல் அனைத்திற்கும் பயன்படுத்த முடியும். இதில் எந்த ஒரு ரசாயனங்களையும் சேர்க்காமல் இயற்க்கை முறையில் தயாரிக்கப்பட்டவை. இதில் ஜோஜோபா எண்ணெய் இருப்பதினால் உங்கள் கூந்தல் வலிமையோடு ஆரோக்கியமாக இருக்க இது உதவும்.

5. லீவ் ஸ்டாக் ஹேர் குரோ மாக்ஸ்

இந்த எண்ணெயை பயன்படுத்தினீர்கள் என்றால் உங்களைப் பார்த்து எல்லோரும் பொறாமைப்படும் அளவிற்கு இது உங்களுக்கு அழகு சேர்க்கும். இதில் ஏகப்பட்ட மூலிகைகளை கொண்டதாகும், இதில் தேங்காய் எண்ணெய் நன்மைகள் இருப்பதனால் உங்கள் தலை முடியின் வேர் வரை சென்று உங்கள் கூந்தலை வலுப்படுத்தும். இதைத் தவிர்த்து உங்கள் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க இது உதவுகிறது.

மேலும் படிக்க – தக்காளி ஒரு பெஸ்ட் ப்ளீச்சிங் ஏஜெண்ட்.!

6. சோல் பிளவர் கஸ்டர் ஆயில்

முடியை இழுப்பது என்பது மிக மோசமான ஒன்று ஆனால் அந்த சமயங்களில் உங்கள் கூந்தலுக்கு நீங்கள் எதை பயன்படுத்துகிறீர்கள் என்பதில் கவனம் கொள்ள வேண்டும். அதுபோன்ற நேரங்களில் நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம். இது ஆண்களின் முடிகளை சீராக்குவது மட்டுமல்லாமல் உதிர்தலை குறைத்து மிக ஆரோக்கியமான முறையில் நீண்ட கூந்தல் ஆக மாற்ற உதவுகிறது.

7. ஹேர் திக்னஸ் மாக்ஸிமைசர்

இதன் விலை 2193 ரூபாய் இவ்வளவு விலை கொடுத்து இதை நீங்கள் வாங்கினீர்கள் என்றால் நிச்சயம் இந்த வினைக்கேற்ப உங்கள் கூந்தலை வலுப்படுத்தும். இதில் இயற்கையான பொருட்களை கலந்து உங்கள் கூந்தலை வலுப்படுத்த தேவையான சக்தியை கொண்டுள்ளது. இதில் ஜோஜோபா மற்றும் கருப்பு அமனாக்கு இருப்பதினால் உங்கள் கூந்தல் வலுவடைந்து மீண்டும் கொட்டாதவாறு பார்த்துக் கொள்கிறது.

8. பியர்டோ பியர்டு

ஆண்களுக்கான முடி வளர்வதை அதிகரிக்க சிறந்த எண்ணையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது எல்லோர் மனதிலும் முதலில் வரும் எண்ணெய் இதுதான். இது நமது தாடி பராமரிப்பு மட்டுமல்லாமல் நம் தலைமுடிக்கு மற்றும் அதன் வேர்ப் பகுதிகளுக்கும் சிறந்த ஒன்றாகும். இதில் எல்லு, ரோஜா, பல வண்ண மலர்கள் மற்றும் வைட்டமின் பி, சி சத்துகளை கொண்டுள்ளது. இது உங்கள் கூந்தலை பராமரித்து மிக ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

9. பாட்சர் மென்ஸ் ஹேர் ஆயில்

இந்த எண்ணெய் வெறும் முடி சம்பந்தப்பட்ட எண்ணெய் மட்டுமல்ல நீங்கள் கூந்தலுக்கான முழு பராமரிப்பு எண்ணெயாகும். இதில் வைட்டமின் ஏ, டி, இ மற்றும் எப் இருப்பதினால் உங்கள் கூந்தல் பளபளப்பாகவும் மிக மென்மையாகவும் மாற்றுகிறது. இதை நீங்கள் உங்கள் உச்சந்தலையில் தேய்த்தால் உடனடியாக நீங்கள் ஒரு விதமான குளிர்ச்சியை உணர முடியும் அந்த அளவிற்கு இயற்கை பொருட்களினால் இதை செய்துள்ளார்கள்.

மேலும் படிக்க – கொரிய நாட்டு பெண்களின் அழகு குறிப்புகள் உங்களுக்காக

10. ஸ்கை ஆர்கானிக் கஸ்டர் ஆயில்

உங்கள் தலைமுடி மீண்டும் வளர வைப்பதற்காக நீங்கள் ஒரு உயர்ந்த ஷாம்புகள் மற்றும் இதற்காக சிகிச்சைகளை எடுத்துக் கொள்வீர்கள். இதை அனைத்தையும் ஓரமாக ஒதுக்கி விட்டு இந்த எண்ணெயை பயன்படுத்தி பாருங்கள். பயன்படுத்திய சில நாட்களிலேயே உங்கள் தலையில் ஏற்படும் மாற்றங்களை கொண்டு இதை நிரந்தரமாக உங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாக மாற்றிக் கொள்வீர்கள் ஏனென்றால் இதில் எந்த ஒரு ரசாயனம் சேர்க்காமல் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டவை. இதைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முடியில் இருக்கும் தன்மையை அப்படியே வைத்து இது ஆரோக்கியமாக மாற்றி அமைக்கிறது.

இது போன்ற ஆரோக்கியமான எண்ணெய்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் நிச்சயம் உங்கள் முடி ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும். பெண்களைவிட ஆண்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள் அப்படி இந்தப் பொருட்களை எந்த ஒரு விளம்பரத்தையும் நீங்கள் பார்த்திராத சமயங்களில் கூட இது உலக வணிகத்தின் மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. எனவே இது போன்ற சிறந்த பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கி உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன